Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சதீவு என்பது ஏற்கனவே தீர்வுகாணப்பட்ட பிரச்சினை - இந்திய மத்திய அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Katchatheevu%20island.jpg

கச்சதீவு மீதான சிறிலங்காவின் இறையாண்மை என்பது ஏற்கனவே தீர்வுகாணப்பட்ட பிரச்சினை எனவும், இந்தப் பிராந்தியத்தில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான எவ்வித உரிமையையும் கொண்டிருக்கவில்லை எனவும் வியாழனன்று இந்திய மத்திய அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றிடம் அறிவித்துள்ளது. 

1974 மற்றும் 1976 களில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு உடன்படிக்கைகளின் மூலம் சிறிலங்காவிடம் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ள கச்சதீவை இந்தியா மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனக்கோரி இந்தியாவின் PIL என்கின்ற பொதுநல வழக்கின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாக்குமூலத்திலேயே இந்திய மத்திய அரசாங்கமானது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. 

"இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் எல்லைப் பிரச்சினையானது ஏற்கனவே தீர்வு காணப்பட்ட கச்சதீவு இறைமை விவகாரத்தால் மேலும் தொடர்கின்ற ஒரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது. ஆனால் கச்சதீவு விவகாரமானது ஏற்கனவே தீர்வுகாணப்பட்ட ஒன்றாக உள்ளது" என இந்திய மத்திய அரசாங்கம், சென்னை உயர் நீதிமன்றிடம் தெரிவித்துள்ளது. 

இவ்விரு உடன்படிக்கைகளின் பிரகாரம் கச்சதீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொதுநல வழக்கின் கீழ் தனது மனுவைப் பதிவுசெய்த மீனவர் நலன் பேண் அமைப்பின் தலைவர் L.A.பீற்றர் இராயன் தெரிவித்திருந்தார். இதனை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளதுடன், "1974 மற்றும் 1976 உடன்படிக்கைகளின் கீழ், எமது மீனவர்கள் பாரம்பரியமான தமது உரிமைகளைப் பேணுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் கச்சதீவுக்குச் சென்று அங்கு தமது மீன்பிடி வலைகளை உலரவிடுவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் மற்றும் யாத்திரிகர்கள் ஆண்டுதோறும் இடம்பெறும் புனித அந்தோனி விழாவில் பங்குபற்றுவதற்குமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கச்சதீவைச் சூழவுள்ள பிரதேசங்களில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர் எனத் தவறாக விளங்கப்படக் கூடாது" என இந்திய மத்திய அரசாங்கம் தனது எதிர்வாதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

1974 உடன்படிக்கையில், பாக்குநீரிணைக்கும் அடம்ஸ் பாலத்திற்கும் இடையில் இந்தியா மற்றும் சிறிலங்காவின் எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிற்குச் சொந்தமான பிரதேசம் பிறிதொரு நாட்டிற்கு தாரைவார்த்துக் கொடுக்கப்படவில்லை எனவும் இந்த வழக்கின் பிரதிவாதியான இந்திய மத்திய அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளது. 

"1976ல் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையானது, மன்னார் வளைகுடாவுக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையிலான சிறிலங்காவின் கடல் எல்லை மற்றும் இதனுடன் தொடர்புபட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த உடன்படிக்கைகள் இந்திய நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு அதன்பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது. சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பொருட்களைப் பரிமாற்றுதல் மற்றும் ஒப்புதலைப் பெற்றுக்கொள்வதை நோக்காகக் கொண்டு இந்த உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன" என இந்திய மத்திய அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

கச்சதீவு விவகாரம் தொடர்பான வழக்கானது வியாழனன்று முதன் முதலாக விசாரிக்கப்பட்டது. இந்த முதலாவது விசாரணையானது முதன்மை நீதிபதி R.K.அக்ரவல் மற்றும் நீதிபதி K.ரவிச்சந்திரபாபு ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது. இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் ஜனவரி 27 அன்று மேற்கொள்ளப்படவுள்ளது. 

- The Times of India

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140124109837

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.