Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாகித்திய அகாடமி விருது -2013.

Featured Replies

சாகித்திய அகாதெமி விருது 2013
 
2013 ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ஜோ டி குருஸ் - இன் 'கொற்கை' நாவலுக்குக் கிடைத்துள்ளது என்பதை வாசகர்களுடன் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறோம்.

gradient.png

 


1528479_594346993972551_1247746682_n.jpg


945189_594346960639221_378124660_n.jpg

தகவலுக்கு மிக்க நன்றி அர்ஜுன். இவரது இந்த 'கொற்கை' நாவலை வாசிக்க விரும்புகின்றேன். உங்களிடம் இருக்கின்றதா?

 

இவரது 'ஆழி சூழ் உலகு' நாவல் வாசித்த சிறந்த நாவல்களில் ஒன்று. கடலோர மக்களது வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக கண் முன் கொண்டு வந்த நாவல்.

திருநெல்வேலி: ஜோ டி குருஸ் எழுதிய "கொற்கை' நாவல், இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரை கிராமம் உவரியை சேர்ந்தவர் ஜோ டி குருஸ். சென்னை வணிக கப்பல் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ளார். இவரது நாவல் "கொற்கை' கடற்கரை வாழ் மக்களின் கதையை சொல்கிறது. பண்டைக் காலத்தில் முத்து வணிகத்தில் செழித்து விளங்கிய நெல்லை மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி) கொற்கை துறைமுக பகுதியில், 1914ல் துவங்கும் நாவலின் கதை, 2000arrow-10x10.png ஆண்டில் நிறைவு பெறுகிறது. கப்பல் வணிகத்தின் முன்னேற்றம், கொற்கையில் செழித்த பிற தொழில்களின் விருத்தி, கதை நடக்கும் காலத்தில் இடம்பெறும் அரசியலின் முக்கிய நிகழ்வுகள், வெள்ளையர்கள் மற்றும் கத்தோலிக்க மத பிரதிநிதிகளின் நிலை என, கொற்கையின் உருமாற்றத்தை பிரமிக்கத்தக்க வகையில், எண்ணற்ற தகவல்களுடனும், பாத்திரங்களுடனும் படைத்திருக்கிறார் குருஸ். இவர், ஏற்கனவே "ஆழி சூழ் உலகு' என்ற நாவலை எழுதியுள்ளார். நெல்லை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி, சென்னை லயோலா கல்லூரியில் எம்.ஏ., பொருளாதாரம், திருச்சி ஜோசப் கல்லூரியில் எம்.பில்., பயின்றவர். இவரின் "ஆழி சூழ் உலகு' நாவலுக்கு, இத்தகைய இலக்கிய கவுரவம் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டும் சாகித்ய அகாடமி விருது, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் செல்வராஜூக்கு அவரது "தோல்' நாவலுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானது குறித்து ஜோ டி குருஸ் கூறுகையில், ""கடற்கரை சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். இதன் மூலம், சமவெளி சமுதாய மக்களின் பார்வை, நீர்தேவதையின் மக்கள் மீது படும் என நினைக்கிறேன். சாகித்ய அகாடமி விருதை எதிர்பார்க்கவில்லை. இலக்கிய ஜாம்பவான்கள் பிறந்த நெல்லை மண்ணில் பிறந்ததற்காகவும், எனக்கும் விருது கிடைத்ததற்காகவும் மகிழ்கிறேன்,'' என்றார். இவரது மனைவி சசிகலா, மகன் அந்தோணி டி குருஸ்,11, மகள் ஹேமா டி குருஸ்,10, ஆகியோருடன் சென்னையில் வசிக்கிறார். இந்தி திரைப்பட பாடலாசிரியர், ஜாவேத் அக்தர், இந்தி நாவலாசிரியர் மிருதுளா கார்க், வங்க மொழி கவிஞர், சுபேத் சர்கார் உள்ளிட்ட, 22 பேர், இந்தாண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

 

Tamil_News_large_87603120131218235032.jp

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=876031

 

'தொண்டு நிறுவனங்கள் தான் எங்களை கையேந்த வைத்தன'

 

கடல்வாழ் உயிரினங்களை விட, கடலையும், பரதவர்களின் வாழ்வையும் நன்கு உணர்ந்த, ஜோ.டி.குரூஸ், தமிழ் நாவல் உலகில், ஆறடி திமிங்கலம் போல வளர்ந்து நிற்கிறார்.

இவருடைய, 'ஆழிசூழ் உலகு' நாவல் மூலம், கடற்கரை வாழ் சமூகத்தினரின் வாழ்க்கை கவனம் பெற்றது. இரண்டாவது நாவலான, 'கொற்கை' இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருதை பெறுகிறது. கப்பல் நிறுவனம் ஒன்றில், உயர் பொறுப்பில் இருக்கும் இவரிடம் பேசினால், தெற்கத்தி மொழியில், உவரி உப்புக்காற்றும், நெய்மீன் துண்டு வாசமும் கமழுகின்றன.இவரிடம் பேசுகையில்,

சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டதும், எழுத்து திறமை குறித்து, சில சர்ச்சைகள் எழுவது வழக்கம். ஆனால், உங்கள் கருத்தியலை முன்வைத்தே, உங்கள் மீது விமர்சனம் எழுகிறதே?
இந்த சிலும்பல்களை நான் கண்டுகொள்வதில்லை. எனக்கு, இலக்கிய நண்பர்கள் மிகக் குறைவு. எனது எழுத்துக்கு, நான் உண்மையாக இருக்கிறேன்.அதனால், கடற்ரை சமூகங்களின் வரலாறு குறித்த, விழிப்புணர்வை நான் ஏற்படுத்தி வருகிறேன். பரதவ ஆதிகுடிக்கு, சிறு தெய்வ வழிபாட்டு முறைகளே, தொன்மையான மரபு. கத்தோலிக்க கிறிஸ்தவம், அதை மாற்றியது. அதை எதிர்த்து, எழுதினேன். எங்கள் ஆதி தெய்வங்கள், எங்கள் முன்னோரே.இதை எழுதியதற்காக, சில பின்விளைவுகள் ஏற்பட்டன. அதற்காக, நான் வருந்தவில்லை. என் எழுத்துக்கு உண்மையாக இருந்ததற்காக, பெருமைப்படுகிறேன். இருப்பினும், இப்போது வரை நான், கத்தோலிக்க கிறிஸ்தவன் தான்.

இலக்கியம் குறித்து, சிறிதளவு பரிச்சயம் கூட இல்லாத உங்களுக்கு, கடற்கரை சமூகங்களின் உள்மன உலகங்களை, நுட்பமாக பதிவு செய்யும் உத்தி, எப்படி கைவரப்பெற்றது?
உப்புக் காற்றையும், நீலநிற நீரையும், வெள்ளி மணலையும், நெஞ்சம் நிறைய நேசித்தேன். பெண் மீது கொள்வது மட்டுமல்ல, மண்ணின் மீது கொள்வதும், காதல் தான்.மேலும், நான் அந்த சமூகத்தில் ஒருவனாக இருந்தது, எனது பலம். அங்குள்ள மக்களின், ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியும். அதை அப்படியே பதிவு செய்தேன். இதற்கு இலக்கிய பரிச்சயம் எதற்கு?

தமிழ் இலக்கியத்தில், கடற்கரை சமூகங்கள் குறித்த பதிவுகள் அதிகளவில் இல்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருந்ததா?
இல்லை. ஆழிசூழ் உலகும், கொற்கையும், பரிணாம வளர்ச்சி. இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கிய பரப்பில், கடற்கரை மக்கள் பற்றிய வாழ்நிலை குறிப்புகள், அங்கிங்கு இருந்தாலும், எதிர்காலத்தில் அதிகளவில் பதிவு செய்யப்படும் என, நம்பினேன்.பிற்காலத்தில், என்னால் முடிந்த அளவுக்கு, பதிவு செய்தேன். எதிர்வரும் காலங்களில், இதை விட, மிக நுட்பமான பதிவுகள், வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆழிப்பேரலைக்கு பின், ஒட்டுமொத்த கடற்கரை சமூகங்களிலும், நிகழ்ந்த கலாசார மாற்றங்களை, எப்படி உணர்கிறீர்கள்?
கண்ணீர் வடிக்கிறேன். சுயசார்புடன் வாழ்ந்த, கடற்கரை சமூகங்கள், அண்டிப் பிழைக்கும் சமூகமாக, மாறி இருக்கின்றன. இதற்கு, தொண்டு நிறுவனங்கள், மிக முக்கிய காரணம். ஊருக்கே வாரி வழங்கிய சமூகம் இன்று, கையேந்தி நிற்கிறது.

தொண்டு நிறுவனங்களிடமிருந்து, அந்த சமூகத்தை எப்படி மீட்கப் போகிறீர்கள்?
என்னளவில், இலக்கியத்தின் மூலம், அதை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடப் போகிறேன்.

தமிழ் எழுத்தாளர்களில் சிலர், பிற்போக்குவாதிகளாக இருக்கும் போது, இலக்கியம் மூலம், கலாசார மாற்றம் என்பது சாத்தியமா?
வாழ்ந்து காட்டுவதன் மூலம், அதை சாத்தியப்படுத்தலாம். எதிர்வரும் தலைமுறை, அதை சாத்தியப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கடலையும், வெள்ளை மண்ணையும் நேசிக்கும் இளைய தலைமுறையினர் பலர் உள்ளனர்; அவர்கள் சாத்தியப்படுத்துவர்.மனதளவில் உங்கள் வாழ்க்கை உவரியில்
உள்ளது.

யதார்த்தத்தில், சென்னையில் கப்பலோடு போராடிக் கொண்டிருக்கிறீர்கள். கனவுக்கும் யதார்த்தத்துக்குமான, இந்த வாழ்க்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
இன்னும், நான் உவரி கடற்கரை மணலில் தான், வாழ்ந்து கொண்டிருக்கிறேன். புறவாழ்க்கையில் என், இருப்பை கட்டுப்படுத்த சில, சாத்தியக்கூறுகள் இருக்கலாம். ஆனால், என் அகவாழ்க்கை, உவரியில் தான் இருக்கிறது.இன்று நான், உயர் பதவியில் அமர்ந்து, 'ஏசி' காரில் பயணித்தாலும், நான் படிப்பதற்காக, சுடும் மணல் வெளியில் கருவாடு காய வைத்த, அக்காவின் வாசத்தோடே வாழ்ந்து வருகிறேன். கலீல் ஜிப்ரான் சொன்னது போல, 'உடம்பை நீங்கள் கட்டுப்படுத்தலாம்; மனதை யார் கட்டுப்படுத்துவது?'

 

Tamil_News_large_878231.jpg

 

 


http://www.dinamalar.com/news_detail.asp?id=878231

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.