Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பிரித்தானிய தமிழர் பேரவையின் தொடர்ச்சியான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பிரித்தானிய தமிழர் பேரவையின் தொடர்ச்சியான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு. video.png 

[Friday, 2014-02-14 12:05:28]
btf-150seithy.jpg

இலங்கை இனவாத அரசுகளினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட இன அழிப்பு, போர்குற்ற நடவடிக்கைக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி பிரித்தானிய பாராளுமன்ற உறுபினர்களை தொடர்ச்சியாக சந்திக்கும் நிகழ்சி நிரலை பிரித்தானியா தமிழர் பேரவை முன்னெடுத்து வருகிறது .

  

பிரித்தானிய வாழ் அனைத்து தமிழ் மக்களும் தாங்கள் வசிக்கும் தங்கள் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து எதிவரும் மார்ச் மாதம் ஐநாவில் நடைபெற இருக்கும் மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ளபட வேண்டுமென்றும், இன அழிப்பு தொடர்பான விசாரணையை சர்வதேச சமுகம் தவிர்த்து விட கூடாது எனவும் பிரித்தானிய பிரதமருக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இது சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு பிரித்தானிய தமிழர் பேரவையுடன் தொடர்புகொள்ளவும்.

இதன் ஒரு கட்டமாக Harrow West பகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் (Gareth Thomas MP) மற்றும் Ealing Southall பகுதி பாராளுமன்ற உறுப்பினர் ( Virendra Sharma MP)ஆகியோருடனான சந்திப்பு இடம் பெற்றது . இதன் காணொளி கிழே தரப்பட்டுள்ளது .

 

Gareth Thomas MP

 

 

Virendra Sharma MP

 

சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டி உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் மாபெரும் எழுச்சிப்போராட்டம்.

எதிர்வரும் 26ம் திகதி தாயகம் ,தமிழகம் , பிரித்தானிய மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் ஒருமித்த மாபெரும் எழுச்சிப்போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

பிரித்தானியாவில் மாலை நேரம் No 10 downing street பிரித்தானிய பிரதமர் டேவிட் கமேரோன் இல்லத்துக்கு முன்பாக எழுச்சிப்போராட்டத்தை நடத்த பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத நடவடிக்கைகள், இன படுகொலைகள் , நில அபகரிப்புக்கள் மற்றும் 2009 ஆண்டு மே மாதம் முல்லிவாய்க்காலில் 70,000 மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யபட்டமை போன்றவற்றிக்கு சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டி உணர்வுபூர்வமான எழுச்சியுடன் உலகமெங்கும் பரந்துவாழும் தமிழரின் மாபெரும் எழுச்சிப்போரட்டம் .அனைத்து பிரிதானிய வாள் தமிழ் மக்களும் ஓன்று திரள்வோம்.

பிரித்தானிய தமிழர் பேரவை

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103611&category=TamilNews&language=tamil

தமிழர் பேரவை மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.

தம் நேரத்தையும், காசையும் செலவழித்து முறிந்து வேலை செய்யும் எல்லா தொண்டர்களுக்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.