Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண முதலமைச்சர் - மன்னார் ஆயர் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC02877%20copy.jpg

-எஸ்.றொசேரியன்  லெம்பேட்

வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை  விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

மன்னார் ஆயர் இல்லத்தில்  நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பின்போது மன்னார் மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள காணிப் பிரச்சினைகள், இராணுவத்தினரின் தலையீடுகள், அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னம், அமைச்சர் ஒருவரின்  தன்னிச்சையான செயற்பாடுகள், மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், மீள்குடியேற்ற கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகள் உட்பட  மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில்; முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.  

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான பிரிமூஸ் சிராய்வா,  ஜீ.குணசீலன், அயூப் அஸ்மீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

DSC02861%20copy(1).jpg

DSC02880%20copy.jpg

DSC02926%20copy.jpg

DSC03004%20copy.jpg

 
வடக்கு மாகாணசபை கூட்டங்கள் ஏனோ தானோ மனநிலையினில்!

வடக்கு மாகாண சபையின் அமர்வுகள் ஏனோதானோவென நடைபெற்று வரும் நிலையினில் பெரும்பாலான அங்கத்தவர்கள் அக்கறையற்று செயற்படுவதான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே இம்மாத அமர்விற்கு இது வரையில் இரண்டு பிரேரணைகளே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களாலேயே அவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண சபையின் இந்த மாதத்துக்குரிய அமர்வு எதிர்வரும் 11 ஆம் திகதி இடம் பெறவுள்ளது. மாகாண சபை அமர்வில் பிரேரணை சமர்ப்பிப்பதாக இருந்தால் 10 தினங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண பேரவைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாகாண சபை உறுப்பினர்களால் இரு பிரேரணைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இவையிரண்டும் எதிர்வரும் மாகாண சபை அமர்வில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.