Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரால் திருகோணமலைக்கு ஆபத்து: மகிந்த ராஜபக்ச

Featured Replies

சம்பூரால் திருகோணமலைக்கு ஆபத்து: மகிந்த ராஜபக்ச

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான சம்பூரினால் திருகோணமலை துறைமுகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களை நேற்று திங்கட்கிழமை சந்தித்த மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில் நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜுலியன் வில்சன், வொல்ப்கங் எர்டம்ன்ஸ்டொர்ட்டெர் (ஜேர்மனிய பதில் தூதுவர்), பிரித்தானிய பதில் தூதுவர் ஜேம்ஸ் மூரே, ஜப்பானிய பதில் தூதுவர் நொபுகி இடோ ஆகியோர் பங்கேற்றனர்.

சிறிலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் முப்படைகளின் தளபதிகளும் இச்சந்திப்பில் உடனிருந்தனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிரான எந்த முயற்சியிலும் சிறீலங்கா படைகள் ஈடுபடவில்லை என்று தெரிவித்த மகிந்த, விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல்களுக்கான பதில் தாக்குதல்களை மட்டுமே தனது படைகள் மேற்கொண்டு வருவதாகவும் விளக்கமளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

வலிந்த தாக்குதல்களை இரு தரப்பினரும் தவிர்க்க வேண்டுமென யுத்தநிறுத்த உடன்படிக்கை கூறுகின்ற போதிலும், விடுதலைப் புலிகளே வலிந்த தாக்குதல்களை முன்னெடுக்கிறார்கள். தற்காப்புத் தாக்குதல்களை நடாத்துவது அரச படைகளின் கட்டாயத் தேவையாக உள்ளது.

முற்றுமுழுதாக தாக்குதல்களை நிறுத்தி, தெளிவான தனது உறுதிப்பாட்டை விடுதலைப் புலிகளின் தலைமை முன்வைக்கும் பட்சத்தில், சிறீலங்கா அரசு அதை மதிக்கும். இத்தகைய உறுதிப்பாட்டில், சம்பூர் தளம், திருகோணமலை கடற்தளத்திற்கு அச்சுறுத்தலாக இருக்காது என்ற தெளிவான நிலைப்பாடும் உள்ளடக்கப்படுவது அவசியம்.

100 முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை, மனிதநேய அமைப்புக்களின் ஊழியர்கள் படுகொலை போன்றவற்றின் மீதான விசாரணைகள் தொடர்கின்றன. வடக்கு கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மனிதநேய அமைப்புக்களின் பணி பாராட்டுக்குரியது. அவர்களுக்கான பாதுகாப்பை தொடர்ந்தும் சிறீலங்கா அரசு உறுதிசெய்யும். அவர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்க சிறீலங்கா படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மகிந்த ராஜபக்ஷ விளக்கமளித்தார்.

யுத்தநிறுத்த ஒப்பந்தம் மீதான மகிந்த ராஜபக்ஷவின் உறுதிப்பாட்டைப் பாராட்டிய இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள், சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பதில் அரசின் தயார் நிலை மற்றும் விருப்பையும் பாராட்டினார்கள். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.