Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனோருக்கு மரணச்சான்றிதழ்! இலங்கை அரசு மும்முரம்!!

Featured Replies

காணாமல் போனவர்களை மரணித்துவிட்டதாகத் தெரிவித்து அவர்களிற்கு மரணச்சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளினை இலங்கை அரசு மும்முரம் காட்டிவருகின்றது. அவ்வகையில் தொலைபேசி ஊடாகக் காணாமல் போயுள்ளோரது குடும்பங்களை அச்சுறுத்தி வரும் இலங்கைப் பாதுகாப்பு தரப்பினை சேர்ந்தவர்கள் தலா ஒரு இலட்சம் நஸ்ட ஈடு மற்றும் வேலை வாய்ப்புப் போன்றவற்றினை சலுகைகளாகக் கூறி வருவதாகத் தெரியவருகின்றது.

அண்மையில் மஹிந்தவினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்குழு வன்னியினில் விசாரணைகளை நடத்திக்கொண்டிருந்த நிலையில் மறுபுறத்தே அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அங்கு விசாரணைககென சமூகமளித்திருந்த மக்களை அருகாகவுள்ள கட்டமொன்றில் வைத்து காணாமல் போனோர் உயிரிழந்துவிட்டதாக மரணச்சான்றிதழைப் பெற நிர்ப்பந்தித்துள்ளது.எனினும் கணிசமான குடும்பங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்ட நிலையில் அவர்களது தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக்கொண்டுள்ள அரச  பயங்கரவாதக் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தற்போது அவர்களை தொலைபேசியினூடாக அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

காணாமல்  போயுள்ளவர்களது குடும்பத்தவர்களை எவ்வாறேனும் மரணச்சான்றிதழ்களைப் பெற வைப்பதுடன் அவர்களை வாய்  மூடவைப்பதே அரசினது நிகழ்ச்சி நிரலாகவுள்ளது. இலங்கை அரசிற்கு கடுமையான தலையிடியினைத் தருவதாகக் காணாமல் போனோர் விவகாரமே  இருந்து வருகின்றது. அத்தரப்புக்களை வாய் மூடவைக்கவே தற்போது இலங்கை அரசு மரணசான்றிதழை வழங்க முனைப்புக் காட்டிவருகின்றது.
குறித்த தரப்புக்கள் இரவு பகலென எம்மை அச்சுறுத்தி வருகின்றன. மரண சான்றிதழைப் பெற்றால் பிள்ளைகளிற்கு நல்ல கல்வி வேலை வாய்ப்பெனக்கூறி வருகின்றார்கள்.முதலில் மரணசான்றிதழைப் பெறுவதற்கு முன்னதாக அவர்கள் யாரால் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை அரசு சொல்லட்டுமென்கின்றன காணாமல் போனோரது குடும்பங்கள்.

 

http://www.pathivu.com/news/29419/85//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.