Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்பார்ப்பையும் மறுபக்கம் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள நவநீதம்பிள்ளையின் விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

4(16).jpg

அகிம்சைப்போர் அடக்கப்பட்டதன் பின் ஆயுதப்போர் ஒன்று வெடித்தது அது முடிவாக்கப்பட்ட தாக பேசப்படும் நிலையில் இராஜ தந்திரப்போர் ஒன்றுக்குள் நம்பிக்கை கொண்டி ருக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கைக் குறியீடாக பிள்ளையவர்களின் வருகை அமைந்திருக்கின்றது. 

நவநீதம்பிள்ளையவர்களின் இலங்கை விஜயமானது தமிழ் மக்கள் மத்தியிலும் அதேவேளை சிங்கள மக்கள் மத்தியிலும் வெவ்வேறு அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கின்ற நிலையில் இந்த விஜயத்தின் பிரதிபலிப்பாக சர்வதேச அளவில் அது எத்தகைய தாக்கத்தைக் கொண்டு வரப்போகின்றது என்பது பற்றியே இன்றைய நிலையில் எல்லோருடைய முணுமுணுப்பாக இருக்கின்றது.

பிள்ளையவர்களுடைய வரவு காரணமாக தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் ஒரு திசைப்பட்டதாகவும் அதேேவளை சிங்கள மக்கள் மற்றும் அவர்களின் தலைவர்களின் விமர்சனங்களும் கருத்துக்களும் இன்னுமொரு திசைப்பட்டதாகவும் காணப்படுகின்ற நிலையே அவரின் இலங்கைக்கான விஜயம் ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் மக்களின் ஆவல் என்னவென்றால் இவரது வருகைக்குப் பின்னாவது தமக்கொரு விடிவு கிடைக்கும். நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முடிவுகட்டப்பட்டும் எல்லாவற்றுக்கும் மேலாக சர்வதேச சமூகத்தின் துணையோடு, நல்லதொரு தீர்வொன்று கிடைப்பதற்குரிய சந்தர்ப்பம் உருவாக்கப்படும். 60 வருட கால கொடுந்தன்மைக்கான முடிவு சர்வதேசத்தினால் கொண்டு வரப்படும் என்பவையாகும். அகிம்சைப்போர் அடக்கப்பட்டதன் பின் ஆயுதப்போர் ஒன்று வெடித்தது அது முடிவாக்கப்பட்டதாக பேசப்படும் நிலையில் இராஜதந்திரப்போர் ஒன்றுக்குள் நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கைக் குறியீடாக பிள்ளையவர்களின் வருகை அமைந்திருக்கின்றது. இது எந்தளவு சாத்திய நிலைகளை அல்லது தமிழ் மக்களின் நம்பிக்கைகளை உண்மைப்படுத்தப் போகின்றதென்பதையெல்லாம் எழுதப்படுகின்ற பாடங்களாகவே இருக்கின்றது.

பிள்ளையவர்கள் வட கிழக்கில் மேற்கொண்ட ஆரோக்கியமான விஜயம், அவதானிப்புக்கள், கலந்துரையாடல்கள், கேட்டறிதல்கள், மிக மிக காத்திரமாக இருந்திருக்கிறது என்பது நாளாந்த செய்திகளாக தெரிந்து கொள்ளப்படுகின்ற உண்மைகளாகும்.

சந்திப்பொன்றின் போதும் மக்களுடன் கலந்துரையாடி குறை கேட்ட நிலையொவ்வொன்றிலும் அவரால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மக்களுக்கு தெம்பு தருவதாகவே இருக்கின்றது.

முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், கேப்பாப்பிலவு ஆகிய வன்னிப் பிரதேசங்களுக்குச் சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்ட ஆணையாளர் நவநீதம்பிள்ளையவர்கள் காணாமல் போனோர் விவகாரம் உட்பட யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவற்றுக்கு தீர்வைப் பெற்றுத்தர எனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன் என அந்த மக்களிடம் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் திகதி சந்திப்பின் போது குறிப்பிட்டிருந்தார்.

இதேபோலவே கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி புதன்கிழமை திருகோணமலைக்கு பிள்ளையவர்கள் விஜயம் செய்த போது சம்பூர் மக்கள் எங்களை எங்கள் சொந்த மண்ணில் குடியேற்றுங்கள் வேறு எந்த சொர்க்க புரியை ஆக்கித்தந்தாலும் அது எங்களுக்கு வேண்டாமென்று வாய்விட்டுக் கதறியுள்ளனர்

இதேவேளை நவநீதம்பிள்ளையவர்களு டைய வருகையால் சிங்களப்பெரும்பான்மை மக்களிடமும் தலைவர்களிடமும் கொண்டு வந்திருக்கும் எதிர்நிலை அதிர்வுகள் இனப்பிரச்சினைக்கான தீர்வையோ இன்னும் குறிப்பிடப்போனால் சர்வதேசமளவில் பேசித்தீர்த்துக்கொள்கின்ற நெகிழ்ச்சி நிலையையோ கொண்டு வரவில்லையென்றே கூற வேண்டும்.

மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையவர்கள் இலங்கையரசாங்கத்தை மிக வெளிப்படையாகவும் காரசாரமாகவும் விமர்சித்திருப்பதை எல்லா ஊடகங்களும் தமது தலைப்பாகவே தீட்டியுள்ளன.

சர்வதேசம் இலங்கை மீது சாட்டிவரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருந்த உள்ளக விசாரணையில் பொய்மைத்தன்மையே நிறைந்து காணப்படுகின்றது. போர் குற்றம் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகளுக்கு அப்பால் சர்வதேச விசாரணையொன்று இலங்கை மீது கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. இராணுவம் இழைத்த குற்றங்களுக்கு இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டமை எனக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை.

காணாமல் போனோர், கடத்தப்பட்டோர் தொடர்பில் இலங்கையரசு காட்டி வரும் அக்கறையீனம் என்னை கவலை கொள்ள வைக்கிறது. பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான பொது மக்கள் மத்தியில் இந்தரசு பற்றி நம்பிக்கையீனமே வளர்ந்து கொண்டிருக்கிறது. பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளமை குறித்து உரிய விசாரணைகள் அவசியம். அரசியல் கைதிகள் தொடர்பில் அரசின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையவில்லை என குற்றச்சாட்டுக்களை நவநீதம்பிள்ளை நேரடியாகவே சுமத்திய நிலையில் அரசாங்கமும் அமைச்சர்களும் கடும் விசனம் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல அரசாங்கத்தின் கடுங்கோபத்தையும் விசனத்தையும் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி மின்சார கதிரையில் தண்டனை வழங்கும் பொறிமுறையிலேயே நவநீதம்பிள்ளை செயற்படுகிறார். இதற்கு இடமளிக்க இந்த நாட்டு மக்கள் இணங்கமாட்டார்கள் அவரின் அர்த்தமற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய தேவை எமக்கில்லையென பச்சைத்தனமாகவே அமைச்சர் விமர்சித்துள்ளார்.

இதேவேளை ஜாதிக ஹெல உறுமய, பொதுபலசேன, சிங்கள ராவய போன்ற அமைப்புகளும் கட்சிகளும் நவநீதம்பிள்ளை எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை.

முள்ளிவாய்க்காலுக்கு மலர்வளையம் கொண்டு செல்வதற்கு நவநீதம்பிள்ளை முயன்ற போதே அவரின் வஞ்சகத்தனம் எமக்கு புரிந்து விட்டது என இல்லாததையும் பொல்லாததையும் கூறி தமது கோபக்கணைகளை வீசியிருக்கின்றன.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ காணாமல் போனோர் என்ற கதைக்கே இங்கு இடமில்லை. அவ்வாறு ஒரு பட்டியல் யாரிடமாவது இருக்குமானால் அதை எம்மிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் அது பற்றி பரிசீலிக்க முடியுமென முற்றாகவே மறுப்புத் தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயமானது இலங்கையரசாங்கத்தையும் அதன் சார்பானவர்களையும் சிங்கள அமைப்புக்களையும் கடுங்கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது என்பதே வெளிப்படையாகத் தெரிகின்ற விடயமாகும். இதேவேளை நவநீதம்பிள்ளையின் வருகையும் அவர் சமர்ப்பிக்க இருக்கின்ற அறிக்கையும் மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு விடிவைத் தேடித்தருமென்று அதீதமாக நம்பிக்கையை கூட்டமைப்பினர் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

இவ்வாரம் வடமராட்சியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டமொன்றிலும் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு வைபவத்திலும் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கருத்துத்தெரிவிக்கையில் பிள்ளையவர்களிடம் நாங்கள் சமர்ப்பித்திருக்கும் அறிக்கையின் பிரகாரமும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நவநீதம்பிள்ளை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள இலங்கை பற்றிய அறிக்கையின் அடிப்படையிலும் உலக நாடுகள் புதிய தீர்மானமொன்றைக் கொண்டு வரும் அது எமக்கு சாதகமாக அமையுமென கூறியிருந்தார்.

இவையெல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப்பார்க்கின்ற போது உள்ளக பொறிமுறைக்கப்பால் எமது பிரச்சினைக்கான தீர்வு கொண்டு செல்லப்பட்டிருக்கும் நிலையில் சர்வதேசத்தின் நம்பிக்கைப்பாடுகளை இன்னும் இன்னும் வளர்க்க வேண்டிய தேவை வளர்ந்து கொண்டிருப்பதையே காணக்கூடியதாகவுள்ளது. இதற்கிடையில் நீங்கள் எங்கு எந்த நாட்டைத்தேடி ஓடினாலும் இறுதியில் பிரச்சினைக்கான தீர்வை பெற எம்மிடமே வந்து சேர வேண்டும். இந்தியாவாக இருந்தாலென்ன சர்வதேச சமூகமாக இருந்தாலென்ன எல்லாம் எங்கள் கையிலேயே தங்கியுள்ளது என்ற கருத்துப்பட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்துக் கூறியிருந்தார்.

இத்தகையதொரு மாறுநிலை கொண்ட சூழ்நிலையில் நவநீதம்பிள்ளையின் வருகை அவரின் ஆய்வு அறிக்கை அவர் எதிர்வரும் மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப் போகும் அறிக்கையென்பவையெல்லாம் இலங்கையரசாங்கத்துக்கு கடிவாளம் இட முடியுமா தமிழ் மக்களுக்குரிய தீர்வை வழங்குவதற்குரிய பொறிமுறையைக் கொண்டு வருமா என்பதுவே இன்றைய நிலையிலுள்ள கனதியான கேள்விகளாகவுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அடையாளமிட்டுக் காட்டப்பட்ட எந்த விடயத்தின் மீதும் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. அதை நடைமுறைப்படுத்துவதில் இழுத்தடிப்பு செய்து வருகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்ற நிலையிலேயே போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை இல்லையாயின் சர்வதேச விசாரணையைத்தவிர வேறு வழியில்லையென்ற இறுக்கமான முடிச்சொன்றை இலங்கையரசாங்கத்தின் மீது இறுக்கிக் கொண்டிருக்கிறது சர்வதேச மனித உரிமை ஆணையகம்.

இவ்வாறான நிலைமைகள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வில் எத்தகைய இழுத்தடிப்புக்களையும் கால தாமதங்களையும் முட்டுக்கட்டைகளையும் கொண்டு வரப்போகின்றன என்ற கேள்வியும் எழுகின்றது. வட மாகாண சபைத்தேர்தல் நவநீதம்பிள்ளையின் வருகை காரணமாக களைகட்டி நிற்கின்றது. இந்த தேர்தல் மூலம் சர்வதேசத்துக்கு ஒரு செய்தியைச் சொல்லக்கூடிய வாய்ப்பு நிலையொன்று உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது நல்லதொரு எதிர்பார்ப்பாக இருக்கின்ற போதிலும் 30 வருட கால யுத்தம் காரணமாக தேக்கநிலை அடைந்திருக்கும் தமிழ் மக்களுடைய நம்பிக்கைக்கு விடிவொன்று தேவைப்படுகின்ற நிலையிலேயே தமிழ்ச்சமூகம் நின்று கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படையான உண்மை.

இன்னும் சொந்த மண்ணுக்குப் போக முடியாமல் ஏங்கிக் கொண்டிருப்போர் தமது வாழ்விடங்களைத் தொலைத்தோர் காணாமல் போன உறவுகளைத் தேடி அலையும் உறவுக்கொடிகள் கடத்தப்பட்டோரின் விபரத்தை அறிய முடியாமல் தினம் தினம் புலம்பிக் கொண்டிருக்கும் சொந்த பந்தங்கள், போர்முனைத் தரிசனங்களில் இருந்து விடுபட்டு மறுவாழ்வு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள், இளம் வயதிலும் இழக்கக்கூடாத நேரத்திலும் தமது கணவன்மாரை இழந்து விட்டு வாழ்வாதாரமற்ற நிலையில் ஏங்கி இடிவிழுந்து போய்க்கிடக்கும் விதவைகள் என எத்தனையோ பிரிவினர் இன்று வேண்டி நிற்பது அமைதியான வாழ்வும் அர்த்தபுஷ்டியான தீர்வுமாகும்.

இவற்றை வழங்கி விடக்கூடாது என்ற நிலையில் விடாக்கண்டனாகவும் கொடாக்கண்டனாகவும் இருந்து வருகிறது இலங்கையரசு. இவற்றுக்கு மத்தியில் தான் நவநீதம்பிள்ளையவர்களின் வருகை நடந்திருக்கிறது.

சர்வதேச முரண்பாட்டை ஊட்டக்கூடிய விதத்தில் இலங்கையரசாங்கத்தின் செயற்பாடுகளும் அதுசார்ந்த தலைவர்களின் விமர்சனங்களும் அமைந்து காணப்படுகின்ற நிலையில் ஒரு உடன்பாடான நிலை ஏற்படக்கூடிய வாய்ப்பு விலத்திக் கொண்டு போகின்ற நிலையே இன்றைய சூழலில் தர்மசங்கடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இலங்கையரசாங்கமானது தமிழ் மக்களுடைய நீண்ட காலப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டுமென உதட்டளவில் சொல்லி வருகின்றதே தவிர செயல்வடிவில் எந்தவித முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளாமல் தெரிவுக்குழுவென்றும், பேச்சுவார்த்தை மேசையென்றும் ஆணைக்குழுவென்றும் தடைதாண்டும் விளையாட்டுக்களை நடத்தி வருகின்றதே தவிர தீர்க்கமான முடிவொன்றை எடுக்கும் எந்த வாய்ப்பு நிலைகளையும் அது உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரியவில்லை.

யுத்தம் முடிவடைந்து ஆறுமாத காலத்துக்குள் அர்த்தபுஷ்டியான தீர்வொன்று கொண்டு வரப்படும். 13க்கு மேல் சென்று அதிகாரங்கள் வழங்கப்படுமென உறுதியிட்டுக் கூறிவந்த ஜனாதிபதியவர்கள் இன்று நான்கு வருடங்களுக்கு மேலாகியும் அவைபற்றிய எந்த அக்கறையும் காட்டாமையும் நல்லிணக்கத்துக்கான சாத்திய நிலைகளை உருவாக்கிக் கொள்ளாமையுமே சர்வதேச அளவில் நெருக்கடி நிலையொன்றை அவருக்கு இன்று உருவாக்கியிருக்கின்றது. எவ்வளவு தான் வீராப்பு பேசினாலும் இந்த சர்வதேச நெருக்குவாரத்தை அவர் உதாசீனம் செய்து கொள்ள முடியாத அளவுக்கு இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதேயுண்மை.

எது எப்படி இருந்த போதிலும் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயமானது தமிழர் தரப்பில் சாதகநிலையொன்றை உருவாக்கியிருக்கிறது. மறுதரப்பில் அவரின் வருகை எதிர்கணிய நிலையொன்றை உருவாக்கி விட்டிருக்கிறது என்ற கருத்து நிலைப்பாட்டைத் தந்திருப்பதாகவே கொள்ள வேண்டியுள்ளது. இதில் தமிழர்தரப்பில் அவர்களின் அபிலாசைகளையும் நோக்கையும் அமைவதற்குரிய வழிமுறையொன்றை தேடித்தந்து விடும் என்ற எண்ணப்பாடுகள் வலுவூன்றி நிற்கின்ற போதும் பிள்ளையவர்கள் சமர்ப்பிக்கப்போகின்ற அறிக்கை எந்தவிதமான சாதக நிலையை உருவாக்கக்கூடியதாக இருக்கப்போகின்றது என்பது பற்றி அதீத எதிர்பார்ப்புக்களைக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் மெல்ல மெல்ல துளிர்விடும் நிலையே காணப்படுகின்றது.

காரணம் இந்த அறிக்கை சமர்ப்பிப்பில் பிள்ளையவர்கள் நியாயத்தன்மையை கடைப்பிடிப்பவராக இருந்தாலும் தீர்மானத்தை எடுக்க வேண்டிய நாடுகள் பட்டியலில் இந்தியாவென்னும் வல்லரசு முதன்மை பெற்று இருக்கின்றதைக் காணுகின்றோம்.

கடந்த 2012 ஆம், 2013 ஆம் ஆண்டுகளில் மனித உரிமைப்பேரவை மாநாட்டில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கெதிரான தீர்மானத்தை நீர்த்துப்போகும் தன்மையில் ஆக்கிக்கொண்ட பெருமை இந்திய வல்லரசுக்கு இருந்துள்ளது என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய வல்லரசு ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றது என்ற பின்னணி இதுவரை கண்டுபிடிக்க முடியாத சூட்டுசுமமாகவே இருக்கின்றது.

ஒருவேளை எதிர்வரும் மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள மனித உரிமை ஆணையாளர் நாயகத்தின் அறிக்கை மீது செல்வாக்கு செலுத்த முடியாத நிலையொன்று இந்திய அரசாங்கத்துக்கு எதிர்வரும் காலத்தில் இல்லாமல் போகலாம் அல்லது தவிர்க்கப்படலாம் அதற்குரிய காரணம் தமிழ் நாட்டின் அதிர்வலைகள் ஒரு புறமாகவும் மறுபுறம் வரப்போகின்ற பொதுத்தேர்தல் ஆளுகின்ற மத்தியரசுக்கு நிலையற்ற தன்மையொன்றையோ அல்லது வெற்றி வாய்ப்பு நிலையையோ சங்கடப்படுத்தும் நிலையொன்றை உருவாக்கி விடலாமென்ற பயப்பாட்டின் காரணமாக இந்திய மத்தியரசு தன்னை சுதாகரித்துக் கொள்ளலாம்.

ஏனெனில் நடைபெறப் போகின்ற இந்தியப் பொதுத் தேர்தலில் கூட்டரசாங்கமொன்று உருவாகும் நிலையில் தமிழகத்தின் ஆதரவு நிலை தேவைப்படலாமென்ற நிலை அதற்குப் பின்னணியாக இருக்கலாம்.

 

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9031:2013-09-07-06-01-10&catid=1:latest-news&Itemid=18

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவென்னும் வல்லரசு முதன்மை பெற்று இருக்கின்றதைக் காணுகின்றோம்.
வல்லரசு .......வலசு அரசு இந்தியா....:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.