Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்பகுதி மாணவர்களை விட வடபகுதி மாணவர்களின் பார்வைத்திறன் அதிகம்! – காரணத்தை விபரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Hindu-Ladies-College-240114-150.jpg

கொழும்பு, கண்டி உள்ளிட்ட தென்பகுதிப் பிரதேசங்களில் வாழும் மாணவர்களை விடவும் வட மாகாண மாணவர்கள் மத்தியில் கண்பார்வை தொடர்பான குறைபாடுகள் மிகவும் குறைவு என்று கண்பார்வை விஞ்ஞானம் தொடர்பான கல்லூரி (ஐ கெயார் இன்ஸ்ரிரியூட்) யின் கண் பரிசோதனை நிபுணர் நரேஷ் பிரதான் தெரிவித்தார். வட பகுதி மாணவர்கள் மத்தியில் கணனி மற்றும் கையடக்கத் தொலைபேசிப் பாவனை குறைவும், அவர்கள் மத்தியில் காணப்படும் மரக்கறி மற்றும் கீரை வகைகளை அதிகமாக உட்கொள்ளும் பழக்கமும் இதற்குப் பெரிதும் உதவியுள்ளது எனவும் அவர் கூறினார்.

  

‘கண்பார்வை தொடர்பான மாநாடு’ நாளை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. இம்மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கான செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொழும்பு, கண்டி உள்ளிட்ட தென்பகுதி பிரதேசங்களில் வாழுகின்ற மாணவர்களில் பெரும்பகுதியினர் கணனி, கையடக்கத் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சிகளில் பெரும் பகுதி நேரகாலத்தைத் தினமும் செலவிடுகின்றனர்.

இதன் காரணத்தினால் தூரப் பார்வைக்கான வாய்ப்பு தினமும் இவர்களுக்கு மிகவும் குறைவாக உள்ளது. அதனால் பார்வையுடன் தொடர்புடைய பலவிதமான பிரச்சினைகளுக்கு கொழும்பு, கண்டி உள்ளிட்ட தென்பகுதி பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் முகம் கொடுத்துள்ளனர். இவ்வாறான பிரச்சினைகள் வடபகுதி மாணவர்கள் மத்தியில் மிகவும் குறைவாக உள்ளது. நாம் கிளிநொச்சி மாவட்டத்தில் 46 ஆயிரம் மாணவர்களதும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 ஆயிரம் மாணவர்களதும், மன்னார் மாவட்டத்தில் 40 ஆயிரம் மாணவர்களதும் பார்வை தொடர்பாகப் பரீட்சித்துள்ளோம்.

இவர்களில் கண்பார்வை தொடர்பான பிரச்சினைக்கு முகம் கொடுப்பவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணம், காரைநகர் பிரதேசத்தில் 275 மாணவர்களை கண் பார்வை தொடர்பான சோதனைக்கு உட்படுத்தினோம். அவர்களில் இருவர் மாத்திரமே பார்வை தொடர்பான பிரச்சினைக்கு முகம் கொடுத்திருந்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=102088&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.