Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது நெஞ்சத்தில் இருத்தி நினைவு கூரும் நந்நாள்-நவம்பர்-இருபத்தேழு! [தேசிய மாவீரர் பணிச் செயலகம்]

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
k2668.jpg
தமிழ் மக்களாகிய எமது புனித நாட்களில் மாவீரர்களை நினைவு கூரும் நாள் மிக முக்கிய
நாளாகும் . இந்நாள் எமது ஈழ மண் விடிவிற்காகவும் , சுதந்திர சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடி தம்முயிரை ஆகுதியாக்கி , மண்ணுக்கு உரமாகி , எமது உயிருடன் கலந்துவிட்டவர்களின் நினைவு நாளாகும் .
 
உங்களது உயிரிலும் மேலான பிள்ளைகளும் , எமது சக போராளிகளுமான இந்த மாவீரர்களின் தற்கொடை , அர்ப்பணிப்பு , தியாகம் , உணர்வுகள் , கனவுகள் , இலட்சியதாகம் யாவும் எங்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்து , சணமும் மறக்கப்பட முடியாதவையாகும் . இப் புனிதர்களை எப்படி மறக்க முடியும் ? . இப்புவியில் தமிழ் மக்கள் வாழும்வரை இவர்களை நினைவு கூர்ந்து , சுடரேற்றி , மலர்தூவி வீரவணக்கம்
செலுத்துவது தமிழர்களது தலையாய கடமையாகும் .
 
இம்மாவீரர்களது உறங்குமிடமான மாவீரர் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டுவிட்டது . அழித்துவிட்டோம் என்று யாரும் கனவு காணலாம் . விதைத்தவர்கள் விழுது விடுவார்கள் . அவர்களது உடலமும் உணர்வுகளும் எமது மண்ணுடன் கலந்துவிட்டது . இடிப்புகளும் அழிப்புகளும் முன்பும் நடந்தது . பின் நிறுவப்பட்டது . காலம் வரும் காத்திருப்போம் .
 
எம் உறவுகளே !
 
இந்நிகழ்வும் , இதன் ஒழுங்கு முறைகளும் எம் தேசியத் தலைவராலும் , மூத்த உறுப்பினர்களாலும் , மூத்த தளபதிகளாலும் பலமுறை கூடி ஆராய்ந்து , கலந்துரையாடி முடிவு செய்து எங்கள் மாவீரர் பணிச்செயலகத்தால் கையேடாக வெளியிடப்பட்டது . இதனடிப்படையில் எங்கு மாவீரர் நாள் கடைப்பிடித்தாலும் வேறுபடாமல் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பது எமது தேசியத் தலைவர் அவர்களது வேண்டுகோளாகும் .
 
மாவீரர்களின் இத்தகைய அர்ப்பணிப்பு நினைவுகள் எம்மை இலட்சியத்தின்பால் வழிநடத்தும் . எமது விடுதலைப் போராட்டம் முடிந்துவிடவில்லை . தேசியத் தலைவரும் , தளபதிகளும் , போராளிகளும் , உணர்வின்பால் வாழ்ந்த மக்களும் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை . மக்களைக் காப்பாற்ற நாம் ஆயுதங்களை மௌனிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம் . நாம் என்றும் தோல்வியை தழுவி இலட்சியத்தில் இருந்து
விலகிவிட்ட வரலாறே கிடையாது .
 
எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எமக்கிடையே தேசியத்தின்பாற்பட்ட புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்புமான ஒற்றுமை மிக முக்கியமாகும் . இதை எமது தேசியத் தலைவர் பெயரால் புனித மாவீரர் நாளில் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும் .
 
எம் மாவீரர்களின் இவ் உயர்வான , புனிதமான நிகழ்வை உணர்வுடனும் , தத்துவார்த்தமாகவும் கடைப்பிடிக்க வேண்டும் . இது , முற்று முழுவதுமான சோகம் நிறைந்ததாகவோ , படாடோபமாகவோ , டாம்பீகமாகவோ , ஆடம்பரமானதாகவோ அல்லாது வீரம் செறிந்து உணர்வு கலந்த உன்னதமான உயரிய வரலாற்று நிகழ்வாகும் . மாவீரர்களின் உந்து சக்தி எம்மை இலட்சியத்தில் தவறாது வழிநடத்திச் செல்லும் என நம்புவோமாக .
 
ஆகவே எனது அன்பான இனிய உறவுகளே , இந் நிகழ்வைக் கடைப்பிடிப்பதன் பேரில் பெற்றோர் , உறவினரைக் கௌரவிப்பதுடன் நாமெல்லோரும் ஒன்றுபட்டு அடுத்த கட்டத்திற்கு நகரும் வல்லமையை பெறுவோமாக .
 
எனவே நாமெல்லோரும் இம் மாவீரர்களின் தியாகங்களை நெஞ்சில் இருத்தி நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்தும் வேளை நாங்கள் எமது வாக்குறுதிப் பிரமாணங்களைத் தவறாது மீட்டுக் கொள்வோமாக .
 
நன்றி !
 
" புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "
 
பணிமுதல்வர் .
 
பொன் . தியாகம்
 
தேசிய மாவீரர் பணிச்செயலகம் ,
 
தமிழீழ விடுதலைப் புலிகள் ,
 
தமிழீழம் - சர்வதேசம் .
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.