Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்‌ஷ ஒரு இனவாதி! ஜே.வி.பி

Featured Replies

Mahinda-Cartoon1.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடுமையான இனவாதியென ஜே.வி.பியின் அரசியல்சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டில் ஜே.ஆர் ஜயவர்தனவின் அரசியலமைப்பு நடைமுறையில் இல்லையெனவும், 18ஆவது அரசபைப்புத் திருத்தத்தைச் செய்து, தற்போது மகிந்த ராஜபக்‌ஷவின் அரசமைப்பே நடைமுறையில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலி நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துரைத்த கே.டி.லால்காந்த,

lala-kantha-fix.jpg''இலங்கையர்கள் முன்னைய காலத்தில் சமாதானமாக, சகவாழ்வுடன், ஒன்றுமையாக இருந்தனர். எனினும், கறுப்பு ஜூலையில் அதனை அழித்தொழித்து, இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்தினர். இவை ஈழப்போராட்டத்திற்கு காரணமாக அமைந்தன. இதற்கு அனைத்து இனவாதிகளும் பொறுப்பெற்க வேண்டும். தற்போது செயல்பட்டுவரும் புலம்பெயர் தமிழர்களும், இந்த இனவாதத்தரப்பில் ஒரு பிரிவினர். 18ஆவது அரசமைப்பில் திருத்தம் செய்து பிரச்சினைக்குத் தீர்வு தேடுவதாகக் கூறப்பட்டாலும் இதுவரை அது நடைபெறவில்லை. இந்த கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு நாட்டில் சமாதாணத்தை ஏற்படுத்த முடியாது. தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த இவர்களால் முடியாது. இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. ஒரு இனத்திற்கு மாத்திரம் விசேட வரப்பிரசாதங்களை வழங்க முடியாது. அதிகாரங்களைப் பறிக்கவும் முடியாது. விசேட அதிகாரங்கள் வடக்கிற்கு வழங்கவும் முடியாது, தெற்கிற்கு வழங்கவும் முடியாது. இவ்வாறு அதிகாரங்களை வழங்கினால் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது. காணி அதிகாரங்கள் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். யுத்தத்தின் பினன்ர் ஜே.வி.பி 17 யோசனைகளை அரசாங்கத்திற்கு முன்வைத்தது. இவ்வற்றை நடைமுறைப்படுத்தியிருந்தால் எந்தவொரு சர்வதேச அழுத்தமும் வந்திருக்காது. இவற்றைச் செய்யாததால் இன்று பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இனவாதத்தைத் தூண்டி இன்று ஆட்சியாளர்கள் ஆட்சி நடத்துகின்றனர். இந்த அரசாங்கம் இனவாத அரசாங்கம். ஜனாதிபதி ஒரு பச்சை இனவாதி. மக்களின் அனுமதியின்றி மக்களின் சொத்துக்களை தனக்குத் தேவையான வகையில் பயன்படுத்தி, கீரிடத்தை அணித்து ஆட்சி அதிகாரத்தில் இருப்பதே மகிந்த ராஜபக்‌ஷவின் நோக்கம்'' என கே.டி.லால்காந்த மேலும் தெரிவித்தார்.

http://tamilworldtoday.com/home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.