Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஒரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஒரு பார்வை

– குமாரநந்தன்


images-50.jpg

தமிழில் அறிவியல் நூல்கள் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்று நினைக்கிறேன். அதிலும் பொருள் செறிவுடன் புதிய விசயங்களை ஆராயும் நூல்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம். இதற்கிடையே தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவர் அறிவியல் விஞ்ஞான விசயங்களைப் பெற வேண்டுமென்றால் என்ன செய்வது? கொஞ்சம் சிரமம் தான் இந்த சிரமம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அவருடைய ஆர்வத்தையே கொன்றுவிடும். என்கிற அச்சம் இருந்தாலும் இப்போது பல விஞ்ஞான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் கிடைக்கின்றன.

அந்த வரிசையில் எப்போதும் முதலில் இருப்பதாக நான் நினைப்பது காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்கிற புத்தகம்.

இதன் மூல நூலாகிய A brief History of Time 1987 ல் வெளிவந்தது. லண்டன் சண்டே டைம்ஸ் விற்பனையில் சாதணை படைத்த நூல்களின் பட்டியலில் தொடர்ந்து 237 வாரங்கள் இந்நூலுக்கு இடமளித்தது. உலகின் 40 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகில் 750 நபர்களுக்கு ஒரு புத்தகம் வீதம் உள்ளது போன்ற விவரங்களை ஏற்கனவே கேள்விப்பட்டு புத்தகத்தைப் படிக்க ஒரு வசீகரம் உருவாகியிருந்தது.

முதல் பதிப்பு 2002 லும் இரண்டாம் பதிப்பு 2005 லும் கண்டிருக்கும் இந்தப் புத்தகம் அதற்குப் பிறகு மீண்டும் பதிப்பிக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன். சிறந்த புத்தகங்களைப் பற்றிய அறிமுகம் தமிழ் சூழலில் சரியாக அமைவதில்லை. இலக்கியப் புத்தகங்களுக்கு இந்த பாக்கியம் ஓரளவுக்கு இருந்தாலும் மற்ற துறையின் தேர்ந்த புத்தகங்களுக்கு நல்ல ஆய்வுகள் இங்கே வருவதே இல்லை. இந்தப் புத்தகத்தைப் பற்றிய விரிவான கட்டுரைகள் வந்ததா தெரியவில்லை.

ஸ்டீபன் ஹாக்கிங் பற்றி நாம் எல்லோருமே கேள்விப்பட்டிருப்போம். இருபதைக் கடந்த சில ஆண்டுகளில் அவருக்கு அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்கெலரோசிஸ் என்கிற வியாதி இருப்பது கண்டறியப்பட்டது. என்றாலும் அவர் தன் அறிவியல் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. சில வருடங்களில் இறந்து விடுவார் என்கிற மருத்துவ ஆரூடத்தையும் அவர் பொய்யாக்கினார்.

ஸ்டீபன் ஹாக்கிங் நியூட்டன் ஐன்ஸ்டீன் போன்றோர் வரிசையில் இன்றுள்ள பிரசித்தி பெற்ற கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானி. பிரபஞ்சத் தோற்றவியல் குவாண்டம் ஈர்ப்புவிசை கருந்துளை போன்ற துறைகளில் இவரது கண்டுபிடிப்புகளும் பொது இயற்பியலில் ரோஜர் பென்ட்ரோசுடன் இணைந்து இயன்வழுப்புள்ளி பற்றி இவர் கூறியுள்ளவைகளும் முக்கியமானவை. கருந்துளைகளிலிருந்து வரும் கதிர்வீச்சு ஒன்று இவர் பெயரால் ஹாக்கிங் ரேடியேசன் என்றே அழைக்கப்படுகிறது.

கணக்குகள் சூத்திரங்கள் போன்றவைதான் மக்களை அறிவியல் பக்கம் நெருங்க விடாமல் செய்கின்றன என்பதை ஹாக்கிங் புரிந்து கொண்டு இந்த நூலில் எங்கேயும் எவ்விதக் கணக்கீடுகளும் இல்லாமல் வடிவமைத்திருக்கிறார். இப்போது ஆங்கிலத்தில் இயற்பியல் புத்தகங்கள் இணையத்தில் அளவில்லாமல் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவை யாவும் கணக்கீடுகளால் நிரம்பியிருக்கின்றன. விசயத்தைப் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆர்வலர்களுக்கு இந்தக் கணக்கீடுகள் தேவையில்லை இதற்காக நாம் கணக்குத் தியரங்களைக் கற்றுக் கொள்ளும் அளவிற்குப் போகமுடியாது. அதனால் தான் இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலேயே அந்த அளவிற்கு விற்று சாதணை படைத்திருக்கிறது.

நலங்கிள்ளி மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் இந்நூலைச் செழுமைப்படுத்த ஒவ்வொரு கலைச் சொல்லாக உருவாக்க நானும் தோழர் தியாகுவும் நடத்திய ஆரோக்கியமான விவாதங்கள் என்றும் மறக்க முடியாதவை என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

முதல் முறையாகப் படிக்கும் போது தமிழ்க் கலைச் சொற்கள் மனச்சோர்வை அளிப்பது உண்மைதான் என்றாலும் மீண்டும் மீண்டுமான வாசிப்பில் கலைச் சொற்களின் பங்களிப்பு நமக்குப் பெரிய இன்பத்தைத் தருகிறது.

உலகம் பற்றிய அறிவியல் இயற்பியல் புரிதல் எதுவும் இல்லாமலேயே நாம் அன்றாட வாழ்க்கை நடத்தி வருகிறோம். இது நமக்கெதற்கு என்கிற எண்ணம்தான் சட்டென வருவது. ஆனால் அது அப்படி இல்லை. கற்றை (Quantam) கள் துகள்கள் அணுக்கள் போன்றவற்றின் செயல்பாடுகளைப் பற்றிய புரிதல்கள் ஒரு கட்டத்திற்கு மேல் ஆன்மீகமாக மாறுகிறது. பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வது என்பது நம்மையே நாம் புரிந்து கொள்வதுதான். பிரபஞ்சத்தில் நம்முடைய இருப்பு பற்றிய தெளிவு உண்டாகும் போது நம்முடைய அகங்காரத்தின் பிரம்மாண்டத்தை நாம் தரிசிக்கிறோம். நம்முடைய கசடுகள் என்றென்றுமாக நம்மிடமிருந்து விடைபெறுவதற்குத் தயாராகின்றன. கோயில்களுக்குப் போவதாலும் அன்னதானம் செய்வதாலும் இத்தகைய மாற்றங்கள் வரும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் ஒருவருக்கு இத்தகைய அறிவியலில் ஆர்வம் ஏற்படும் போது தானாகவே அவர் அனைத்தையும் சமமாகப் பாவிக்கத் தொடங்குவார் என்பது என்னுடைய எண்ணம்.

அண்டம் எங்கிருந்து வந்தது? காலச் சக்கரம் என்றாவது ஒருநாள் பின்னோக்கிச் சுழலுமா? நம் நினைவில் கடந்தகாலம் இருப்பது போல எதிர்காலம் இருக்கவில்லையே ஏன் என்பது போன்ற கேள்விகளை ஆய்வு செய்வதன் மூலம் நமக்கு அறிவியல் பசியை உண்டாக்கி அதற்குப் பெருந்தீனியாகவும் அமைவதில் இந்நூல் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

அரிஸ்டாட்டில் தொடங்கி அறிவியல் விஞ்ஞானிகளின் சந்ததி வரிசைகள் அவர்களுடைய கண்டுபிடிப்புகளின் படிநிலை வளர்ச்சிகள் புதிய பொருட்களின் கண்டுபிடிப்புகள் அவற்றின் வருகையால் இயற்பியலில் உண்டான மாற்றங்கள் போன்றவை ஒரே சீராக குழப்பமின்றித் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் ஐரோப்பிய அமெரிக்க இத்தாலி ஜெர்மன் போன்ற நாடுகளின் அறிவியல் இணைப்பு கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சி பற்றிய ஒரு விரிவான புரிதலைக் கண்டடைகிறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் உண்டான புதிய புரிதல்களினால் உலகிற்குக் கிடைத்த புதிய பொருட்கள் போன்றவை உலகம் எப்படி விஞ்ஞான அறிவின் மயமானது என்பதைப் பற்றிய தெளிவைத் தருகிறது.

ஐன்ஸ்டீன் 1915ல் தன்னுடைய பொதுச் சார்பியல் கோட்பாட்டை வகுத்துரைத்த போதும் அண்டம் நிலையானதாக இருக்க வேண்டும் என்றே உறுதியாக நம்பினார். ஆனால் அப்படி இல்லை என்று ஆய்வுகள் காட்டியபோதும் அவரும் மேலும் சில விஞ்ஞானிகளும் சார்பியலின் ஊகத்தைத் தட்டிக் கழிக்கும் வழிகளைத் தேடிக் கொண்டிருந்தனர். என்று தெரியும் போது விஞ்ஞானிகள் கூட பழைய சிந்தனைகளில் ஏற்படும் தாக்கத்தை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்வதில்லை என்ற ஆச்சரியமான உண்மையை உணரமுடிகிறது.

அதே போல காலத்திற்கு ஒரு தொடக்கம் உள்ளது என்கிற கருத்தைப் பலர் விரும்பவில்லை எனவே ஒரு மாவெடிப்பு நிகழ்ந்தது என்ற முடிவுக்கு வருவதைத் தவிர்க்கப் பலர் முயன்றனர்.

கற்றைக் கொள்கைக்காக ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றிருந்தாலும் உறுதியின்மைக் கொள்கையை அவர் வன்மையாக எதிர்த்தார். உறுதியின்மைக் கொள்கை என்பது தாயக்கட்டையை உருட்டும் போது இந்த முறை இதுதான் விழும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது ஆனால் இத்தனை முறைகளில் என்னென்ன விழலாம் என்று சொல்லலாம். அதன்படி ஒரு முறைக்கு சராசரியாக எத்தனை என சதவீதமாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். என்ற விளக்கத்தின் மீது ஐன்ஸ்டீன் கடவுள் தாயம் விளையாடுவதில்லை என்கிற பிரபலமான விமர்சனத்தை வைத்தார். ஆனால் இன்றைய கம்ப்யூட்டர் டிவி போன்றவற்றில் பயன்படும் டிரான்ஸிஸ்டர் ஆகியவற்றின் இயக்கத்தை உறுதியின்மைக் கொள்கையே ஆள்கிறது.

இன்னும் இப்படி எவ்வளவோ விசயங்களை நூலைப் பற்றியும் நூலில் உள்ள விசயங்கள் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இந்த அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன்.


http://malaigal.com/?p=3594

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா...நல்ல ஒரு பகிர்வு... மலைகள் இணையத்தளத்தில் இதை பெற்றுக்கொள்ளும்வழிமுறைகளைக்காணவில்லை :(

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா..கூகிள் ஆண்டவரின் துணையுடன் குறிப்பிட்ட நூலின் ஆங்கில பதிப்பை தேடியபொழுது கீழுள்ள இணைப்பில் இலவசமாக டவுன்லோட் பண்ணி எடுத்தேன்.. விரும்பியவர்கள் படிக்கலாம்.. http://hsebnotes4u.blogspot.fr/2013/03/download-a-brief-history-of-time-by-stephen-hawking-pdf-freely-direct-download-link.html

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குப் பிறகு  வந்த Grand design வாசித்தேன்! இன்னும் நல்லா இருந்தது, என்ன சில கோட்பாடுகள் (அந்த இரண்டு துளைகளுக்கால துகள்கள் போய்வருகிற பரிசோதனைகள்!) "மண்டைக்கு மேலால" (over the head) போயிற்றுது! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.