Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையினில் இல்லாவிடின் சர்வதேச நாட்டினில் விசாரணை!! யாழ்.ஆயர் கோரிக்கை!!

Featured Replies

இறுதிப் போர் தொடர்பில் நம்பகமான விசாரணை தேவை. இந்த விசாரணை இங்கு நடத்தப்படாதுவிட்டால் வெளிநாட்டில் நடத்தப்படவேண்டும் என்று மக்களாகிய நாங்கள் விரும்புகின்றோம் என்று அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலிடம் தாம் வலியுறுத்தியதாக யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்று யாழ்ப்பாணத்திற்கான பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ்.மறைமாவட்ட ஆயரை ஆயர் இல்லத்தில் சந்தித்திருந்தார்.

 

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, அமெரிக்கக் குழு தாமும் ஜெனீவாவுக்கு பயணம் செய்யவுள்ளதாகவும் அங்கு எவ்வாறான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தனர்,அதற்கு நாங்கள் பதிலளிக்கையில்,

பிரதானமாக நடந்த போர் தொடர்பிலும் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய நம்பகமான ஒரு விசாரணை நடத்துவது அவசியம். அதன் மூலமே எவளவு பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள முடியும். இதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும், உயிரிழந்தவர்கள், வீடுகளை இழந்தவர்கள், விதவைகளாக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படவேண்டும். அவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும் எனவே இவற்றை எல்லாம் தீர்மானிப்பதற்கு ஒரு நம்பகமான விசாரணை தேவை. இந்த விசாரணை இங்கு நடத்தப்படாதுவிட்டால் வெளிநாட்டில் நடத்தப்படவேண்டும் என்று மக்களாகிய நாங்கள் விரும்புகின்றோம் என்று தெரிவித்தோம்.

 

இனங்களுக்கு மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை ஏற்படுத்துவதன் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்றும் அதற்கான முனைப்புகளை முன்னெடுக்கவில்லையா? என்று நிஷா எங்களிடம் கேள்வி எழுப்பிருந்தார். அதற்கு நாங்கள் பதிலளிக்கும் போது,

அரசாங்கம் தாம் விடுதலைப்புலிகளை ஒடுக்கவிட்டோம்,  இங்கு ஏற்பட்டிருந்த அனைத்து நெருக்கடிகைகளையும் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம். எங்களால் தான் இந்த வெற்றி வந்தது என்ற பெருமையோடு இருக்கிறார்களே ஒழிய நல்லிணக்கத்தினைக் கொண்டுவரவோ சமாதானத்தைக் கொண்டுவருவதற்கான யோசனையோ அவர்களிடம் இல்லை என்பதை அவருக்கு விளக்கினோம்.

இறுதியாக ஜெனீவாக்கூட்டத்தொடரில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

காணாமல் போனோர் தொடர்பில் மக்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். கண்களுக்கு முன்பாகவே எமது உறவுகளை கையளித்தோம், அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் தொடர்பில் அரசாங்கம் ஒரு பதிலை வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றதை அவரும் ஏற்றுக்கொண்டார். இதற்கு அரசாங்கத்தை வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்ததாக யாழ்.ஆயர் தெரிவித்துள்ளார்.

 

http://www.pathivu.com/news/29397/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்

சர்வதேச விசாரணை மூலமே தமிழ்மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும்! – நிஷா பிஸ்வாலிடம் யாழ். ஆயர்.

 

இலங்கை அரசின் உள்ளக பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லை என்றும் அரச சார்பில் இராணுவத்தினரே விசாரணைகளை மேற்கொள்வர் என்பதால், சர்வதேச விசாரணையின் மூலமாகவே தமிழ்மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்குமென தான் எதிர்பார்ப்பதாக யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். எனவே குற்றமிழைத்தவர்களே குற்றத்தை விசாரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசத்தின் மீதான இன அழிப்பிற்கு நம்பகரமான சர்வதேச விசாரணையே மேற்கொள்ளப்பட்ட வேண்டுமென இலங்கை வந்த அமெரிக்க குழுவினரிடம் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அமெரிக்காவின் ஆசிய, பசுபிக் விவகாரங்களுக்கான செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டு யாழ் ஆயரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது யாழ். ஆயர் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதும் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதும் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளே. இந்த இன அழிப்பினை செய்பவர்களே இதனை விசாரணை செய்வதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இங்கு போரில் புலிகளை வெற்றி பெற்றுள்ளதாக உள்நாட்டிலும் உலக அரங்கிலும் பறை சாற்றுகின்ற இலங்கை அரசு போரிற்குப் பின்னரான தற்போதைய நிலையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இதனை விடுத்து தற்போதும் போர் வெற்றியைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனால் இங்கு இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையோ அல்லது சமாதானத்தையோ ஒருபோதும் ஏற்படுத்த முடியாது. அத்தோடு ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள அமெரிக்க பிரேரணையில் குறிப்பாக காணாமல் போனவர்கள் தொடர்பிலான விடயம் உள்வாங்கப்பட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆகவே இதற்கமைய சர்வதேசம் நியாயமான தீர்வைப் பெற்றுத் தருவதன் மூலமாகவே தமிழ் மக்கள் இங்கு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடியதாக இருக்கும் என யாழ். ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=102692&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.