Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு, பெரிய உப்போடை பிரதேசத்தில் ஐந்தூரிய பூச்செடி வளர்ப்பு

Featured Replies

IMGA0112%20copy.jpg
-ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, பெரிய உப்போடை பிரதேசத்தில் வசிக்கும்; ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தரான சசிகலா ரட்ணகுமார் என்பவர் ஐந்தூரியம் பூச்செடிகளை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றார்.

1990ஆம் ஆண்டிலிருந்து இதில் ஆர்வம் காட்டிவரும் இவர்,  முதலில் ஒரேயொரு ஐந்தூரியம் பூச்செடியை வளர்க்கத் தொடங்கி தற்போது சுமார் கால் ஏக்கரில்  500 இற்கும் அதிகமான 23 வகையான ஐந்தூரிய பூச்செடிகளை வளர்த்துவருகிறார். சிவப்பு, றோஸ்,  வெள்ளையென பல வர்ணங்களில் துலங்கும் ஐந்தூரியம் பூங்காவிற்குள் நுழைந்தால் குட்டி நந்தவனமாக காட்சி தருகிறது.

இதனைத் தனது முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ள இவர், தினமும் 300 முதல் 1,000 ரூபாவரை இதன் மூலம்  சம்பாதிப்பதாக அவர் கூறுகிறார்.

இந்த பூச்செடிகளை தனியாகவும் பூச்சாடிகளிலும் வளர்த்துவருவதுடன்,  இவை  திருமண விழாக்கள்,  மரணச்சடங்குகள், வரவேற்பு வைபவங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் விற்பனையாவதாகவும் அவர் கூறினார்.

இவரது குட்டி நந்தவனத்தை பலரும்  பார்வையிட்டு வருகின்றனர்.
IMGA0114%20copy.jpg
IMGA0116%20copy.jpg
IMGA0118%20copy.jpg
IMGA0119%20copy.jpg
IMGA0123%20copy.jpg
 
 

மேலும் சில மட்டக்களப்புச் செய்திகள்.

 

ஊழியர்கள் போராட்டத்தால் வாழைச்சேனை காகித ஆலை முடக்கம்

 

கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களின் தொடர்ச்சியான பணிப் புறக்கணிப்பு காரணமாக மூன்று வாரங்களுக்கு மேலாக காகித உற்பத்தி தடைப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையில், சம்பளத்தை வழங்கக்கோரி ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப் புறக்கணிப்பு போராட்டம் இன்றுடன் 25வது நாளாக தொடர்வதையடுத்தே ஆலையின் உற்பத்தி செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன.

 

 

140215110458_srilankavalachenai_paper_fa

வாழைச்சேனை காகித ஆலை சொற்ப எண்ணிக்கை ஊழியர்களுடன் இயங்கிவருகிறது

 

60 வருடங்களுக்கு முன்னர் வைக்கோலை மூலப் பொருளாகக் கொண்டு காகித உற்பத்திக்காக ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை காகித ஆலையில் தற்போது கழிவு கடதாசிகளை மூலப் பொருளாகக் கொண்டு காகித உற்பத்தி நடைபெறுகின்றது.

வெளிநாடுகளிலிருந்து வரும் காகித இறக்குமதி, இயந்திரங்கள் பராமரிப்பின்மை மற்றும் போர்ச் சூழல் காரணமாக ஏற்கனவே ஆலை நஷ்டமடைந்துள்ள போதிலும் சொற்ப எண்ணிக்கை ஊழியர்களுடன் குறிப்பிட்ட வகை கடதாசி இங்கு உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு சந்தையிலும் விற்பனை செய்யுப்படுகின்றது.

ஏற்கனவே ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பணியாற்றிய இந்த தொழிற்சாலையில் தற்போது சில நூற்றுக் கணக்கான ஊழியர்களே பணியாற்றினாலும் மாதாந்த சம்பளத்திற்காக அவ்வப்போது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் தாம் ஈடுபபட வேண்டிய நிலை ஏற்படுவதாக ஊழியர்கள் கவலையும் விசனமும் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் 20ம் திகதி தொடக்கம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், இழப்பீட்டுத் தொகை வழங்கி தங்களை சேவையிலிருந்து விலக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது வெளிநாட்டு நிறுவனமொன்றிடம் ஆலை ஓப்படைக்கப்பட வேண்டும் என என்று கோருகின்றனர்.

காகித ஆலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் அரச வளங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அமைச்சர் அன்டன் தயாசிறித திசேராவின் பதிலை பெற முயற்சித்தபோது, அமைச்சர் தற்போது நாட்டிற்கு வெளியே தங்கிருப்பதாக அவரது அலுவலகத்திலிருந்து கிடைத்த பதில் மூலம் அறிய முடிந்தது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/02/140215_valachenaipaperfactory.shtml

 

கோட்டக்கல்லாறு ஸ்ரீ பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்

 

IMG_0008.JPG
-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு, கோட்டக்கல்லாறு ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று (14) ஓந்தாச்சிமடம் கடற்கரையில் இடம்பெற்றது. 
இதன்போது, எதிர்பாராத விதமாக அவ்விடத்தில் மாத்திரம் கடலலை மேலெழுந்து பக்தர்களையும் சுவாமியினையும், நனைத்தமை குறிப்பிடத்தக்கது.

பல்லாண்டு காலமாக இந்த கடற்கரையில் தீர்த்தம் ஆடி வருவதாகவும் இதுபோன்ற சம்பவம் இவ்வருடம்தான் நடைபெற்றுள்ளதாகவும்  ஆலய நிர்வாகம் தெரிவித்தது.

இது பிள்ளையாரின் அருளே என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
IMG_0018.JPG
IMG_0056%282%29.JPG
 

 

Edited by Athavan CH

சசி அக்கா இந்த சிறு தொழிலை வேறு பெண் அமைப்புகளுக்கு பரப்பினால் இன்னும் நன்றாக இருக்கும்.

பூந்தோட்டத்தின் அழகோ அழகு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.