Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா இராணுவத்துக்கு புகழாரம் சூட்டிய பிரென்சு செனற்ரர் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி தெரிவிப்பு! Top News

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
tgte-news-060913-seithy-150.jpg

இலங்கைத்தீவுக்கு பயணம் செய்திருந்த பிரென்சு செனற்சபை உறுப்பினரான Nathalie Goulet அவர்கள் , சிறிலங்காவுக்கு இராணுவத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளமை குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ்- மக்கள் பிரதிநிதிகள் கடும் அதிருப்பதியை வெளிப்படுத்தியுள்ளனர். முப்பது வருட ஆயுதப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளினால் சேதமாக்கப்பட்ட வடக்கின் பகுதிகளை சிறிலங்கா இராணுவத்தினர் துரிதமாக மீள்கட்டியெழுப்பி வருவதோடு, இலங்கையின் சமாதானத்திற்கும் அபிவிரித்திக்கும் இராணுவத்தினரின் பங்கு "வெற்றிக்கதை" (success story)என சிறிலங்கா இராணுவ மற்றும் அரச கட்டமைப்புக்கு Nathalie Goulet அவர்களினால் சூட்டப்பட்ட புகழாரம் தொடர்பிலேயே, தங்களுடைய கடும் அதிருப்பதியை குறித்த செனற் உறுப்பினருக்கு வெளிப்படுத்தியதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகளில் ஒருவரான அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

  

இலங்கைக்கு மூன்று நாள் பயணமாக சென்றிருந்த Nathalie Goulet அவர்கள், யாழ்பாணம், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இடங்களுக்கு பயணம் செய்திருந்ததோடு, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட சிறிலங்கா அரச உயர்மட்டப் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார்.

 

பயணத்தின் நிறைவில் ஊடகவியலாளர் மாநாடொன்றினை அவர்கள் நடத்தியிருந்த Nathalie Goulet அவர்கள், எதிர்வரும் நவம்பர் மாதம் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு பங்கெடுத்துக் கொள்ளும் முகமாக தனது சக ஏழு செனற் சபை உறுப்பினர்களை இலங்கைக்கு அழைத்து வர இருப்பதாகவும் , பிரென்சு பெரும் வர்த்தக பெருமுகர்களையும் பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் பங்கெடுக்க ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் செனற்சபை உறுப்பினர் Nathalie Goulet அவர்களுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கப்பிரதிநிதிகள் , ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு பிரென்சு அரசாங்கம் ஆதரவினை தெரிவித்திருந்ததோடு , மூதூரில் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட பட்டிக்கு எதிரான பிரென்னசு அமைப்பின் 17 பணியாளர்களின் படுகொலை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

இதேவேளை குறித்த செனற்சபை உறுப்பினரை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப்பிரதிநிதிகள் தங்களது அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

tgte-news-060913-seithy-001.jpg

 

 

tgte-news-060913-seithy-002.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=92199&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.