Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்முறைதான் வழிமுறையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்ச்சினிமா : வன்முறைதான் வழிமுறையா?
இவள் பாரதி

0a-Devar%20magan.jpg

தமிழ்ச் சினிமாவின் போக்கு நிஜ வாழ்க்கையைப் பாதிக்கிறதா என்றால் ஆம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. காட்சி ஊடகம் மிகப்பெரிய ஆயுதமாகிவிட்ட நிலையில் அதன் மூலம் வெளியாகும் வன்முறை இரசிகனின் மனத்தில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டாக்கிவிடுகிறது. தேவர்மகன் ரிலீசான பிறகு தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்ததும் அதற்கு உலகநாயகன் வருத்தம் தெரிவித்ததும் யாவரும் அறிந்ததே. தேவர்மகனைப் போல பல உதாரணங்கள் சொல்லலாம். எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் மிகக் குறைவாக இருந்த வன்முறைக் காட்சிகளும்அதற்கொத்த கதைகளும் ரஜினிகமல் வருகைக்குப் பிறகு மெல்ல அதிகரித்து இப்போது வன்முறையே இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணி விடும் அளவுக்கு வன்முறை பெருகிப் போயிருக்கிறது. 

 

காதலும் வீரமும் தான் தமிழனின் அடையாளம் என்றாகிவிட்ட நிலையில் இவை இரண்டையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் படம் எடுப்பது சாத்தியக் குறைவு எனும் பிம்பம் படர்ந்திருக்கிறது. இங்கே வீரமும் வன்முறையுங் கூட தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். வாள்போர்வில்போர் என்று போரில் தனது வீரத்தை வெளிப்படுத்திய சமூகம் சொந்த பிரச்சினைகளுக்காக ஊரையே பழிவாங்குவதும்தனது தேவைக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதும் வன்முறை எனக் கொள்ளப்பட்டால் நாம் இன்னும் காட்சி ஊடகத்தை சரியான கோணத்தில் பார்க்க வேண்டியுள்ளது அல்லது இன்னும் விசாலமான பார்வைக்கு நம்மை உட்படுத்த வேண்டும் என உணர்த்துகிறது.

 

வன்முறை என்பதையும் கூட சற்று ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆயுதங்களை எடுத்துச் சண்டையிடுவது ஒருவரைத் தாக்குவது மட்டுமே வன்முறை அல்ல. கருத்தியல் ரீதியான ஒவ்வாத மாற்றங்களைச் சமூகத்தில் திணிப்பதும் கூட வன்முறையின் களம்தான். 

 

நிழல் உலக வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறேன் என்று பெண் கடத்தல்தாதாயிசம்,பாலியல் வன்முறைபழிக்குப் பழி வாங்குதல் போன்ற கதைக் களங்கள் மூலம் அதிகம் உணரப்படுவது வன்முறைதான். இரண்டரை மணி நேரப் படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான் என்றோஇந்த நாயகனைப் போல நடந்து கொள்ளாதீர்கள் என்றோ அறிவுறுத்துவது எந்த அளவுக்கு மாற்றங்களை முன்னெடுக்கும் என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது. 

 

ஆனால் அதே சமயம் வன்முறையின் சாயல் அல்லாத படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்கபடாமல் போயிருக்கிறது என்பதையும் ஒத்துக் கொள்ளவேண்டும்.

0a-paruthiveeran.jpg

பாலாஅமீர்சசிக்குமார் ஆகியோரின் படங்களில் வன்முறையின் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. அது மக்களின் வரவேற்பையும் பெற்று ஊடகங்களின் பாராட்டுகளையும்விருதுகளையும் அள்ளிக் குவித்திருக்கின்றன. நந்தாபிதாமகன்,நான் கடவுள்அவன் இவன் ஆகிய பாலாவின் படங்களும்ராம்பருத்திவீரன் ஆகிய அமீரின் படங்களும்சுப்ரமணியபுரம் ஈசன் ஆகிய சசிக்குமாரின் படங்களும் ஆயுதங்களின் பின்னாலேயே பயணித்து வெற்றியின் பாதையில் சென்றன. 

 

இவர்களைத் தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுத்த இயக்குநர்களுங் கூட வசூலுக்காக அல்லது வேறு சில காரணங்களுக்காக அடுத்தடுத்து வன்முறை நிறைந்த கதைக்களங்களை நாடிச் சென்றனர்.   சுசீந்திரனின் முதல்படமானவெண்ணிலாகபடிக்குழு படம் நகைச்சுவையோடு கூடிய ரொமண்டிக் கதையைக்கொண்டதுஅவரது அடுத்தபடமான நான்மகான்அல்ல திரைப்படம்நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் எவ்வாறு வன்முறையின் பாதைக்கு இழுத்துச் செல்லப்படுகிறான் என்பதைப் பற்றியது. 

 

அதே போல் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற ரொமாண்டிக் படத்தை இயக்கிய கௌதம் மேனன் நடுநிசி நாய்கள் என்ற ஒரு படத்தைக் கொடுத்தது ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவதற்குப் பதில் அதிர்ச்சியையே வெளிக் கொணர்ந்தது. நம்மைச் சுற்றி இருக்கும் உலகம் இவ்வளவு மோசமானதா என்னும் எண்ணத்தை விதைப்பதாகவே இருந்தது. ஒரு பையன் தன் தந்தையின் தவறான செயல்பாடுகளால் மனரீதியாக 0a-NNN.jpgஉடல்ரீதியாக எவ்வாறு தனது செயல்களை அமைத்துக் கொள்கிறான்என்று காட்ட நினைத்துச் சமூகத்தில் இவ்வாறான பிரச்சினைகளும் மலிந்து கிடக்கின்றன என்பதற்குப் பதில் அந்த நிலையில் இருக்கும் ஒருவரை அது மேலும் தவற்றுக்குத் தூண்டிவிடுவதாகவே அமைகிறது. 

 

அப்படியானால் நல்லனவற்றையே எடுத்துக்காட்டி பிரசாரம் செய்ய சினிமாவை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமாஎன்றால் ஆம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில், எல்லாவற்றையும் விட காட்சி ஊடகம் அளப்பரியது. சில பல தந்திரங்களைத் திரையில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவர்களுக்கு ஒரு ரெஃபரென்ஸாக இருக்கிறது. 

 

மொழிஅங்காடித்தெருஅபியும் நானும்சிவா மனசுல சக்திபாஸ் என்கிற பாஸ்கரன்களவாணி போன்ற படங்களும் இதே சமயத்தில் வெற்றி பெற்றன. மக்களின் இரசனைகள் மாறி வருகின்றனவாஅல்லது இயக்குனர்களின் எண்ணம்மாறி வருகிறதாஎனும் கேள்விக்கு இருவராலும் பதில் சொல்ல இயலாது. 

 

ஏனெனில் வெற்றியின் சூத்திரம் அடிக்கடி மாறி வரும் வேளையில் சில விஷயங்கள் அபப்டியே மாறாமல்தான் இருக்கின்றன. இன்பம்துன்பம் இரண்டும் கலந்த வாழ்வோட்டத்தில் இளைப்பாறும் சற்று நேரத்திலாவது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒருபுறமிருக்கநிஜ வாழ்வில் ஆக்கிரமித்திருக்கும் அல்லது வெளியே தெரியாமல் இருக்கும் நிழல் உலகக் கதையையே திரையில் பார்த்து சந்தோஷப்படுவது என்பதும் மக்களின் இரசனை. 

 

நாம் பார்த்தறியாதகேட்டறியாத மாந்தர்களின் கதைகள்அவர்களின் வாழ்க்கை முறை இதையெல்லாம் ஆதரிக்கிற காலத்தில் நம்ப முடியாத த்ரில்லர் படங்களையும் இரசிக்கிறது மனம். லிங்குசாமியின் சண்டக் கோழி படத்தில் விஷாலின் அடிதடியைப் பார்க்கும்போது பரம்பரையாக வன்முறையின் ஜீன் கடத்தபடுகிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருப்பார்கள். 

 

கதாநாயகன் செத்துப் போவது அல்லது கதாநாயகி செத்துப்போவது அல்லது இருவரும் செத்துப் போவதுகதையின் முக்கியக் கதாபாத்திரம் செத்துப் போவது இப்படியான முடிவுகளைக் கொண்ட படங்களைத் திரைக்கதை ஓரளவு நன்றாக இருக்கும் பட்சத்தில் அது வெற்றிப் பெற்றுவிடுகிறது. பாலாஅமீர்சசிக்குமார் ஆகியோரின் படங்களில் இத்தகைய முடிவுகள் எழுதப்பட்ட சட்டம். 

 

சிறுவயதில் ஒரு குழந்தை அழுதுகொண்டே இருக்கும் போது உடன் சேர்ந்து நாமும் அழுதால் அழுகையை நிறுத்திவிடுகிறது. திடீரென எதிர்பாரா வேளையில் எதிரே இருப்பவரின் கன்னத்தில் அடித்துவிட்டு அந்த அதிர்ச்சியைப் பார்த்து இரசிக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கக் கூடிய வன்மம் தீர்க்கும் எண்ணத்தின் பிரதிபலிப்பே வன்முறையான கட்சியமைப்பைக் கொண்ட படங்களின் தொடர்ப் பயணத்திற்குக் காரணம். 

0a-mozhi.jpgஇதையும் கடந்து ராதாமோகன் போன்ற இயக்குனர்கள் மொழிஅபியும் நானும் போன்ற படங்களை எடுக்கும்போது மக்கள் ஆதரவு கொடுக்கத்தான் செய்கிறார்கள். ஆடுகளம் படத்தின் கதை வேறாக இருப்பினும், அதில் ஜெயபாலன் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதைப் போல காட்சியமைக்கப்பட்டிருந்தது. அங்காடித்தெரு படத்தில் நம்பிக்கையூட்டும் விதமான காட்சியமைப்பு இருந்ததே அந்தப் படத்தின் வெற்றி. ஆனாலும்அதில் வரும் இரண்டாவது கதாநாயகி இறந்து போவாள். இதில் ஒரு கதாபாத்திரம் புதிதாகப் பிறப்பது போல் வரும் காட்சிகளை விட இறந்து போவது போல் காட்டும்போது நாமும் பச்சாதாபத்துடன் இறங்கிவருகிறோம். இதையெல்லாம் வன்முறை என்று சொல்ல வேண்டியதில்லைதான். சமீபத்திய வெற்றியெனக் கொண்டாடப்படும் கோ படத்தில் இருக்கக்கூடிய விஷயமும் வன்முறைதான். அதன் மூலம் உருவாகும் பச்சாதாபம்தான்  படத்தின் வெற்றி.

 

வாழ்க்கையின் மிக அரிதான கணங்களைப் பதிவு செய்வதைவிட அதனூடே இழையோடும் சோகக் கணங்களைப் படம்பிடிப்பதையே மக்களின் இரச்னையும்,வெளிவரும் படங்களும் உணர்த்துகிறதோ என்ற சந்தேகம் அதிகரிக்கிறது. 

 

பசங்க என்ற படத்தை இயக்கி தேசியவிருதுக்கு வித்திட்ட பாண்டிராஜ் அடுத்துத் தொட்ட கதைக்களம் பழிவாங்குதலின் உச்சமான வம்சம் திரைப்படம். வன்முறை இல்லாமல் படம் எடுக்க இயலாதா என்பதற்குப் பதில் வன்முறையின்றி வெளியான படங்களைக் கவனித்தல் என்பதன் சதவீதம் குறைவு. ரேணிகுன்டாசிந்தனை செய்,யுத்தம் செய் போன்ற படங்கள் சொல்ல வருகிற விஷயத்தைக் கூர்ந்து கவனித்தால் நாம் எதை ஆதரிக்கிறோம் என்பது விளங்கும். 

0a-Pasanga.jpg

இதைப் போல ஈரம்யாவரும் நலம் போன்ற த்ரில்லர் படங்களும் மன வன்முறையை பிரதிபலிப்பதாக இருந்தன. இதற்கிடையில் யாரடி நீ மோகினிராமன் தேடிய சீதை,திண்டுக்கல் சாரதிபூ போன்ற படங்களும் வெற்றி பெற்றன எனும் போது பலதரப்பட்ட நல்ல கதையம்சம் கொண்ட படங்களை வரவேற்கும் மனநிலை நம்மிடம் இருக்கிறது. காதல்பாசம்உறவுச்சிக்கல்கள்வாழ்வியல் பிரச்சினைகள்வன்முறைபழிவாங்குதல் இவற்றில் காலங்காலமாய் ஊறித் திளைத்த வாழ்வியல் முறையில் பழிவாங்குதலுக்கும்வன்முறைக்கும்காதலுக்குமே அதிக மதிப்பெண் வழங்கபப்டுகிறது என்பதை மறுக்க இயலாது. 

 

ஆனால் சில விஷயங்களைத் தமிழ்ச் சினிமா இதுதான் நிஜம் எனக் கட்டமைக்க முயற்சி எடுக்கிறதோ என்ற அச்சமும் எழாமல் இல்லை. ஏனெனில், திரையில் வரும் கதாபாத்திரத்தில் ஒன்றாகத் தன்னை நினைத்துக் கொள்ளும் இரசிக மனம் அவனைப் போன்ற செயல்களில் ஈடுபடுவதை நியாயப்படுத்துகிறது. அரிவாள்வேல்கம்பு,கட்டை இல்லாத படங்களை விரல்விட்டு என்னகை காட்டிச் சொல்வதும் அரிது என்றாகிவிட்டது. பாடலும் அதற்கேற்ப ‘‘நான் அடிச்சா தாங்க மாட்ட‘‘ என்று மிரட்டுகிறது. 

 

புதிய களங்களைத் தேர்ந்தெடுக்கும் இயக்குனர்களை நாம் ஆதரிக்காத போது ஒரே களத்தில் உருவாகும் படங்களை நாம் கொண்டாடும் போது இந்த வன்முறையின் பயங்கரமும்பழிவாங்குதலின் தீவிரமும் நம்மையும் பீடித்தபடிதான் இருக்கப்போகின்றன. தமிழ்ச்சினிமா வன்முறையைக் கட்டமைக்க அதன் இரசிகர்களான நாமும் ஒரு காரணம் எனும்போது இனி என்ன செய்ய வேண்டும் என்பதையும் நாமேதான் முடிவு செய்ய வேண்டும். நாம் முன்னெடுக்கும் இரசனை மாற்றம் நிச்சயம் தமிழ்ச்சினிமாவின் இரசனையை மாற்றும். விதிகளைக் கட்டுடைக்கும்.

 

http://thangameen.com/Archieves/contentdetails.aspx?tid=406&iid=38

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.