Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவநீதம்பிள்ளையின் கணவர் கோபி பிள்ளை பயங்கரவாதியல்ல - தயான் ஜெயதிலக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
thayan_jeyathilaka-seithy-150.jpg

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கணவர் ஒரு பயங்கரவாதியல்ல என்று இலங்கையின் முன்னாள் ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளையின் கணவர் கோபி பிள்ளை ஒரு பயங்கரவாதியாவார். எனவேதான் நவநீதம்பிள்ளையும் அவரின் பாதையை பின்பற்றி விடுதலைப்புலிகளுக்கு உதவுகிறார் என்று இலங்கையின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியிருந்தார். இதன் அடிப்படையிலேயே அவர் திருகோணமலைக்கான விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவியை சந்தித்ததாகவும் ரணவக்க தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள இலங்கையின் முன்னாள் ராஜதந்திரியும் ஜெனீவாவுக்கான முன்னாள் தூதுவருமான தயான் ஜயதிலக்க, கோபி பிள்ளை தென்னாபிரிக்காவில் வெள்ளை இன நிறவெறியாளர்களுக்கு எதிராக போராடினார். அவர், வெள்ளையின வெறியாளர்களினாலேயே கைது செய்யப்பட்டார் என்றும் தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

  

எனவே அவர் பயங்கரவாதியல்ல. விடுதலைப்போராட்ட வீரர் என்று குறிப்பிட்டுள்ள தயான் ஜெயதிலக்க, அவர் தென்னாபிரிக்க தேசிய தலைவர் நெல்சன் மண்டேலேவின் தலைமையிலேயே போராடினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தியும் இந்தியாவில் அல்லாது தென்னாபிரிக்காவிலேயே தமது போராட்டத்தை ஆரம்பித்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=91925&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோபி பிள்ளை தென்னாபிரிக்காவில் வெள்ளை இன நிறவெறியாளர்களுக்கு எதிராக போராடினார். அவர், வெள்ளையின வெறியாளர்களினாலேயே கைது செய்யப்பட்டார் என்றும் தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

இதைத்தானே தமிழர் நாமும் செய்தோம் அங்கு வெள்ளை இன வெறியருக்கு எதிராக போராடினார்கள் நாங்கள் இங்கு சிங்கள இன வெறியர்களுக்கு எதிராக போராடினோம் இரண்டும் ஓரமாதிரித்தானே இருக்கு பின்னர் ஏன் அவர்களை விடுதலை வீரர்கள் என்றும் தமிழர்களாகிய எம்மை பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்றீர்கள் .    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.