Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபையில் ஆர்ப்பாட்டம் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபையில் ஆர்ப்பாட்டம் :
10 டிசம்பர் 2013
siva1_CI.jpg
இனப்படுகொலைக்கு நீதி கோரியும் வலி.வடக்கு நில ஆக்கிரமிப்பு மற்றும் அதனை பார்வையிடச்சென்ற முதலமைச்சர் திருப்பி அனுப்பபட்டமையுள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்கள் கே.சிவாஜிலிங்கம் தலைமையினில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடமாகாணசபையின் மூன்றாவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைக்கட்டிடத்தில் நடைபெற்றிருந்தது.வடமாகாணசபையின் 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டமும் இன்று சமர்ப்பிக்கப்படவிருந்தது.
 
அமர்வு ஆரம்பமாகி சிறிது நேரத்தினில் கே.சிவாஜிலிங்கம் தான் எடுத்து வந்திருந்த சுலோக அட்டைகளை கூட்டமைப்பின் சக அங்கத்தவர்களிடம் விநியோகித்திருந்தார்.பின்னர் பேரவை மண்டபத்தின் மையப்பகுதிக்கு வந்து சேர்ந்த அவர் சுலோக அட்டைகளை தாண்டியவாறு கோசங்களை எழுப்ப தொடங்கினார்.அவருக்கு ஆதரவாக ஏனைய அங்கத்தவர்கள் மற்றும் அமைச்சர்களும் மையப்பகுதிக்கு வந்து கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்டனர்.
 
எனினும் எதிர்கட்சி அங்கத்தவர்கள் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் தமது ஆசனங்களினில் அமர்ந்திருந்தவாறு மௌனித்திருந்தனர்.சுமார் 15 நிமிடங்களிற்கு மேலாக தமது கோரிக்கைகள் அடங்கிய கோசங்களை எழுப்பிய அவர்கள் பின்னர் அமைதியாக தமது ஆசனங்களிற்கு திரும்பி அமர்வுகளிற்கு ஆதரவளித்திருந்தனர்.
 
சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக கோசங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையினில் அங்கு பிரச்சன்னமாகி எதிர் கட்சி உறுப்பினர் வரிசையிலிருந்த ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஒருவர் தனது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.எனினும் அரசினது இராணுவ துணையுடனான குடியேற்றத்தை மட்டுமே எதிர்ப்பதாக தெரிவித்த உறுப்பினர்கள் முன்பு அங்கு வாழ்ந்த சிங்கள குடும்பங்கள் சுயமாக ஊர் திரும்ப தமக்கு ஆட்சேபணையில்லையென கூட்டமைப்பு முதலமைச்சர் முதல் உறுப்பினர்கள் வரை தெளிவுபடுத்தி கூறியிருந்தனர்.இதையடுத்து அமைதி நிலை திரும்பியிருந்தது. 
செவ்வாய்க்கிழமை, 10 டிசெம்பர் 2013 12:58 0 COMMENTS

5_5%2810%29.jpg
திருகோணமலை பஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பதற்றமான சூழ்நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. காணாமல் போன தங்களுடைய உறவுகளை கண்டறியும் குழு நடத்திகொண்டிருந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. (படங்கள்: எஸ்.எஸ்.சசிகுமார், வடமலை ராஜ்குமார்)
3%281981%29.jpg
DSCN3544.JPG
2_2%2811%29.jpg

5_5_1.jpg
10010.jpg
DSCN3544%281%29.JPG
DSCN3545.JPG
DSCN3549.JPG
DSCN3573.JPG
DSCN3588.JPG
DSCN3592.JPG
DSCN3593.JPG
DSCN3594.JPG
DSCN3595.JPG
DSCN3596.JPG
DSCN3598.JPG
DSCN3597.JPG


http://tamil.dailymirror.lk/--main/92672-2013-12-10-07-37-58.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.