Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு அவுஸ்திரேலியா வீசா மறுப்பு:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு அவுஸ்திரேலியா வீசா மறுப்பு:-
06 டிசம்பர் 2013
 
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு அவுஸ்திரேலியா வீசா மறுப்பு:-
 
அவுஸ்திரேலியா மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு வீசா வழங்க மறுத்துள்ளது. பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் இந்த மாதம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிகழ்வு ஒன்று அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு கஜபா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு அனுமதி வழங்க முடியாது என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
 
செனல்4 ஊடகத்தின் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் வீசா மறுக்கப்பட்டுள்ளதாகவும் வேறும் குற்றச்சாட்டுக்களுக்கு அவருக்கு எதிராக சுமத்தப்படவில்லை எனவும் ராணுவம் குறிப்பிட்டுள்ளது. இராணவ உயரதிகாரிகள் சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு சிலர் தடை ஏற்படுத்தி வருவதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் குறித்த நாடுகளுடன் பேச வேண்டுமெனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
  • கருத்துக்கள உறவுகள்

புலி ஆதரவாளர்கள் தம்மை ஓரம் கட்ட முயற்சிப்பதாக ஜகத் டயஸ் குற்றச்சாட்டு
07 டிசம்பர் 2013

jegath%20daias_CI.jpg



தமிழீழ விடுதலைப் பலி ஆதரவாளர்கள் தம்மை ஓரம் கட்ட முயற்சிப்பதாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வரும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் படையினருக்கு சூழ்;ச்சித் திட்டங்களை கட்டவிழ்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதற்கான வீசா மறுக்கப்பட்டமை ஓர் சாதாரண விடயமாக கருதப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இம்மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜகத் டயஸ் வீசா கோரி விண்ணப்பித்த போதிலும், வீசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி படையினரை தண்டிக்க சில தரப்பினர் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக உலகின் ஏனைய நாடுகளில் போராடிய படையினருக்கு எதிராக இவ்வாறான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதத்திற்க எதிராக போராடிய படையினரை தண்டித்து, பயங்கரவாதிகளை பாதுகாக்கும் கலாச்சாரம் உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வீசா மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து கருத்து வெளியிட முடியாது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
 
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99932/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.