Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டேவிட் கம­ரூன் கோரும் சர்­வ­தேச விசா­ரணை சுயா­தீ­ன­மாக அமை­யப்­போ­வ­தில்லை அதில் எமக்கு நம்­பிக்கை இல்லை - மகிந்த சம­ர­சிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

s1.jpg

இலங்கை விவ­கா­ரத்தை ஆராய்­வ­தற்கு தருஸ்மன் குழு எவ்­வாறு அமைக்­கப்­பட்­டது என்­பது தொடர்­பிலும் அதன் அறிக்கை தயா­ரிக்­கப்­பட்ட விதம் குறித்தும் நாம் நன்கு அறிவோம். இந்­நி­லையில்,- இலங்கை தொடர்பில் கோரப்­ப­டு­கின்ற சர்­வ­தேச விசா­ரணை என்­பது சுயா­தீ­ன­மா­ன­தாக அமை­யப்­போ­வ­தில்லை. சர்­வ­தேச விசா­ர­ணையில் எமக்கு நம்­பிக்­கையும் கிடை­யாது என்று அமைச்சர் மகிந்த சம­ர­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார். 

புலம்­பெ­யர்ந்து வாழும் எட்டு அடிப்­ப­டை­வாத தமிழ் சமூ­கத்­து­ட­னான பேச்­சு­வார்த்­தை­களின் அடிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­பட்­ட­தான நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­யவே பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கம­ரூனின் இலங்கை விஜ­யமும் இலங்கை மீதான சர்­வ­தேச விசா­ரணை கோரிக்­கையும் அமைந்­தி­ருந்­தன. இலங்கை மீது சர்­வ­தேச விசா­ரணை கோரும் தார்­மிக உரிமை பிரித்­தா­னி­யா­வுக்கு கிடை­யாது. அது மாத்­தி­ர­மன்றி அவ­ரது சர்­வ­தேச விசா­ரணை கோரிக்­கையை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம் என்று அவர் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற 2014ஆம் ஆண்­டுக்­கான வரவு –- செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் மகிந்த சம­ர­சிங்க இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

ஜனா­தி­ப­தி­யினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள 2014ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்டம் வர­வேற்­கத்­தக்க வகையில் அமைந்­தி­ருப்­ப­தை­யிட்டு மகிழ்ச்­சி­ய­டைகின் றோம். நீண்ட நாள் ே வலைத்­திட்­டத்தின் அடிப்­ப­டை­யிலும் அதே­நேரம் அமைச்­சுக்­க­ளி­னதும் அதி­கா­ரி­க­ளி­னதும் ஆலோ­ச­னையின் பிர­கா­ரமும் தயா­ரிக்­கப்­பட்­ட­தான இவ்­வ­ரவு செல­வுத்­திட்­டத்தை விமர்­சிப்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாகும்.

25.7 வீதம் வடக்­கிலும் 25வீதம் கிழக்­கிலும் பொரு­ளா­தார வளர்ச்சி ஏற்­பட்­டுள்ள அதே­வேளை நிலை­யான மீள்­குடிே யற்­றத்­துக்­கான சூழல் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­பது நாம் கண்ட மற்றும் ஒரு பாரிய வெற்­றி­யாகும். நமது நாட்­டிற்கு வரு­கை­தந்­த­வர்கள் இங்கு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அபி­வி­ருத்­திகள் குறித்து பேசிய அதேவேளை, ஒரு சிலர் தங்­க­ளது சொந்த நிகழ்ச்சி நிரலின் கீழ் வந்­தி­ருந்­த­தையும் கூற­மு­டியும்.

பிரித்­தா­னி­யாவின் பிர­தமர் டேவிட் கமரூன் பொது­ந­ல­வாய அரச தலை­வர்­க­ளது உச்­சி­மா­நாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக இலங்­கைக்கு விஜயம் செய்­வ­தற்கு முன்­ப­தாக புலம்­பெ­யர்ந்து வாழும் தமிழ் சமூ­கத்­தி­னரின் எட்டு அடிப்­ப­டை­வாத அமைப்­பு­க­ளுடன் பேச்­சுக்­களை நடத்தி அத­ன­டிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­பட்ட நிகழ்ச்சி நிரல்­க­ளுக்கு ஏற்­பவே அவர் இங்கு வந்­தி­ருந்தார். அத்­துடன், தான் இலங்­கைக்கு சென்று அங்கு சர்­வ­தேச விசா­ரணை ஒன்றை கோருவேன் என்றும் மேற்­படி அடிப்­ப­டை­வாத அமைப்­பு­க­ளிடம் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். அவ்­வாறு உறு­தி­ய­ளித்­த­வாறே அவ­ரது இலங்கை விஜ­யமும் இலங்கை மீதான சர்­வ­தேச விசா­ரணை கோரிக்­கையும் அமைந்­தி­ருந்­தன. பிரித்­தா­னிய பிர­த­மரின் இத்­த­கைய கோரிக்­கையை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம்.

ஈராக் மற்றும் ஆப்­பா­னிஸ்தான் உள்­ளிட்ட நாடு­களின் மீது பிரித்­தா­னியா கொண்­டி­ருந்த ஆக்­கி­ர­மிப்­புகள் தொடர்பில் பாரிய பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. அத­ன­டிப்­ப­டையில் நோக்­கும்­போது இலங்கை மீது சர்­வ­தேச விசாரணை ஒன்றை கோரு­வ­தற்கு பிரித்­தா­னி­யா­விற்கு எந்­த­வி­த­மான தார்­மிக உரி­மையும் கிடை­யாது.

ஈராக் விடயம் தொடர்பில் ஆராய்­வ­தற்­கென நிய­மிக்­கப்­பட்ட சில்கொட் குழு இன்னும் அதன் அறிக்­கையை சமர்ப்­பிக்க முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. பிரித்­தா­னி­யவின் முன்னாள் பிர­தமர் ரோனி பிளே­ய­ருக்கும் அமெரிக் க ஜனா­தி­பதி புஷ்­ஷுக்கும் இடையில் இடம்­பெற்ற உரை­யா­டல்கள் பற்­றிய விப­ரங்­களை சில்கொட் குழு கோரி­யுள்­ள­போ­திலும் அதன் முழு­மை­யான விப­ரங்­களை தர­மு­டி­யா­தென அந்­நாட்டின் தற்­போதைய பிர­தமர் டேவிட் கமரூன் தெரி­வித்­துள்ளார். இவ்­வாறு செயற்­படும் அர­சுக்கு இலங்கை மீது சர்­வ­தேச விசா­ர­ணையை கோரு­வ­தற்கு எந்­த­வி­த­மான உரி­மையும் கிடை­யாது.

மேலும் சர்­வ­தேச விசா­ரணை என்­பதில் சுயா­தீனம் இல்லை. இலங்கை விவகாரம் தொடர்பில் தருஸ்மன் குழு அமைக்கப்பட்டவிதம் குறித்தும் அந்தக் குழு இருக்கவே தருஸ்மன் அறிக்கை வேறு தரப்பினரால் தயாரிக்கப்பட்டமை தொடர்பிலும் நாம் நன்றாகே அறிந்திருக் கின்றோம். அந்தவகையில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கோருகின்ற சர்வதேச விசாரணை கோரிக்கையானது அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் அமைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. அத்துடன், சர்வதேச விசாரணை என்பதில் எமக்கு எந்தவிதமான நம்பிக்கையும் கிடையாது என்றார்.

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10195:-s--ss-s-sss-ssss---s---ss&catid=1:latest-news&Itemid=18

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.