Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு குழுவொன்று நவநீதம்பிள்ளையின் அறிக்கை தயாரிப்பிற்கு பங்களிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் இலங்கை தொடர்பிலான அறிக்கைக்கு தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் உதவியளித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆறு பேரைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு குழுவொன்று நவநீதம்பிள்ளையின் அறிக்கை தயாரிப்பிற்கு பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.

சனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கலம் மக்ரே, தாருஸ்மன் குழுவின் யாஸ்மீன் சூகா, பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன், முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரி கோர்டன் வைஸ், சார்ள்ஸ் பெட்ரீ ஆகியோர் இவ்வாறு ஆதரவளித்துள்ளனர். எனவே இந்தக் குழுவினர் நவநீதம்பிள்ளைக்கு போலியான தகவல்களை வழங்கியுள்ளனர்.

போரின் போது 40,ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 47,ஆயிரம் வரையிலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு போதியளவான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் குறித்த பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சமூகபிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கை மனித உரிமையின் தற்போதைய நிலைகுறித்து அறிந்து கொண்டார்.

எனினும் கடந்த ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை விஜயம் குறித்த வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம்  எழுத்து ரீதியான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

 
 
 

இப்படி தான் ஆதாரமில்லாத சிங்கள புரளிகள் பரவுகிறது.

எமது ஊடகங்கள் மொழிபெயர்ப்பு செய்து கவர்ச்சி தலைப்பு வைத்துவிடுவார்கள்.

கூகிள் செய்தியில் சிறி லங்கா என்று தேடினால் பல தமிழர் பிரச்சினை செய்திகள் ஆங்கிலத்தில் வருகின்றன.

ஆனால் தமிழ் என்று தேடினால் ஒன்றும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.