Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவிபிள்ளையின் இலங்கைப் பயணமும் நியூட்டனின் மூன்றாம் விதியும்!

Featured Replies

Action-Reaction.jpgஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டென்பது அறிவியல் புரட்சிக்கு முக்கிய பங்கு வகித்த விஞ்ஞானியான நியூட்டனின் மூன்றாம் விதியாகும். இலங்கைத்தீவு முதல் சிரியா வரையான மையங்களில் வெளிப்படும் சில வினைகளுக்குக் கூட அதற்கு இணையான ஒரு பலமான எதிர்வினையை வழங்கும் வகையில் அரசியலில் கூட இந்த மூன்றாம் விதிக்கு பலம் உள்ளது.

கடந்த மாதம் சிரியாவில் அசாத் அதிகார மையம் மேற்கொண்ட நாசகாரத்தனமான இரசாயனத் தாக்குதல் வினைக்கும் அதனால் ஏற்பட்ட சுமார் 1400 பேரின் உயிரிழப்புக்கும் உரிய எதிர்வினை அமெரிக்காவின் நேரடித் தாக்குதல் என்ற வடிவத்தில் பிரயோகிக்கப்பட முனைகிறது. இவ்வாறான வினையாட்டங்களில் எந்தத் தரப்பு சரியாகச் செல்கிறது, எந்தத் தரப்பு பிழையாக நகர்கிறது என்பதற்கு அப்பால், ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டென்ற நியூட்டனின் மூன்றாம் விதியின் புரிதலே இங்கு முக்கியமானது. அந்த வகையில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளையின் கடந்த வார இலங்கைப் பயணத்துடனும் நியூட்டனின் மூன்றாம் விதியின் பிரயோகங்கள் நிழலாடுகின்றன.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக பொறுப்பேற்ற காலப்பகுதியில் இருந்து நவிபிள்ளை மேற்கொண்ட அதிக நாட்கள் கொண்ட ஒரு பயணம் என்றால் அது அவரது இலங்கைப் பயணம்தான். ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ஒருவர், அதுவும் 7 நாட்கள் ஒரு நாட்டில் தொடர்ச்சியாகத் தங்கியிருப்பதென்பது அரிதானது! அசாதாரணமானது! ஆனால் நவிபிள்ளை இவ்வாறான அசாதாரண நிலையை தனது இலங்கைப் பயணத்தில் நிறுவியிருந்தார். அத்துடன் அவர் எறிந்த வளையங்களும் புதிய ஒரு மூன்றாம் விதிக்குரிய சமன்பாட்டை, கொழும்பு-ஜெனிவா ஆகிய மையங்களுக்கு இடையில் தோற்றுவித்திருப்பதைப் பகிரங்கமாகவே காணமுடிகிறது.

நவிபிள்ளையின் இலங்கைப் பயணத்தை முன்னிறுத்திய சில விடயங்கள் இறுதியான கொழும்பு ஊடக மாநாட்டிலும் எதிரொலித்திருந்தது. குறிப்பாக, இலங்கையில் வைத்துத் தன்னைச் சந்தித்த மனித உரிமை ஆர்வலர்கள் உடனடியாகவே ஶ்ரீலங்கா புலனாய்வுத் துறையினால் துருவப்பட்டமையை மிகத் துல்லியமாகவே அறிந்துகொண்ட நவிபிள்ளை அதற்குரிய தனது எதிர்வினையாக, 'எதேச்சாதிகார ஆட்சியை நோக்கி இலங்கை செல்வதான' காட்டமான கருத்தை வெளிப்படுத்தியுமுள்ளார்.

தன்னை இங்கே வரவழைத்துவிட்டு இவ்வாறான ஒரு காரியத்தைக் கொழும்பு செய்ததை கொஞ்சமும் சகித்துக்கொள்ளக் கூடிய விடயம் அல்ல என்ற கறார்த்தன்மையை வெளிப்படுத்திய அவர், இலங்கையில் ஆட்கள் கண்காணிக்கப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் அதிகரித்து வருவதான சினத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். இதேபோல, மகிந்த & co வின் சண்டித்தனப் பங்காளி மேர்வின், தன்னைத் திருமணம் செய்ய வெளிப்படுத்திய மூன்றாந்தரக் கருத்து உட்பட்ட அவமானகரமான கருத்துக்களைத் தான் அலரி மாளிகைக்கு எடுத்துச் சென்றபோது, இந்த இலங்கைத் தீவின் தலையாரி என்ற வகையில் மகிந்த தன்னிடம் அதற்காக வருத்தம் தெரிவித்ததாகவும் நவிபிள்ளை பகிரங்கப்படுத்தியிருந்தார்.

எது எப்படியோ, கொழும்பில் வைத்து நவிபிள்ளை வெளிப்படுத்திய சொல்லாடல்கள், இலங்கைத்தீவு தொடர்பாக 'ஜெனிவா' கொண்டுள்ள நிலைப்பாட்டை ஓரளவு தெளிவாகவே உறுதி செய்கிறது. போருக்குப் பின்னரான மகிந்த & co வின் வடக்கு-கிழக்கு அபிவிருத்தி தொடர்பாகவும், கொழும்பு கொண்டுள்ள விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்தியலுக்கும் இசைவாக நவிபிள்ளையின் கருத்துக்கள் ஓரளவு இருந்தாலும் ஏனைய அனைத்து விடயங்களிலும் மகிந்த & co வின் 'பாட்டுக்கு' ஒரு எசப்பாட்டாகவே நவிபிள்ளையின் கருத்து அமைந்திருந்தது.

போரின் முடிவு சகலரையும் அணைத்துப் போகக்கூடிய ஒரு புதிய துடிப்பான களத்தை உருவாக்கும் வாய்ப்புக்களை வழங்கியபோதும், மகிந்த & co என்ற எதேச்சாதிகாரக் குதிரை 'தமிழ் மக்களை' மேலும் குப்புறத் தள்ளியது மட்டுமல்லாமல் குழியையும் பறித்தமைக்கான அடையாளங்களை வெளிப்படுத்தியது என்பதாக அவரது முடிவுரை அமைந்திருப்பது கொழும்புக்கு மேலும் சிக்கலை வழங்கக்கூடியது.

ஆயினும் வழமைபோலவே, இவ்வாறான சிக்கல்களை நேர்வழியில் எதிர்நோக்கும் திட்டங்கள் எதுவுமற்ற மகிந்த & co, நவிபிள்ளையின் கருத்துக்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்றின் வெளிப்பாடெனவும் அவர் தனது எல்லையை மீறிவிட்டதாகவும், காற்று எந்தப்பக்கம் வீசுகின்றது என்பது தங்களுக்குத் தெளிவாகத் தெரிவதாகவும் சகட்டுமேனிக்குக் கருத்துக்களை அள்ளிவீசும் கொழும்பு இன்னொரு விடயத்தையும் குறிப்பிடுகிறது. அதாவது இறுதிக்கட்டப் போரின்போது, அனைத்துலக மட்டத்திலுள்ள சிலலை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் செயற்படாததைப்போல, இனிவரும் சவால்களையும் அதேபோல எதிர்கொள்ளப் போவதாகவும் சூளுரைக்கின்றது.

ஆனால் இவ்வாறான சூளுரைப்புக்கள், சேறுபூசல்கள் ஊடாக இலங்கை தொடர்பான ஜெனிவா பொறிமுறையை கொழும்புதான் மேலும் வலுப்படுத்தி, துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் என்ற நிலையை மிகத் தெளிவாகவே உருவாக்குவதும் புலனாகிறது. கடந்த ஞாயிறன்று கிழக்கு ஒலுவில் துறைமுகத்தை திறந்துவைத்தபோது, என்னதான் மகிந்த 'ஒருதாய் வயிற்றுப் பிள்ளை' பல்லவி பாடினாலும், இது நிதர்சனம்.

குறிப்பாக நவிபிள்ளயைின் இலங்கைப் பயண நிகழ்ச்சிநிரல் முடிவடைந்ததும் பிரித்தானியா வெளியிட்ட கருத்து இங்கு முக்கியமானதும் கூட. கொழும்பில் வைத்து நவிபிள்ளை வெளியிட்ட விடயங்கள் குறித்து லண்டன் உன்னிப்பாக அவதானித்து வருவதாக குறிப்பிடும் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை முகங்களில் ஒன்றான அலிஸ்டயர் பேர்ட், மனித உரிமைகள் தொடர்பாக கொழும்பு நிறைவேற்ற வேண்டிய பல விடயங்கள் இருப்பதை நவிபிள்ளை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

ஆகமொத்தம், நவிபிள்ளைக்கு இராஜதந்திர வரையறைகளுக்கு மேல் சுதந்திரம் வழங்கினோம், எல்லா ஒத்துழைப்புக்களையும் வழங்கினோம் என நல்ல பிள்ளைத்தனம் காட்டிய அதே கொழும்பு, இப்போது நவிபிள்ளையின் கருத்துக்கள் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலொன்றின் வெளிப்பாடு என திட்டித்தீர்ப்பது இன்னும் சில நாட்களில் ஜெனிவாவில் வெளிப்படக்கூடிய அதிர்வுகளுக்குரிய முன்னோட்டம் என்பதை மறுப்பதற்கு இல்லை!

http://tamilworldtoday.com/home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.