Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவிப்பிள்ளையும் தமிழர்களும் - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவிப்பிள்ளையும் தமிழர்களும் - நிலாந்தன்

08 செப்டம்பர் 2013

Navi%20pillai%20SA_CI.jpg

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான தமிழர்களின் கூட்டு உளவியலின் பெரும் போக்கெனப்படுவது ஒருவித கொதி நிலையிலேயே காணப்படுகின்றது. கொதிப்பான இக்கூட்டு உளவியலானது பின்வரும் மூலக் கூறுகளின் சேர்க்கையாகக் காணப்படுகின்றது. 

01. பேரழிவுக்கும் பெருந்தோல்விக்கும் பின்னரான கூட்டுக் காயங்களும் கூட்டு மனவடுக்களும்.

02. தோல்வியினால் ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமும் பழிவாங்கும் உணர்ச்சியும்

03. அப்படிப் பழிவாங்க முடியாதபோது ஏற்படும் அதாவது பிரயோகிக்கப்பட்டவியலாத கோபத்தின் பாற்பட்ட சலிப்பு, விரக்தி, சுயபச்சாதாபம், கையாலாகாத்தனம்.

04. தோல்விக்குத் தங்களுடைய சுயநலமும் கோழைத்தனமும் ஒரு காரணம் என்பதால் ஏற்படும் குற்றவுணர்ச்சியாலுண்டாகிய தீவிர மனோநிலை.

05. தோல்வியை ஏற்றுக்கொள்ளத் தயாரற்றிருப்பது.

06. அடுத்த கட்டம் எது என்பது குறித்த தெளிவின்மையும் நிச்சயமின்மையும்

போன்ற இன்னோரன்ன உளவியல் மூலக் கூறுகளின் மிகச் சிக்கலான ஒரு கலவையாக ஈழத்தமிழர்களின் கூட்டு உளவியல் காணப்படுகின்றது.

இக்கட்டுரையானது பெரும்போக்கான ஒரு உளவியலைப் பற்றியே பேசுகிறது. இதில் இருக்கக்கூடிய உப கூறுகளைப் பற்றியும் நுண் கூறுகளைப் பற்றியும் இக்கட்டுரை பேச முற்படவில்லை. பெரும்போக்கிற்குள்ளும் உபபோக்குகள் உண்டு. உதாராணமாக நாலாம் கட்ட ஈழப் போரின்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிற்கு வந்தவர்களின் உளவியலுக்கும், ஏற்கனவே, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வசித்தவர்களின் உளவியலுக்கும் இடையில் துலக்கமான வேறுபாடுகள் உண்டு. அதுபோலவே இன்று வரை மீளக்குடியமராத உயர் பாதுகாப்பு வலயங்களைச் சேர்ந்த மக்களுடைய உளவியல் முன்சொல்லப்பட்டவர்களின் உளவியலிருந்து வேறானது. அது ஒரு குடியமராத அல்லது வேர் கொள்ளாத (UNsettled)) தரப்பினரின் உளவியலாகும். அதிலும் குறிப்பாக, 1980 களிலும் அதற்குப் பின்னரும் உயர்பாதுகாப்பு வலயங்கள் காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் உளவியலுக்கும் நாலாங்கட்ட ஈழப்போரில் இடம்பெயர்ந்த சம்பூர் மக்களின் உளவியலுக்கும் இடையில் துலக்கமான வேறுபாடுகள் உண்டு.

இதுதவிர, புலம்பெயர்ந்த தமிழர்களிற்கும், நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் இடையிலும் துலக்கமான உளவியல் வேறுபாடுகள் உண்டு. 

உயிரச்சம், உணவு, உடை, உறைவிடம் பொறுத்து ஓரளவுக்கேனும் பாதுகாப்பான அல்லது உத்தரவாதமான அல்லது நிச்சயத்தன்மைகள் அதிகமுடைய அல்லது நிலையாக வேர் கொண்ட ஒரு வாழ்க்கை முறையை கொண்டவர்களிற்கும் (Settled) வேர் கொள்ளாத (Unsettled)   ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டவர்களிற்கும் இடையில் காணப்படும் உளவியல் வேறுபாடுகள் இவையெனலாம்.

இத்தகைய உப போக்குகள் மற்றும் நுண்கூறுகளைக் கொண்டிருந்த போதிலும் மே 19இற்குப் பின்னரான கூட்டுத் தமிழ் உளவியல் எனப்படுவது அதன் பெரும்போக்கைக் கருதிக் கூறுமிடத்து அதிகமதிகம் கொந்தளிப்பானதுதான். இத்தகைய கொந்தளிப்பான மிகச் சிக்கலான உளவியலின் விளைவாக தமிழர்கள் எதையும் அதீத உணர்வெழுச்சியோடு அணுகும் ஒரு போக்கு அதிகரித்து வருகின்றது.

உடல் முழுவதும் புண்ணாயிருக்கும் ஒருவரை எங்கு தொட்டாலும் அவர் கத்துவார். அப்படித்தான் இப்பொழுது ஈழத்தமிழர்களும் எதற்கெடுத்தாலும் எல்லாரையும் சந்தேகித்து இனத்துக்குள்ளும், இனத்துக்கு வெளியிலும் எதிரிகளையும், துரோகிகளையும் கண்டுபிடிக்கத் துடிக்கும் ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. மே 18 இற்குப் பின்னரான ஈழத்தமிழர்களில் பெரும்பகுதியினர் கூடுதலாக உணர்ச்சி வசப்படுகின்றார்கள். குறைந்தளவே சிந்திக்கின்றார்கள்.

இத்தகைய உணர்ச்சிப் பெருக்கான ஓர் உளவியல் சூழலில் வெளியாருக்காகக் காத்திருக்கும் ஓர் அரசியலானது முன்னெப்பொழுதையும் விட அதிகரித்த அளவில் அரங்கின் முன்னணிக்கு வந்துவிட்டது. 

ஈழத்தமிழர்கள் வெளியாருக்காகக் காத்திருப்பது என்பது விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியோடு தோன்றியதொரு போக்கு அல்ல. அது ஈழத்தமிழர்களின் நவீன அரசியலில் ஒரு வேர்நிலைக் குணாம்சமாகவே காணப்படுகின்றது. பெரிய தமிழ் நாட்டைத் தமது பின்தளமாகவும் பேரம் பேசும் சக்தியாகவும் கருதுவதிலிருந்து இது தொடங்குகிறது. பின்னாளில் புலப்பெயர்ச்சியோடு தமிழ் டயஸ்பொறாவானது, மற்றொரு பின்தளமாகவும், பேரம்பேசும் சக்தியாகவும் எழுச்சிபெற்றதோடு வெளியாருக்காகக் காத்திருப்பது என்பது மேற்குக்காகவும் காத்திருப்பது என்ற வளர்ச்சியைப் பெற்றது. 

குறிப்பாக, புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியோடு இது முழுக்க முழுக்க வெளியாரிடம் தமது நம்பிக்கைகளை முதலீடு செய்துவிட்டு அவர்களுடைய ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு சொல்லையும் எதிர்பார்ப்போடு உற்றுக் கவனித்துக் காத்திருக்கும் ஒரு போக்காக பெருவளர்ச்சி பெற்றுவிட்டது. 

கடந்த நான்காண்டுகளாக கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட மேற்படி காத்திருப்பை வளர்த்தெடுக்கும் ஓர் அரசியலைத்தான் செய்து வருகின்றன. இப்பொழுதும் மாகாண சபைத் தேர்தலில் தாம் ஏன் பங்குபற்றுகிறோம் என்பதற்கு கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் கூறும் முக்கிய காரணங்களில் அதுவும் ஒன்றுதான். அதாவது, இந்தியா எங்களைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றுவிட்டு வருமாறு கூறியது என்பதே அது.

இவ்விதமாக வெளியாருக்காகக் காத்திருக்கும் ஓர் அரசியல் சூழலில்தான் நவிப்பிள்ளை அம்மையாரின் வருகையும் நிகழ்ந்தது. 

சிங்களவர்களைப் பொறுத்த வரை தமது போர் நாயகர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முற்படும் மேற்கின் பிரதிநிதி அவர், அதேசமயம் தமிழர்களைப் பொறுத்த வரை அவர் ஒரு குறைகேள் அதிகாரி. எனவே இரு வேறு உணர்ச்சிக்கொதிப்பான உளவியல்களால் இரண்டாகப் பிளவுண்டிருந்த ஒரு சிறு தீவிற்கே அம்மையார் வந்துபோயிருக்கிறார்.

பிறப்பால் அவர் ஒரு தமிழர் என்பதால் அவர் மீதான தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் பெருகிச் சென்றன. அவருடைய ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு அசைவும் உற்றுக் கவனிக்கப்பட்டன. அவர் அரசாங்கத்திற்கு எதிராகச் சொன்ன வசனங்கள் தலைப்புச் செய்திகளாயின. அதேசமயம் அவர் விடுதலைப்புலிகளிற்கு எதிராகச் சொன்ன வசனங்கள் ஒருபகுதித் தமிழர்களை விசனத்திற்குள்ளாக்கின. அவருடைய உத்தியோகபூர்வ அறிக்கையில் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராகக் கூறிய கருத்துக்களை விடவும் அரசாங்கத்திற்கு எதிராகக் கூறிய கருத்துக்களே அதிகமானவை. எனினும் ஒரு பகுதித் தமிழர்களால் அவர் கூறிய சில வசனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தனது தமிழ் அடையாளம் காரணமாக சிங்களக் கடுந்தேசியவாதிகள் தன்னை ஒரு பக்கச் சார்பான தூதுவராக கருதிவிடக்கூடாது என்பதற்காகவே அவர் அவ்விதம் கூறியதாகவும் ஒரு வியாக்கியானம் உண்டு.

ஆனால், நவிப்பிள்ளையின் கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல. அவர் மேற்கு நாடுகளின் கொள்கைத் தீர்மானங்களை அதிகம் பிரதிபலிக்கும் ஒரு தூதுவர்தான். விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டபோது அதில் தலையிடாதிருந்த ஐ.நா.வின் பிரதிநிதிதான் அவர். நாலாங்கட்ட ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் ஐ.நா. தலையிடாதிருந்தமை என்பது முழுக்க முழுக்க ஒரு அரசியல் கொள்கைத் தீர்மானம்தான். அதில் பொதுசனங்களிற்குச் சேதம் உண்டாகும் என்பது ஐ.நாவுக்கு நன்கு தெரியும். நீரை வடித்து மீனைப் பிடிப்பது என்பது இரத்தம் சிந்தும் ஒரு படை நடவடிக்கைதான் என்பதை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமே அது. மேலும் அப்படை நடவடிக்கையின்போது என்ன நடந்தது என்பதை அவர்களுடைய சக்திமிக்க சற்றலைற் கமராக்கள் அவர்களிற்கு உடனுக்குடன் காட்டியிருந்தன. எனவே, ஐ.நாவுக்கோ அல்லது மேற்கு நாடுகளிற்கோ இந்தியாவுக்கோ தெரியாமல் எதுவும் நடக்கவில்லை. அப்பொழுது அவையனைத்தும் தவிர்க்கப்படவியலாத பக்கச்சேதங்கள் (Collateral Damage)  ஆகவே பார்க்கப்பட்டன.

 

இலங்கை அரசாங்கமானது மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் மேலாண்மையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஒரு வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றத் தவறியபோதே கொலாற்றரல் டமேச் ஆனது போர்க் குற்றமாக மாறலாம் எனும் ஒரு நிலை தோன்றியது. இங்கு தமிழர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு. பக்கச் சேதங்கள் போர்க்குற்றங்களாக மாற்றப்பட்டலாம் என்று ஒரு தோற்றம் தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இன்று வரையிலும் போர்க்குற்றம், இனப்படுகொலை போன்ற சொற்கள் ஐ.நா. மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் உத்தியோகபூர்வ ஆவணங்களில் முதன்மை ஸ்தானங்களில் காணப்படுவதில்லை. ஏன் நவிப்பிள்ளையின் சொல்லாடல்களிற்குள்ளும் இல்லைத்தான். 

அதாவது, அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஓரு கருவியாகவே போர்க்குற்றம் பற்றி பிரஸ்தாபிக்கப்படுகிறது. அதுகூட மேற்கத்தைய ஊடகப் பரப்பில்தான் அதிகம் பிரயோகிக்கப்படுகிறது. வெளியுறவுக் கொள்கைத் தீர்மானங்களிலும் இல்லை. அரசுகளின் உத்தியோகபூர்வ அறிக்கைகளிலும் இல்லை. எனவே, அரசாங்கம் மேற்கு நாடுகளையும் இந்தியாவையும் மகிழ்விக்கும் ஒரு வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுமாயிருந்தால் கடைசிக் கட்டத்தில் நடந்தவற்றை பக்கச் சேதமாகக் கருதி பொருட்படுத்தாதுவிடும் ஆபத்தும் உண்டு. 

மேலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட பின்னரும் அநேகமான மேற்கத்தைய நாடுகளிலும், இந்தியாவிலும் அந்த அமைப்பின் மீதான தடை நீக்கப்படவில்லை என்பதை தமிழர்கள் உற்றுக் கவனிக்க வேண்டும். 

இது தவிர மற்றொரு குரூரமான அனைத்துலக யதார்த்தமும் உண்டு. ஐ.நா.வின் உள்ளக விசாரணைக்குழுவின் அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ''ஐ.நா.வின் மிக மூத்த மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட உத்தியோகஸ்தர்களுக்கு ஐ.நா.வின் பாதுகாப்பு சபையின் நடவடிக்கைகளிலோ அல்லது ஐ.நா.வின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதிலோ, மேற்பார்வை செய்வதிலோ அல்லது கவனியாது விடுவதிலோ நேரடியான வகிபாகம் எதுவும் இல்லை'

இத்தகையதொரு நடைமுறை யதார்த்தத்தின் பின்புலத்தில் வைத்தே நவிப்பிள்ளையின் வருகையை மதிப்பிட வேண்டும். தமிழர்களில் அநேகர் அவர் ஓர் தமிழர் என்பதால் அவரைத் தமக்கு மிக நெருக்கமானவராக உணர்கிறார்கள். அவர் வேரில் தமிழர்தான். ஆனால், வளர்ப்பால் தென்னாபிரிக்கக் கறுப்பர். அதேசமயம் படிப்பால் ஒரு மேற்கத்தேயர். 

நிறவெறி அரசுக்கு எதிராக ஒரு செயற்பாட்டாளராக அவர் வீரமாகப் போராடிய போது அவருடைய மேற்கத்தைய படிப்பும், அதனால் பெற்ற ஆளுமை உருவாக்கமும் அங்கீகாரமும்தான். அவருக்குக் கேடயங்களாகத் திகழ்ந்தன. எனவே, அவரை ஒரு மேற்கு மயப்பட்ட தென்னாபிரிக்கக் தமிழ்ப் பெண் என்பதே சரி. இப்படிப் பார்த்தால் அவர் ஒரு அபூர்வமான கலவை. ஆசியாவும், ஆபிரிக்காவும் மேற்கு நாடுகளும் சேர்ந்துருவாக்கிய மூன்று கண்டங்களின்  நூதனமான ஒரு கலவை அவர். இலங்கையில் அவர் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது அச்சந்திப்பில் பங்குபற்றிய ஒரு தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி கூறினார்... அவருடைய தோற்றம், நடையுடை, பாவனை எல்லாவற்றிலும் ஒரு செயற்பாட்டாளுமைக்குரிய வீச்சையும், ஓர்மத்தையும் காண முடிந்ததாகவும் அவருக்குள் ஒரு நெருப்பு எரிவதை உணர முடிந்தாகவும்....

நவிப்பிள்ளையின் இந்த அம்சம்தான் தமிழர்களிற்கு அதிகம் சாதகமானது. அவர் தன்னை ஒரு தமிழராகப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று தமிழர்கள் எதிர்பார்க்க முடியாது. அவர் ஒரு அனைத்துலக மன்றத்தின் பிரதிநிதி. அனைத்துலக இராஜியச் சூதாட்டத்தின் ஒரு கருவியாகவே இங்கு வந்துபோனவர். ஆனால், அவருக்குள் கனன்றெரியும் நெருப்புக் காரணமாக அவர் அனைத்துலகின் அபிப்பிராயங்களை உருவாக்க முடியும். அது அதிகமதிகம் நீதியின் பாற்பட்ட ஓர் அபிப்பிராய உருவாக்கமாகவே இருக்கும். மாறாக ஓர் இனத்துக்குச் சாய்வான அபிப்பிராயமாக அல்ல. தமிழர்கள் தமது தரப்பில் நீதி உண்டு என்று நம்புமிடத்து நவிப்பிள்ளையை கொந்தளிப்பான ஓர் உளவியலுக்கூடாக அணுகத் தேவையில்லை.

பூகோள மயப்பப்பட்ட இவ்வுலகில் எல்லாமே அரசியலாகிவிட்டன. மனித உரிமைகளும் அரசியல்தான். போர்க் குற்றங்களும் அரசியல்தான். சூழலியலும் அரசியல்தான். இக்குரூரமான அரசியலை தமிழர்கள் உள்வாங்க வேண்டும். அரசுக்கும் - அரசுக்கும் இடையிலான நலன் சார் சூதாட்டத்தில் முதலில் பலியிடப்படுபவை மனித உரிமைகள் தான். எனவே, தூய நீதிக்கும், குரூரமான இராஜிய நடைமுறைக்கும் இடையில் தமக்கு அதிகபட்சம் சாதகமான ஓரு சமநிலைப் புள்ளியைக் கண்டுபிடிக்க வேண்டியது தமிழர்கள் தான். 

வெளியாருக்காகக் காத்திருப்பது அல்லது வெளியாரிடம் முறையிடுவது அல்லது வெளியாரிடம் அளவுக்கு மிஞ்சி எதிர்பார்ப்பது என்பதெல்லாம் ஒரு எல்லைக்கும் அப்பால் சொந்தப் பலத்தில் நம்பிக்கையிழந்த அரசியல் தான். வீழ்ச்சிக்குப் பின்னரான ஒரு சமூகத்தின் கூட்டு உளவியலைக் கையாளவல்ல தீர்க்க தரிசனமும், ஜனவசியமும் மிக்க பேராளுமைகள் இல்லாத வெற்றிடத்திலிருந்தே இது ஒரு பெரும்போக்காக மேலெழுகின்றது. ஒரு கட்டத்தில் இது வெளியாரைக் கையாள்வதற்குப் பதிலாக வெளியாரால் கையாளப்படும் ஒரு விபரீத வளர்ச்சியைப் பெறுகிறது.

எனவே, பேராளுமைகளை உருவாக்குவது பற்றி தமிழர்கள் சிந்திக்க வேணடும். அல்லது இப்போதிருப்பவர்கள் யாராவது பேராளுமைகளாக உருவாகுவது பற்றிச் சிந்திக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் குறைந்த பட்சம் அத்தகைய பேராளுமைகள் ஏன் உருவாகவில்லை என்ற கேள்விக்காவது விடை காண விளையவேண்டும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96237/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து  கிட்டிப்புள் விளையாட்டோ அல்லது கிளித்தட்டு விளையாட்டோ  அல்ல.
ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டம்.

இங்கே வெற்றி என்றும் தோல்வி என்றும் மக்களின் போராட்டத்தைக்

கொச்சைப்படுத்தும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
 

ஒரு இனத்தின் விடுதலை என்பது முதலில் அன்னியர்களிடமிருந்து தனது சுதந்திரத்தை மீட்பதும்
பின்னர் தன் இனத்திற்குள்ளேயே இருக்கும் வர்க்க பொருளாதார ரீதியிலான விடுதலையுமே ஆகும்

 

ஆகவே ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு தோல்வி என்பது ஒருபோதும் கிடைக்காது. விடுதலையை நோக்கி அந்த இனம் இன்னும் தன்னை மெருகூட்டிக்கொள்ளும்
 

  • கருத்துக்கள உறவுகள்

"02. தோல்வியினால் ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமும் பழிவாங்கும் உணர்ச்சியும்"

 

 

ஈழவிடுதலைப் போராட்டத்தில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மை.

எத்தனையோ பாரிய சக்திகளுடன் மோதும் வரைக்கும் ஈழவிடுதலைப் போராட்டத்தை

முன்னகர்த்தியதே பெரும்  வெற்றிதான்.

 

ஆனால்   அதையே தோல்வி என்பதும் 
அதனால் அவமானம் ஏற்பட்டது என்பதும்

போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதைத் தடுக்கும்  முயற்சியாகும்.

 

அத்துடன் தோற்றவர்கள் என்ற மனப்பான்மையை மக்களிடையே விதைத்து அவர்களின் போராட்ட மனப்பான்மையைச் சிதைக்கும் முயற்சியுமாகும்.

எந்த வகையிலான அடக்குமுறைகளைப் பிரயோகித்தாலும்
ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு முடிவு என்பது இல்லை.

இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.அது  இறுதிவரையும்  தொடரும்

இந்தியா எங்களைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றுவிட்டு வருமாறு கூறியது என்பதே அது.

 

அரசியல் முதிர்ச்சி இல்லாத இந்த ஆராய்வு மேற்காட்டிய வசனத்தை சுற்றி சுழல்கிறது.  நிலாந்தன் 20கும் மேலான நாடுகள் சேர்ந்து புலிகளை தோற்கடிக்க வைத்ததையும், ஏற்கத்தக்க பாணியில் அரசு சண்டையை எடுத்து செல்லவில்லை என்பதையும் ஆராச்சிக்குள் சேர்க்கவில்லை. பல பல பகுதிகாளாக மக்களை பிரித்து அவர்களின் மன நிலை பற்றி ஆராய வெளிக்கிடும்போது நிலாந்தான் பச்சை தண்ணீரில் பலகாரம் சுட முயல்வது அப்பட்டமாகிறது. அப்படி எல்லாம் மன நிலை இருப்பத்தாக கற்பனை செய்யும் நிலாந்தன் தாயகத்தில் அடக்கு முறையால் அடங்கி போய் இருக்கும் மக்களை, மன நிலையில் வேறுபட்டவர்களாக சித்தரிக்கிறார். ஆரம்பத்தில் எதையும் வெளியே கதைக்க பயந்த கூட்டமைப்பு மிகவும் வெளிப்படையான அபிலாசைகள் கொண்ட விஞ்ஞாபனத்தை வெளிவிட்டிருக்கிறது. இதை பற்றி முழுவதாக மறந்த நிலாந்தன் மக்கள் சம்பந்தரின் மேற்படி வசனத்தின் பிரதி நிதிகள் மட்டுமே என்று வாதாடுகிறார். மொத்ததில் நிலாந்தன், அந்த வசனத்தை வெளியே போட்டு தான் எங்கிருந்து வருகிறார் என்பதை காட்டும்வரை, வைத்தவை எல்லாம் கற்பனையே. எதுவும் உண்மை இல்லாதவை.

 

மக்களும், தமிழ் கட்சிகளும், புலம் பெயர் தமிழரும் கண்டுபிடித்த புதிய பெயர்தான் ராஜதந்திர போராட்டம். இந்த சொல் நிலாந்தனுக்கு அன்னியமானதாக இருக்கிறது.  பழக்கமில்லாததாக காணப்படுகிறது. இதனால் அவர் சர்வதேச விருதுக்காக தமிழ் மக்கள் காத்திருப்பதாக காண்கிறார். அரசு விட்ட மிரட்டல்களை மீறி பலரும் நடப்பதால் பலதடவை கூட்டமைப்பு பா.உ.கள் நாலாம் மாடி போகிறார்கள். அவர்களே சொல்கிறார்கள் தாங்கள் ஜனாதிபதி மாளிகைக்கு போவதைவிட 4ம் மாடிக்கு போவதுதான் அதிக்கத்தடவைகள் என்று. 

 

நிலாந்தனின் குழப்பம் முழுவதும் எழுவது சம்பந்தர் இந்தியாவை பற்றி சொன்ன வசனத்தினால். அதை நிலாந்தன் காண்பது அகராதி சொல் பொருளில். சம்பந்தர் சொன்னது தமிழ் மக்களை போராட்டத்தை கைவிட தேவை இல்லை. தொடர்வதில் அர்த்தம் இருக்குகிறது என்பதற்கு. 

 

தமிழ்ரசுக்கட்சிக்கு, கூட்டணிக்கு, கூட்டமைப்பு 65 வருடம் மக்கள் வாக்களித்தார்கள். இன்று அவர்கள் ஒரு மாகாண சபைக்கு வாக்களிப்பதாயின் 50%, 60%  தான் வாக்களிப்பார்கள். இது விகிதாசாரத் தேர்தலில், ஆமி போடும் வக்குகளுக்கு மேலால் சென்று ஒரு பிரதிநிதிதுவத்தை கூட்டமைப்புக்கொடுக்க என்றால் அது பல சிரமங்களை தாண்டியாகத்தான் இருக்கும். இதையே கிழக்கில் கண்டோம். கிழக்கின் கூட்டமைப்பு தலைவர் இதை வடக்கிலாவது திருந்த வேண்டும் என்று அறிக்கையும் விட்டார். கூட்டமைப்பு மக்களை உற்சாகப்படுத்த தனது முயற்சிகளைக் கையாள்கிறது. இதை நிலாந்தன் இந்தியா அடித்து அப்பம் தீத்தும் என்று தமிழ் மக்கள் எதிர் பார்ப்பதாக சொல்ல வருகிறார்.

 

1. இது தமிழ் மக்களின் வார்த்தை அல்ல. சம்பந்தரின் வார்தை.

2. இதை சம்பந்தர் சொன்னது தமிழ்மக்களை 65 வருடமாக நடக்கும் தேர்தலில் ஆர்வம் கொள்ள செய்யவே.

3.இதில் அகராதி விளக்கம் எடுப்பது அரசியல் குறுகிய விளக்கம்.

4.சம்பந்தர் சொல்ல வருவது சர்வதேசம் தமிழ் மக்களின் தேவைகளை இப்போது அறிந்திருக்கிறது என்பதைக் காட்டவே. மக்களை சோற்று மாடுகளாக மாற்ற அல்ல.

5.இந்தியா இதை சொன்ன காரணம் இந்தியா இலங்கையில் சந்தித்த ராஜதந்திர தோல்வியினால் என்பது எல்லோரும் அறிந்தது. இதில் மிகச்சில தமிழர் மட்டும்தான் இந்தியா இனி உதவ வருகிறது என்று திருப்திப்படுவது.

 

எது இருந்தும், அப்படி திருப்திப்படுபவர்களை கூட நிலாந்தனின் வட்டத்திற்குள் உள்ளடக்க முடியாது. அதாவது கோலி உதை பந்தாட்ட திடலினுள் இறங்கி விளையாடுவதில்லை என்பதால் அவன் ஆட்டத்தில் இல்லை என்று நினைக்க கூடாது. இவர்கள் கூட தங்கள் பாகத்தை செய்ய காத்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் இன்றைய அரசியலில் சொல்ல நிறைய இருக்கிறது. செய்ய ஒன்றும் இல்லை. ஆற்றங் கரையில் விவாசாயம் செய்யும் விவசாயி  இடத்துக்கு இடம் திரிந்து 

பாலைவனச் சோலைகளில் பேரீச்சம் பழம் பிடுங்கும் மனிதனை பார்த்து நீ எத்தைகைய விவசாயம் செய்கிறாய், எத்தனை நாளை உன் தோட்டத்தில் கழிப்பாய் என்று கேட்டால் அதில் பெரிய அர்த்தம் இல்லை.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சேர்ந்து கும்மியடிக்கப் போகின்றார்கள் என்று புலம்பெயர் நாடுகளில் பதுங்கி இருக்கும் முதிர்ந்த ஆய்வாராய்ச்சி வித்துவான்கள் தகவல் சொல்லித் தப்பிக்க வழி சொல்லவில்லையே!

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வாலையும், இந்தியா/மேற்கு நாடுகளுக்குத் தலையையும் காட்டும் என்பது சாதாரண அப்பாவித் தமிழர்களுக்குக் கூடத் தெரியும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருப்பதெல்லாம் நடைமுறைக்குக் கொண்டுவர கூட்டமைப்பு பாடுபடும் என்றெல்லாம் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். கூட்டமைப்பு வென்று வடமாகாண சபையைக் கைப்பற்றினாலும் அதிகாரம் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம்தான் இருக்கும் என்பதைப் புரிந்தே வைத்திருக்கின்றார்கள். ஆனாலும் அரசின் மீதான அதிருப்தியை வெளிக்காட்ட கூட்டமைப்புக்குத்தான் வாக்குப் போடுவார்கள். வடபகுதியில் வாழும் சாதாரண மக்களுக்கு உள்ள அரசியல் தெளிவு அவர்களுடன் நேரடியாக யாழ்ப்பாணத்தில் பேசியபோது பிரமிக்கத்தான் வைத்தது.

நிலாந்தனும் சில 16 வயது பாலகன்களும் யாழ்ப்பணம் கோல் போட்டு அரசியல் கேட்கும் நிலையில் இருந்து கொண்டு கூட்டமைப்பற்றி எழுதுவது பகிடி. நாமும் அங்கிருந்துதான் வருகிறோம் என்ற்தை அறிய முடியாத பாண்டித்தியம். ஒன்று தாங்கள் இங்கே இருந்து கொண்டு யாழ்பாணத்துக்கு கோல்போட்டுக் கதைத்துவிட்டு, யாழ்ப்பாணத்திலிருக்கும் அந்த  மக்களை பிரதிநிதிப்படுத்தும் கூட்டமைப்பின் பிரதிநிதிகளின்தேர்தல் விஞ்ஞாபனத்தை பற்றிப் பிரஸ்தாப்பிபது மீனுக்கு நீந்த கற்றுக்கொடுக்கும் பண்டிதர்களாக அவர்களைக்காட்டுகிறது. அல்லது வலிந்த விவாதம் தேடி தேவையலலாதவற்றில் மூக்கை நுளைக்கும் அரைப்படிப்பு வேதாந்திகளாக காட்டுகிறது.

 

நிலாந்தன் தனக்கும் தன்னை நம்புவர்களுக்கும் மருந்து சிட்டை எழுதி வாங்கி மருந்து குடித்தால் போதாதா? நிலாந்தன் தான் யாரை பிரதிநிதிப் படுத்துகிறார் என்றதை புரியாமல் வக்காலத்து வாங்குகிறார். எழுதி இருப்பது முழு கற்பனை. அதை நியாப்படுத்த அவர்களால் முடியவில்லை. 

 

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் 1948லிருந்து  வாலையும், தலையும் பார்த்து வாக்களிக்கும் அப்பாவி மக்களுக்கு மட்டுமே. தங்களை 16 ம் கழியாத  அரைப்படிப்பு குத்தல் கதை பேசும் தோல்விகளை கண்டு வெருளும் கோளைக்களுக்கு அல்ல. 

 

சந்திர சிறியை சிலர் நிரதரமாக வடக்கில் இருக்கும் படி பீடம் கட்டி பாலஸ்தானம் பண்ண முயல்கிறார்கள். அவர் தன்னை சிங்கள இராஜதந்திரம் முதுகில் குத்தி தூக்கி எறியும் நாளை எண்ணி மன்னாரில் கொட்டேல் கட்டுகிறார். வாசுதேவா வடக்குக்கு போக கோட்டை கட்டுகிறார். சிங்களம் ஆடும் தடுமாற்றங்களை பண்டிதர்கள் பத்திரிகையில் படிக்காமல் எதிர்வு கூறுகிறார்கள்.

 

முடிந்தால் சந்திரசிறிக்கு தேர்தல் முடிய என்ன நடக்கும் என்றதை எதிர்வு கூற விரும்புவோர் அதை பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி யாழில் பதியட்டும். இணையவன் அதை யாழில் "பின்" பண்ணி வைக்கட்டும். தேர்தல் முடிய சந்திரசிறி என்ன செய்கிறார் என்பதை நாம் பார்த்துவிட்டு  அதைவைத்து 16 வயது குழந்தைகளுடன் விவாதத்தை தொடரலாம். அதை விட இந்த விதண்டவாத வேதாந்தத்தால் கூட என்ன நிருபிக்க முடியும்? குறைந்த பட்டசம் நிலாந்தனின் கற்பனை மனநிலைகளை, காவியங்களை நிரூபிக்க முடியாமல் விவாதத்தை திசை திருப்புவான் ஏன்?

Edited by மல்லையூரான்

"தமிழ் வேல்ட்" பிசுபிசுத்துபோன பசிலின் கதையை பற்றி வடக்கின் வசந்தம் என்ற பெயரில் எழுதியிருக்கிறது.

 

அண்ணா தம்பிடம் இருந்த பொலிஸ் சட்டம்,ஒழுங்கைப் பறித்தார். மற்ற தம்பியிடம் இருந்து வடக்கின் வசந்தம் போகிறது.

 

 

 

சம்பந்தரின் பேச்சில் நிலாந்தன் ஒன்றை தவறவிட்டார். 

 

நான் அறிந்தவரை அந்த பேச்சு இப்படித்தான்

 

"பிரதமர்: நீங்கள் வடக்கின் தேர்தலை வென்றுவிட்டு வாருங்கள். நாங்கள் மிகுதியை கவனிதுக்கொள்கிறோம்"

சம்பந்தர்: வடக்கை மட்டும் கவனித்தால் கிழக்கை நாங்கள் என்ன செய்வது?

பிரதமர்: அதையும் சேர்த்துதான்"

 

பசில் வடக்கின் வசந்த்தை விட்டு விலகாலாம். ஆனால் கூட்டமைப்புதான் கிழக்கில் வெற்றியீட்டிய ஒரே கட்சி.  ஆனல் ஆட்சியை நிர்ணயிதது மூன்றாவதாக வந்த சிறுபான்மை கக்கீம். அது எப்படி நியாயம்? கிழக்கின் உதயமும் விடுவிக்கப் பட்டு கூட்டமைப்பு அங்கும் பொறுபு ஏற்க வேண்டும்.

 

 

http://tamilworldtoday.com/archives/31770

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மட்டும் என்ன அலரி மாளிகைக்கு முன் நின்று சேகுவாரா போல் சீறுகிறீர்களா?

நீங்களும் ஏகாதிபத்திய நாடுகளில் தான் பதுங்கி இருக்கிறீர்கள்.

நாங்களும் தான் யாழில் இருந்து வந்தவர்கள் மற்றும் தொடர்ந்தும் யாழ், வவுனியா, திருகோணமலை, கொழும்பு உறவுகளுடன் பேசுகின்றோம், உதவுகின்றோம்.

புலம்பெயர் கொடி வீசும் ஈழ தமிழரால் தான் அங்குள்ள மக்களுக்கு கொஞ்ச பாதுகாப்பும், பொருளாதாரமும் கிடைக்கிறது.

புலொகுகலிள் எழுதி கிழிப்போர் தாம் கடந்த 4 வருடங்களில் என்ன செய்தார்கள் என்று ஒரு விஞ்ஞாபனமும் வெளியிடவில்லை.

தமிழீழ ஆதரவாளர்கள் முறிந்து வேலை செய்ய சும்மா குறை கண்டுபிடித்து கட்டுரை எழுதவே லாயக்கு. எல்லோருக்கும் புலி முத்திரை குத்துவது தான் இலக்கு.

உங்களது குழுக்களால் ஒரு இழவும் கிடைக்க போவதில்லை என்று மக்களுக்கு நல்லா தெரியும். நீங்கள் வயிறு வளர்க்க அவர்களை பயன்படுத்த முனைவதும் தெரியும்.

அது சரி புலம்பெயர் தமிழருக்கு பலம் இல்லை என்றால், ஏன் ராசபக்சே இன்னும் டொரோண்டோ வரவில்லை? அசர்பைஜானுக்கு ஆட்டையை போட போய்விட்டாரா?

முதலில் நான் எந்தக் குழுக்களிலும் இல்லை. அடுத்ததாக நான் யாழ்ப்பாணத்தில் ஆகஸ்ட் இறுதியில் நான்கு நாட்கள் தங்கியிருந்தேன்.

சாதாரண மக்கள் அரசியலில் வழமைபோன்று அக்கறை காட்டிக் கதைப்பதில்லை. கூட்டமைப்பின் கொள்கை என்ன விஞ்ஞாபனத்தில் என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்பதிலெல்லாம் அவர்களுக்கு அக்கறையில்லை. ஆனால் கூட்டமைப்புக்குத்தான் வாக்களிப்போம் என்று சொன்னார்கள். எனினும் நான் நின்ற வடமராட்சிப் பகுதியில் ஈபிடிபி நிறைய சுவரொட்டிகளை ஒட்டியும் இருக்கின்றது. அத்தோடு கூட்டமைப்பின் சுவரொட்டிகளைக் கிழித்தும் வருகின்றார்கள்.

தேர்தல் நேர்மையாக நடாத்தப்பட்டால் கூட்டமைப்புத்தான் அதிகப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும். ஆனால் அதனை எப்பாடுபட்டாவது குறைக்க அரசாங்கமும் ஈபிடிபியும் முயற்சிப்பார்கள் என்பது தெரிந்ததுதானே.

புலம்பெயர் தமிழர்களின் பலம் இருப்பதால்தான் சிங்கள அரசு பயப்படுகின்றது என்பதெல்லாம் எம்மை நாமே மெச்சிக்கொள்ள மட்டும்தான் உதவும். உண்மையில் மேற்கு நாடுகளின் செல்வாக்குக்குள் சிறிலங்கா அரசு இருந்தால் அவர்கள் சொல்வதுபோன்று வெளியுறவு, பொருளாதார, அரசியல் கொள்கைகளை வகுத்தால் மேற்கு நாடுகளும் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களையும் தமிழர்களுக்கு இழைக்கும் அநீதிகளையும் பெரிதாகக் கண்டுகொள்ளாது. இல்லை இல்லை நாம் மேற்கு நாடுகளின் ஆதரவோடு தமிழர்கள் தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகளுடன் வாழ வழி செய்வோம் என்று சொன்னால் அது இலகுவில் சாத்தியம் அடையாத காரியம் என்பதைக் கொஞ்சம் யோசித்தாலே புரிந்துகொள்ளலாம்.

கூட்டமைப்பு வடமாகாணத் தேர்தலில் வென்று வடபகுதியை துரிதமாக சிங்கள மயமாக்கும் திட்டத்தை நிறுத்தினானே பாரிய வெற்றி என்றுதான் சொல்வேன். ஆனால் வடக்கைச் சிங்கள மயமாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அரசாங்கம் சும்மா இருக்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.