Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தரும் புதிய இராணுவமுகாமும் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக யாழ்ப்பாணத் தம்பி:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

download_CI.jpg

இராணுவமுகாங்களை குறைக்கிறோம், பின் வாங்குகிறோம் என்று சொல்லிக் கொண்டு இராணுவமுகாங்களை இலங்கை அரசு விஸ்தரித்துக்கொண்டே செல்லுகிறது. ஈழத் தமிழர்களின் நிலத்தில் இன்று இன்னொரு இராணுவமுகாம் திறக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் மிருசுவிலில் இந்த இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ளது. 

மிருசுவில் யுத்த எல்லையாக இருந்த இடம். பல சமர்களையும் பல அபகரிப்புக்களையும் பல இராணுவமுகாங்களையும் சந்தித்த பகுதி. இன்று இந்தக் கிராமத்திற்கு இன்னொரு இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்கில் இராணுவமயம் நீங்காது என்பதை சொல்லும் ஒரு சமீக்ஞையே இது. 

ஒரு இராணுவமுகாம் அமைக்கப்படுவதால் அக் கிராமத்தின் சுதந்திரமே பறி போகிறது. பெண்களதும் சிறுவர்களதும் பாதுகாப்பு இல்லாமல் போகிறது. இளைஞர்கள் யுவதிகள் அஞ்ச வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஒட்டுமொத்த சனங்களும் எப்போதும் எதுவும் நிகழலாம் என்கிற அச்ச சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். 

இராணுவமுகாம் அமைக்கப்படுவதால் அங்கு ஜனநாயகமும் அமைதியும் இல்லாமல் அச்சமும் பதற்றமும் மேலோங்கும். இலங்கை அரசைப் பொறுத்தவரையில் இராணுவ முகாங்களதான் ஜனநாயகத்தையும் அமைதியையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக பிரசாரம் செய்யப்படுபவை. 

இராணுவ முகாங்களை விட்டு வெளியேறுகிறோம். பின்வாங்கிக் கொள்கிறோம் என்றெல்லாம் இலங்கை இராணுவம் கடும் பிரசாரங்களில் ஈடுபடுகின்றது. இந்தப் பிரசாரங்களை செய்து கொண்டே தற்காலிக முகாங்களை நிதரந்தர முகாமாக மாற்றி தமிழர் மண்ணில் நிரந்தரமாக காலூன்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. 

இராணுவத்தின் தலையாய பணிகளில் ஒன்று புத்தர் சிலைகளும் நடுவதும் கூட. மிருசுவில் பகுதியில் திற்கப்பட்ட பாரிய இராணுவமுகாமில் புத்தர் சிலை ஒன்றையும் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய திறந்து வைத்திருக்கிறார். இராணுவமுகாமுக்கும் புத்தர் சிலைக்கும் உள்ள தொடர்பை இந்த நிகழ்வு காட்டுகிறது. 

வடக்கு கிழக்கு எங்கும் இராணுவமுகாங்களையும் புத்தர் சிலைகளையும் பெருக்கும் நடவடிக்கையிலேயே இலங்கை அரசு யுத்தம் முடிந்த கடந்த நான்கு ஆண்டுகளில் பெரும் சாதனையாகச் செய்திருக்கிறது. அதுவே ஈழத் தமிழ் மக்களின் நிலத்தை அபகரிக்கும் படைச் செயற்பாடாகத் தொடர்கிறது. 

இராணுவமே வடக்கு கிழக்கை விட்டு வெளியேறு என்று தமிழர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் பிரச்சினையை தீரப்பதன் முதல் அடியெனப்படுவது இராணுவ முகாங்களை அகற்றிக்கொண்டு இராணுவம் வடக்கு கிழக்கை விட்டு வெளியேறுவதில்தான் தொடங்குகிறது. 

தொடர்ந்தும் மக்களின் நிலங்கள் இராணுவமுகாமுக்காக அபகரிக்கப்படுகின்றன. வலி வடக்கில் மாத்திரமல்ல மிருசுவிலும் அபபகரிப்போம் என்பதை கோத்தபாய புதிய ஆண்டில் செய்தியாகச் சொல்கிறார். வடக்கு கிழக்கின் நிகழ்காலத்தை மாத்திரமல்ல எதிர்காலத்தையும் வெளிப்படையாக அறிவிக்கின்றன புத்தரும் புதிய இராணுமுகாமும்.  

குளோபல் தமிழ் செய்திகளுக்காக யாழ்ப்பாணத் தம்பி

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101453/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.