Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் மீதான மனித உரிமைமீறலும் சர்வதேசத்தின் பங்களிப்பும் - எஸ் ஜே வி செல்வநாயகம் 1974:-

Featured Replies

(20ஆவது பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தின் அனைத்துப்பிரதி நிதிகளுக்கும் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் எழுதி அனுப்பிய குறிப்பாணை இது - விசேட தமிழாக்கம் - குளோபல் தமிழ்ச் செய்திகள்)

 

1974ம்  ஆண்டு இலங்கையில் நிகழந்த 20ஆவது பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடுகளின் அனைத்துப்பிரதி நிதிகளுக்கும் திரு எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் எழுதி அனுப்பிய குறிப்பாணை இது. இந்தக்குறிப்பு விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாலோ அல்லது ஏனைய விடுதலை இயக்கத் தலைவர்களாலோ அனுப்பி வைக்கப்படவில்லை. புலிநீக்கம் ஆயுத நீக்கம், வன்போக்கு நீக்கம், களையெடுப்பு என்று முப்பொழுதும் தொழிற்பட்டுக்கொண்டு மென்போக்காளர்களாக  தம்மை நிலை நிறுத்த பலர் முயன்று கொண்டு இருக்கும் இந்தக் காலத்திற்கு அவசியமானது இந்த ஆவணம். ஆங்கிலத்தில் அமைந்த இந்த அரிய ஆவணம் தேடி எடுக்கப்பட்டு குளோபல் தமிழ்ச் செய்திகளால் தமிழாக்கம் செய்யப்பட்டது. வருடா வருடம் தலைவர் எஸ். ஜே.வீ. செல்வநாயகம் அவர்களின் சிலைக்கு மாலைஅணிவித்து ஊடகங்களில் காட்சி அளிப்பது அல்ல முக்கியம் அவரின் கொள்கைகளை பற்றிக்கொள்வது தான் இன்றய காலப் பொருத்தம். அதற்கு இந்த ஆவணம் முக்கிய சாண்று.  இந்த ஆவணத்தை எடுப்பதற்கு உதவிய நியூசிலாந்தில் வாழும் பெரியார் தேவராஜனுக்கும், நண்பர் வரதராஜனுக்கும் மிக்க நன்றிகள்.

-ஆ.ர்

 

தமிழர்கள் 1956 1957 1961 1974 ஆகிய ஆண்டுகளில் இலங்கையின் அரசாங்கங்களின் நேரடி வன்முறைகளுக்கு உட்பட்டிருக்கிறார்கள்.


இவைதவிரவும் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் மோசமான பல நடவடிக்கைகளை நாங்கள் கீழே பட்டியல் படுத்தியுள்ளோம்.


அரச சேவைகளிலும் அரச கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களிலும் தமிழர்கள் சமசந்தர்ப்பம் மறுகப்பட்டு ஒதுக்கப்பட்டு வருகிறார்கள்.


அரசினால் பிரசுரிக்கப்படும் பாடப்புத்தகங்களில் தமிழர்களுக்கெதிரான திட்டமிடப்பட  பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.


தமிழர் பகுதியில் இராணுவ மற்றும் பொலிஸ் தலையீடுகள் நிகழ்த்தப்படுகின்றன


அமைதியான முறையில் கூட்டம் கூடத் தமிழர்களுக்குள்ள உரிமை மறுக்கப்பட்டுள்ளது.


பல தமிழர்களுக்கும் தமிழ்த்தலைவர்களுக்கும் நாட்டைவிட்டு வெளியேறும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரச யாப்பில் சிறுபான்மையினங்களின் உரிமையை உறுதி செய்யும் சரத்துகள் அல்லது பாதுககாப்புகள் இல்லாதிருக்கின்றன.


கண்மூடித்தனமான கைதுகள் தடுத்து வைப்புக்களுக்கு தமிழர்கள் முகம் கொடுத்து வருகின்றனர். இந்த வகையில் இதுவரை 42 தமிழர்கள் தடுத்து வைக்கப்ப்டுள்ளனர்.


இவ்வாறு கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.


புத்தமதத்திற்கு மிகுந்த முதன்மை அளிக்கப்பட்டு அது அரசமதமாக அங்கீகரிக்கப்பட்டு அதனைப்பாதுகாக்கும் அரசின் பொறுப்பும் யாப்புவழி உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.


கடந்த இரண்டு வருடங்களாகக் காங்கேசன்துறையில் பதிற் தேர்தலை நடாத்தாமல் திட்டமிட்டு இழுத்தடிப்பதன் மூலம் 50000 மக்களின் அவர்களின் பிரதிநிதியைத் தெரிவு செய்யும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.


இலங்கையானது இன்றைக்கு இரண்டு இனங்களைக்கொண்ட ஒரு அரசாக உள்ளது. இதில் தமிழினம் தனது சுயத்தை நிர்ணயித்துக்கொள்ளும் உரிமையைக் கோரி நிற்கிறது. தமிழர்களின் பிரச்சனை ஒரு உள்நாட்டுப்பிரச்சனை அல்ல. இந்தியாவின் முதலாவது பிரதம ஆளுனரான திரு சிறீ இராசகோபாலாச்சாரியார் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்:
”தனிப்பட்ட மனிதர்களின் தவறுகள் குடும்பம் என்னும் சுவருக்குள் நிகழுகின்றன.  பொதுத் தவறுகள் நாடுகளின் எல்லைக்குள் நிகழுகின்றன. நாடுகளின் எல்லைகளைப்  புனிதமான ஒன்றாகக்கருதி இவற்றைக் கண்டுகொள்ளாமல் விடவேண்டும் என உலகம் கருதினால் உலகம் என்ற பொதுமைக்கு அர்த்தமில்லாது போய்விடும். உலகம் என்ற பொதுமை அசைவற்று நின்றுவிடும். கொடுங்கோன்மை உலகின் அடையாளமாகிவிடும்”


எனவே இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தனியே இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சனை என யாராவது கருதுவாராக இருந்தால் அவர் இலங்கையின் தற்போதைய அரசியல் சமூக யதார்த்ததை அறிந்து கொள்ளாமல் மறைத்து விட விரும்புகிறார் என்பதே அர்த்தமாகும்.


தற்போது இலங்கையில் தோன்றியுள்ள இந்த நிலமை மிக ஆபத்தான சூழல்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதுடன் அது படிப்படியாக எமது கட்டுப்பாட்டில் இருந்து நழுவியும் செல்கிறது என்பது சந்தேகமறத்தெரிகிறது.


உரையாடல் விட்டுக்கொடுப்பு மற்றும் எல்லாவிதமான அமைதி வழிகளினூடும் தமது உரிமைகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையைத் தமிழர்கள் இழந்து வருகிறார்கள்.  தமிழர்கள் எதிரிகொள்ளும் பிரச்சனைகளைச் சுற்றித் திரண்டு அவநம்பிக்கையும் பதட்டமும் விரக்தியும் வளர்ந்து வருகின்றன. இதன்மூலம் தோன்றக்கூடிய விளைவுகள் மிக விரைவிலோ அல்லது பிந்தியோ ஒருபோதும் திரும்பமுடியாத நிலமைகளுக்குள் எங்களைத்தள்ளி விடும்.


ஆகையினால் இலங்கைத்தமிழர்களுடைய பிரச்சனைகள் மீது பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளின் இரக்கமான பார்வை திரும்பும் என்றும் இந்தப்பிரச்சனையைத் தீர்ப்பதில் அவர்களின் பங்களிப்புப் இருக்கும் என்றும் நம்புகிறோம்
கையொப்பம்.
s.j.v.selvanayagam 

 
NOTE by N. Ethirveerasingam in 2001.

திரு செல்வநாயகம் அவர்களின் குறிப்பு அன்று மகாநாட்டில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. 27 வருடங்களின் பின்பு திரு செல்வநாயகம் அவர்கள் எதிர்வு கூறிய மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறோம். அகாலத்திலேயே ஒரு தீர்வு வழங்கப்பட்டிருக்குமெனில்  இன்றைக்கு நாங்கள் எதிர்கொள்கிற மோசமான துயரமான நிலமைகளையும்  மரணங்களையும் தடுப்புக் காவல்களையும் பாலியல் வன்முறைகளையும் எதிர்கொண்டிருக்கத்தேவை இல்லை. அதுமட்டுமல்ல இந்த நிலமைகள் இன்னும் தீவிரமும் செறிவும் அடைந்து செல்கின்றன. சர்வதேசத் தலையீடு இல்லாவிட்டால் தமிழர்கள் மீது இலங்கையின் அரசாங்கங்களும் இராணுவமும் புரியும் கொடுமைகள் வளர்ந்து செல்வவே செய்யும். இன்னும் இருபத்தைந்து வருடங்களின் பின்பும் 1974 ஆண்டு பொதுநலவாய மகாநாடு அன்று இந்தப் பிரச்சனையில் அக்கறை செலுத்தாதை இட்டு ஆச்சரியமடைந்ததைப்போலவே உலக நாடுகளும் இன்றைய பொது நலவாய நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் பெரும்பானமை இனமொன்று சிறுபன்ன்மை இனத்தினை அழிப்பதை பார்த்துக் கொண்டிருந்ததே என்று ஆச்சரியப்படுவோம்.
 
NOTE by N. Ethirveerasingam in 2001.


Mr. Chelvanayagam's appeal to the Commonwealth Conference was not tabled at the conference. After twenty 27 years we are in a worse position as predicted. A solution at that time would not have resulted in the deaths, rapes, detentions and embargo resulting in sufferings and death that has taken place since 1974 and continuing in ever increasing extent and intensity.

Without international mediation, the atrocities committed on the Tamils of Ceylon by the Government and the armed forces of Sri Lanka will increase. Twenty five years from now, we will wonder why, like the 1974 Commonwealth Conference, the international community, the current Commonwealth and the United Nations sat and watched the majority community decimate the minorities.
 

இவ்வாறான முக்கிய விடயங்களை கடினமான முயற்சிகளின் பின்பே வெளியிட முடிகிறது. எமது உழைப்பிற்கு கௌரவம் தந்து இதனை மீள்பதிவு செய்வோர் www.globaltamilnews.net   என்ற எமது இணையத்தின் முழுமையான பெயரையும் குறிப்பிட்டு மீள்பதிவு செய்யலாம்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98358/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.