Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின் அடையாளச் சின்னமாக முள்ளிவாய்க்கால் முற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

தமிழ்நாடு தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பதற்கு அயராது உழைத்தவர்களில் ஒருவரும் தமிழின உணர்வாளருமான முனைவர் திரு.ம.நடராசன் அவர்கள் கடந்த 19.01.2014 அன்று பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, ஊடக இல்லம் ஆகியன இணைந்து செவரோன் மாநகரத்தில் நடாத்திய தமிழர் திருநாள் நிகழ்வில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் எழுதிய முள்ளிவாய்க்கால் (குருதிதோய்ந்த குறிப்புகள்), உயிருக்கு நேர் (தமிழ்மொழிப்போர் பின்புலத்துடன்) என்ற இரண்டு புத்தகங்களும், தமிழீழம் என்ற வீடியோ ஆவணப்படமும் அங்கு வெளியிட்டு வைக்கப்பட்டன. இதன்போது ஊடக இல்லத்திற்கும் வருகைதந்திருந்த முனைவர் திரு.ம.நடராசன் அவர்கள் பல விடயங்களையும் எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

ஊடக இல்லம்:- சரித்திர நிகழ்வான தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற திறப்பு நிகழ்வின் பின் பிரான்சுக்கு வருகை தந்துள்ளீர்கள். அதன் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

nada%20mut%201.jpg

நடராசன்:- முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஒரு கரு ஐயா நெடுமாறன் அவர்களின் மனதிலே எழுந்தபோது, அதனை எப்படி உருவாக்குவது என்ற ஒரு திட்டத்தை என்னிடம் கொடுத்தார்கள். ஓவியர் சந்தானம் அவர்கள் வரைந்த ஓவியங்கள் இருபதுக்கு இருபது அடி, இருபதுக்கு முப்பது அடி, இருபதுக்கு பதினைந்து அடி ஆகிய அளவுகளில் ஸ்தூபிகளாக நிறுவி, சிறீலங்கா அரசு தமிழர்களை அழிக்கப் பயன்படுத்திய டாங்கி ஒன்றை வைத்து தமிழர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள் என்பதைச் சித்தரித்து ஸ்தூபியாக நிறுவியிருந்தார்கள்.

இதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வின்போது, வைகோ, ஐயா நெடுமாறன், நல்லக்கண்ணு மற்றும் நான் இணைந்து ஆரம்பித்துவைத்தோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2010 யூன் 5 அன்று இந்த அடிக்கல் நாட்டு நிகழ்வைச் செய்தோம். அதனோட திட்டம் அவ்வளவுதான். எனக்கு அந்தப் படத்தில் உடன்பாடு இல்லாமல் மெல்ல மெல்ல அதனை மாற்றி அமைத்து, முத்துக்குமார் உட்பட ஈழத்தமிழர்களின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை மாய்த்துக்கொண்ட இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 20 பேர்களுக்கு கருங்கல்லினால் ஆன சிற்பங்களை உருவாக்கினோம். மிகவும் சிரமப்பட்டுத்தான் அதை எடுத்துவந்தோம். 26 ரயர்கள் பூட்டிய பெரிய வாகனத்தில் அதனை எடுத்துவந்து, 3 பாரம் தூக்கிகள் மூலம்தான் அதனை இறக்கி வைத்தோம். 80 தொன் உள்ள ஒரே கல்லை வடித்து 50 தொன்னாகக் குறைத்து தமிழ்த்தாய் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பக்கத்தில் 20 பேர் அடங்கிய சிற்பங்கள் ஒரே கல்லாக வைக்கப்பட்டுள்ளது. இடது பக்கத்தில் தமிழ் மக்கள் மீது இரசாயனக் குண்டுகள் வீசப்பட்டு, பனைமரங்கள் எல்லாம் எரிந்து சரிந்து வீழும் காட்சி மற்றும் மக்கள் தலைசிதறுண்டு படுகொலை செய்யப்பட்ட கோரக் காட்சி தத்ருபமான சிற்பமாகக் கல்லிலே வடிக்கப்பட்டு அங்கு அமைத்துள்ளோம். முள்ளிவாய்க்கால் அழிவு, இந்தியாவில் தமிழர்கள் மடிந்தமை என இரண்டு பக்கமும் அமைத்துள்ளோம். இவற்றைப் பார்த்து அந்தத் தமிழ்த்தாய் கண்ணீர் வடிப்பது போன்ற தோற்றம் உள்ளது.

தமிழ்த்தாய் சிலைக்கு அடிப்பகுதியிலே முள்ளிவாய்க்காலில் குருதிதோய்ந்த வீரமண் அங்குவைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பக்கத்தில் மாவீரனைப் பெற்ற அன்னையின் சாம்பலும் வைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு புனிதமான இடமாகக் கருதி மக்கள் பார்வையிட்டுவருகிறார்கள். அதனை முடிக்கின்ற போது, திறப்புவிழாவிற்கு முன்னதாக மத்திய அரசும் மாநில அரசும் அதாவது மத்திய அரசை சிறீலங்கா தூண்டி, மாநில அரசை மத்திய அரசு தூண்டி, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டால் தமிழகத்தின் எதிர்ப்பு இன்னும் அதிகமாகும். எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் சொல்ல, அதேபோல இந்திய அரசும் தங்களுக்கும் தங்கள் கட்சிக்கும் தேர்தல்களில் இது பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் இறையாண்மைக்கு இது சவாலாக அமையும் என்றெல்லாம் அவர்கள் சொல்ல, மாநில அரசும் வேறுவழியின்றி அதனை ஏற்றுத் தடங்கல் விளைவிக்க வந்தபோது, நாங்கள் அந்தத் தடங்கலை வெற்றிகரமாக முறியடித்து, உயர்நீதிமன்றத்தின் நேர்மையான மாண்புமிகு நீதியரசர்களின் உத்தரவைப்பெற்று, நாங்கள் அதன் தொடக்க விழாவைச் சொன்னோம். 8 ஆம் திகதி திறக்கவேண்டியதை முன்னதாகவே 6 ஆம் திகதி திறந்துவிட்டோம். உயர்நீதிமன்றத்தின் முடிவைவைத்துக்கொண்டே திறந்துவிட்டோம். காரணம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு சாதகமாக அமையாவிட்டாலும் பரவாயில்லை என்பதைக் கருதியே அவ்வாறு செய்தோம். ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அப்படித்தான் இந்த நெருக்கடிகளை எல்லாம் மிகவும் சாதுரியமாக பெரிய பொருட்செலவில் எதிர்கொண்டோம். மூன்று நாட்களில் இரண்டு பெரிய வழக்குகளையும் சந்தித்து 6 ஆம் nada%20mut%202.jpgதிகதி திறந்து, பின்னர் திட்டமிட்டபடி 8 ஆம் 9 ஆம் திகதிகளில் அழைக்கப்பட்ட அத்தனை பெரிய அறிஞர்கள் தலைவர்களை வைத்து அந்தக் கூட்டத்தை நடத்தினோம். ஒரு தனி அரசியல் கட்சி நடத்தமுடியாத அளவிற்கு மிகப்பெரிய ஒரு மாநாட்டுத்திடலை அமைத்து அங்கு நடத்தி முடித்தோம்.

ஐயா திட்டம்போட்டது, முள்ளிவாய்க்கால் முற்றத்தினைத் திறந்துவிட்டு, தஞ்சையிலே தமிழரசி மண்டபத்திலே கூட்டத்தை வைப்போம் என்று சொன்னார்கள். நாம் இங்கிருந்து அங்கு போவதும் வருவதும் மிகச்சிரமம் என்ற காரணத்தால் அருகிலேயே ஏழு ஏக்கர் நிலத்தை வாங்கி 15 ஆயிரம் கதிரைகளைப் போட்டு, 20 ஆயிரம் பேர் நிற்பதற்குமான மண்டபத்தை அமைத்து அந்த இடத்திலே கூட்டமேடையை அமைத்தோம். தடைகளையும் தாண்டித் தொடங்கிவிட்டோம். தொடங்கிய பின்னர் மூன்று நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது, முதல் நாள் நிகழ்வில் பேசிய தலைவர்கள், நேரம் கடந்து பேசியதனால் சில சிக்கல்களை எதிர்கொண்டோம். 

ஊடக இல்லம்:- முள்ளிவாய்க்கால் முற்றம் உடைக்கப்பட்டதாக செய்திவந்தபோது உலகத் தமிழ் மக்களின் மனங்களும் உடைந்து போனது அதுபற்றி?

நடராசன்:- அதற்கு அரசாங்கத்தை மட்டும் குறைசொல்லுவது தவறு, நம்மிடத்தே உள்ள குறைபாட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள் தமிழ்நாட்டுத் தலைவர்கள். 10 மணிக்கு முடிக்கவேண்டிய உத்தரவு இருக்கின்றது பார்த்துக்கொள்ளுங்கள் என்று நான் சொன்னேன். ஆனால் எல்லோரும் மீறிவிட்டார்கள். அதனால்தான் சில சிக்கல்கள் எழுந்தன. அரசாங்கம் நம்மை மீறிச் செய்கிறார்கள் என்று தடங்கல் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. பேசியவர்கள் சில வரைமுறைகளைத்தாண்டி வார்த்தைகளைப் பயன்படுத்தியதன் காரணமாக அதாவது, உடைப்பீர்களா உடைத்தால் இடுப்பை உடைப்போம் என்று எல்லாம் பேசியது, அரசாங்கத்திற்கு ஆத்திரத்தை உண்டுபண்ணி, முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பாதுகாப்புச் சுவரை அதாவது அவர்களின் பகுதிக்குள் இருந்த சுவரை உடைத்தார்கள். கடந்த பொங்கல் விழாவில் நான் கலந்துகொண்டபோது, ஒரு தாயார் கேட்டார், எதிர்காலத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்துவிடுவார்களோ என்று. இது எனக்கு மிகவும் கலக்கமாக இருந்தது. அதற்கு நான்சொன்னேன், `யாரும் இடிக்க முடியாது, இது நம்முடைய இடம். நாம் கஸ்டப்பட்டு வாங்கிக் கட்டிய இடம். இதை யாராலும் இடிக்கமுடியாது. கவலைப்படாமல் இருங்கள். நாங்கள் பார்த்துக்கொள்வோம்’ என்று.

அந்தளவிற்கு கஸ்டப்பட்டு அதைச் செய்தோம். இதில்  பலரது ஒத்துழைப்பு இருந்தது. வெளிநாட்டவர்களின் ஒத்துழைப்பு நாங்கள் வேண்டாம் என்று சொல்லியும் சிலர் தாமாகவே முன்வந்து செய்துள்ளனர். பாரிசில் இருந்தும் கனடாவில் இருந்தும் ஏனைய பகுதிகளில் இருந்தும் கொடுத்துள்ளதாக செவிவழிச் செய்தியாக எனக்குக் கிடைத்தது. அதைவிட நாம் உள்ளநாட்டிலேயே எல்லாக் கஸ்டங்களையும் பட்டு செய்துமுடித்து விட்டோம். ஒரு நூறு பேரை வைத்துக்கொண்டு முற்றத்தைத் திறந்துவைத்தபோது, ஒரு சுகப்பிரசவம் இடம்பெற்றதைப்போன்ற ஒரு நிலையைத்தான் நான் உணர்ந்தேன். ஒரு நல்ல பிரசவம் நிகழ்ந்ததும் ஒரு தாய் பல நாள் சுமந்து கஸ்டப்பட்டுத் தாங்கிய குழந்தையை பெற்றெடுக்கின்றபோது, என்ன உணர்வு ஏற்படுமோ அதே உணர்வுதான் எனக்கும் ஐயா நெடுமாறனுக்கும் ஏற்பட்டது.

அதன்பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகள் எமக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. வெளியில் இருந்து பார்ப்பவர்கள். அப்படிச்செய்துவிட்டார்களே, இப்படிச்செய்துவிட்டார்களே என்று விமர்சித்தார்கள். அதுபற்றியே எந்த அக்கறையும் இல்லாமல் நாங்கள் அந்தப் பிரச்சினைகளை எல்லாம் மிக இலாவகமாக சந்தித்தோம். அதற்குப்பிற்பாடு ஐயா நெடுமாறன் அவர்கள் 8 நாட்களும் நான் 82 நாட்களும் சிறையில் இருந்தோம். நான் விளையாட்டாக `ஐயா 8 நாட்கள், நான் 82 நாட்கள், மீதி 10 நாட்கள் நீ உள்ளே இருந்திட்டு வா’ என்று சீமானைப் பார்த்து சொன்னேன். அந்தளவிற்கு நாங்கள் அவற்றை எளிமையாக எடுத்துக்கொண்டோம். ஏனென்றால் நோக்கம் நிறைவேற்றிவிட்டோம். அதிலே எனக்கு கஸ்டம் வந்திருக்கலாம். ஐயாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. திறப்பு விழாவரைக்கும் தாங்குவாரோ என்ற சந்தேகம் கூட எனக்கு ஏற்பட்டது. அந்தளவிற்கு கஸ்டப்பட்டு அவர் இராப் பகலாக அங்கேயே தங்கியிருந்தார். நான் வெளியெல்லாம் சுற்றி அதை இதை என்று வாங்கிவருவதும், அவர் அங்கேயே இருந்து ஒவ்வொரு படங்களையும் எங்கே வைப்பது. படம் வரைவது என முழுப்பொறுப்பையும் அவரே எடுத்துக்கொண்டார். எந்தெந்தத் தலைவர்கள், மாவீரர்கள் படங்கள் என்று எவற்றையும் விடாது வைக்கவேண்டும் என்று கவனமாக இருந்தார். இவ்வளவு செய்தபின்னரும் காமராயரை வைக்கவில்லை, பெரியாரை வைக்கவில்லை என்றெல்லாம் சொல்றாங்க.

மிகவும் அற்புதமான ஒரு வரலாற்றுச் சின்னம். இன்னும் சொல்லப்போனால் தமிழின் அடையாளச் சின்னமாக முள்ளிவாய்க்கால் இப்பொழுது அமைக்கப்பட்டுள்ளது. அதிலே எங்களுடைய பணி முடிந்துவிட்டது. நாம் மக்களுக்கு ஒப்படைத்துவிட்டோம். வருங்கால சமூகத்துக்கு ஒப்படைத்துவிட்டோம். அவர்களின் கையில் இதனுடைய பாதுகாப்பும் இதனைத் தொடர்ந்து கொண்டுசெல்லவேண்டிய தொடர் நடவடிக்கைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் சமர்ப்பணம் செய்துவிட்டோம் என்று ஐயா சொன்னார்கள் அதுதான் உண்மை. அத்தோடு எங்கள் பணி முடிந்துவிட்டது என்பதல்ல. அந்தப் பொறுப்புகளை இளைஞர்கள் வருங்கால சமூகத்தினர் ஏற்று நடத்தவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதற்காக இவ்வாறு சொல்லப்பட்டது. மெல்ல மெல்ல மக்கள் வந்து பார்வையிட்டுச்செல்லும் மதிப்பும் மரியாதைக்கும் உரிய இடமாக அது மாற்றப்பட்டுள்ளது.

அங்கு வருகின்ற சின்னக் குழந்தைகள் கூட எல்லாவற்றையும் பார்த்துவிட்டு பாலச்சந்திரனின் சிலையைப் பார்த்து அழுதுவிடுகிறார்கள். அங்குசென்று அழாதவர்கள் யாருமில்லை. பார்த்துவிட்டு வெளியில் வருபவர்களின் மனதில் ஏற்படும் விம்மல்கள் சொல்லமுடியாதவை. கதவை செய்த தச்சுத்தொழிலாளி, அதில் பொறிக்கப்படவேண்டிய படத்தைக் காட்டியதும், தனக்கு இரவு முழுதும் தூக்கமில்லை என்று குறிப்பிட்டார். பார்ப்பவர்கள் அனைவருக்கும் அந்த உணர்வுதான். வெளிநாட்டில் இருந்து வந்த டாக்டர் இந்துமதி, இலங்கையில் இருந்து வந்த ‘உதயன்’ பத்திரிகை ஆசிரியர் அவர்கள் எல்லாம் பார்த்துவிட்டு, கண்கலங்கினர். ‘நீங்கள் அங்கேயே இருந்து பிரபாகரன் பக்கத்தில் இருந்து போர் நடவடிக்கை எல்லாம் பாரத்தவர்கள், நீங்கள் கண்கலங்கலாமா’ என்று கேட்டேன்.

‘இல்லை நான் தொலைதூரத்தில் இருந்து தொலைக்காட்சியில் பார்த்ததற்கும் நேரில் பார்த்ததற்கும் நிறைய வேறுபாடு உள்ளது’ என்றுகூறும் அளவிற்கு இது ஒரு பெரிய நிகழ்வாக தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தப்போகின்ற நிகழ்வாக அமைந்துவிட்டது. அந்தத் திருப்புமுனை எந்த உருவத்தில், எக்காலத்தில், யாரால், எப்படி வெடிக்கும் என்று எம்மால் ஊகிக்க முடியாது.

(தொடரும்)

சந்திப்பு: கந்தரதன்  

படங்கள்: சுபன், சோழ.கரிகாலன்

 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் அருமை. முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைத்தற்கு நன்றி. ஆனால் அது மிக குறுகிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று (15.02.2014) நடந்த திமுக வின் மாநில மாநாடு 250 ஏக்கரில் அமைக்கப்பட்ட மாபெரும் கொட்டகையில் நடைபெற்றது. அதுபோன்று நடராஜன் ஒரு பெரிய இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைத்திருக்கலாம். அதனால் தமிழ் தேசிய கட்சிகளின் ஒரு கூட்டம் நடைபெறும் இடமாகவும் இதனை வடிவமைத்திருக்கலாம். அதனை விட்டு ஒரு சிறிய இடத்தில் அமைத்து விட்டு நான் அமைத்தேன் என விளம்பரம் செய்வது நேர்த்தி இல்லையே. வடிவமைத்தவர்களை பாராட்டி ஒரு பெயர் பட்டியல் அங்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையே ஏன்??? நடராஜன் ஒரு கருவி, நெடுமாறன் ஒரு கருவி, சந்தானம் ஒரு கருவி மற்றவர்கள் .....யாரும் இல்லையோ? ஒன்றும் இல்லாமல் இருப்பதற்கு இப்பொதிருப்பது நலம். இன்னும் விரிந்த பார்வை வேண்டும். பழங்கால கோயில்களை பாருங்கள். ராசராசனின் தஞ்சை பெரிய கோயில் ஒரு எடுத்துக்காட்டு. தமிழர் உழைப்பான திருமலை திருப்பதியைப் பாருங்கள், தமிழனின் காளகஸ்தியைப் பாருங்கள் புரியும்......

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.