Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா? – சிங்கள இணையம் எழுப்பும் சந்தேகம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sriskandaraja-240114-150.jpg

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுந்தரம் ஸ்ரீஸ்கந்தராஜாவின் திடீர் மரணம், சட்டத்துறையினர் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பு வழங்கியவர் நீதியரசர் ஸ்ரீ ஸ்கந்தராஜாவேயாவார். அந்த தீர்ப்பின் முக்கிய பங்கு அவருக்கே இருந்தது. அத்துடன் அந்த தீர்ப்பு இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது.

  

ராஜபக்ஷ அரசாங்கம் எவ்வாறான வாதப் பிரதிவாதங்களை முன்வைத்த போதும் முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானதே. இதனை மாற்றியமைக்க ராஜபக்ஷவினருக்கு இதுவரை முடியாமல் போயுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக அரசாங்கம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ஸ்ரீ ஸ்கந்தராஜா வழங்கிய தீர்ப்பு காரணமாக அரசாங்கம் அவர் மீது கோபத்தை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அரசாங்கம் அவருக்கு உயர்நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வையும் வழங்கவில்லை. இவருக்கு பதிலாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த புவனேக அலுவிகார என்பவரை அரசாங்கம், உயர்நீதிமன்ற நீதியரசராக நியமித்தது. இந்த நிலையிலேயே நீதியரசர் ஸ்ரீஸ்கந்தராஜா திடீர் சுகவீனமடைந்தார். இவருக்கு பாரதூரமான நோய்கள் எதுவும் இருக்கவில்லை. 60 வயதான ஸ்ரீஸ்கந்தராஜா திடீரென சுகவீனமுற்றதுடன் அவரது மூளையும் செயலிழந்தது. கடும் விஷம் காரணமாக நீதியரசருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சட்டத்துறையினர் மத்தியில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=102122&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.