Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமலஹாசன் சொல்கிறார் -”போர்னோகிராபியால் தான் இன்டர்னெட் வளர்ந்தது”..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கமலஹாசன் சொல்கிறார் -”போர்னோகிராபியால் தான் இன்டர்னெட் வளர்ந்தது”..!!

—–

ஒவ்வொரு முறை தன் படம் வெளிவரும்போதும்,

எதையாவது ஏறுமாறாகச் சொல்லி அல்லது செய்து,

செலவில்லாமல் பப்ளிசிடி தேடும் கமல் இந்த முறையும்

அதே டெக்னிக்கை கையாள்கிறார்.

விஸ்வரூபம் பார்ட்-2 ரெடி என்று பலமுறை தெரிவித்தும்

எதிர்பார்த்த பரபரப்புகள் எதுவும் கிளம்பாத நிலையில்,

கமலஹாசன் பல சர்ச்சைக்கிடமான கருத்துக்களை

புதிதாக ஒரு பேட்டியில் கூறி இருப்பதன் மூலம்  பரபரப்பிற்கான

சூழ்நிலைக்கு வித்திட்டிருக்கிறார்….!

இதுவாவது அவருக்கு கை கொடுக்குமா..?

Best of Luck Kamal …!

kamal-with-savithri.jpg?w=640

நேரமில்லாதவர்களுக்கு சுருக்கமாக 

தலைப்புச் செய்திகள் -

காந்தியும், பெரியாரும் சினிமாவுக்கு பெரும்

அநீதி இழைத்து விட்டார்கள் .. !

திராவிட இயக்கங்கள் சினிமாவை பயன்படுத்தி

தாங்கள் முன்னேறியதோடு சரி ..!

சினிமா பிரபலமாக இருந்தாலும், அதற்குள்ள

மரியாதையை இழந்து விட்டது ..!

இன்றைக்கு யார் வேண்டுமானாலும் சினிமாவை

உருவாக்க முடியும் ..!

நான் பரிசோதனை முயற்சிகளை குறைத்துக்

கொண்டதற்கு காரணம் நான் செய்திருக்கும் முதலீடு !

இன்டர்னெட் தேடுபொறிகள் வலுவடைந்ததற்கு 

காரணம் அறிவியல் இல்லை – போர்னோகிராபி !

ஜெயகாந்தனுக்கும், பெரியாருக்கும் இருந்த

கருத்து சுதந்திரம் கூட கமலுக்கு கிடையாது !

ஏன் -(கி)வீரமணிக்கே கருத்து சுதந்திரம் கிடையாது !!!

சகிப்புத்தன்மை இன்மை என்பதே இங்கு 

கலாச்சாரமாக இருக்கிறது !

ஸ்பார்டகஸ் ஜெயித்திருந்தால் -

ஏசு கிறிஸ்துவுக்கும்- கார்ல் மார்க்ஸுக்கும்

வேலை இருந்திருக்காது..!

கமல் காப்பி அடிப்பதாக குற்றம் சாட்டுகிறீர்கள் -

இங்கு யார் தான் காப்பி அடிப்பதில்லை ?

தமிழ் சினிமாத் துறையில் படம் பண்ணுவது

முறையற்ற பாலுணர்வு புணர்ச்சியாக இருக்கிறது.. !!

நான் ஒழுங்காக வரி கட்டுகிறேன்.

கருப்புப் பணத்தை கையால் தொடுவதில்லை.

எல்லாரும் இதுபோல் ஒழுங்காக வரி செலுத்த வேண்டும் !!!

—————————

நேரம் இருப்பவர்கள் பேட்டியின் சுருக்கத்தை கீழே

படிக்கலாம். இயன்ற வரை கமல் கூறிய சொற்களின்

அடிப்படையிலேயே சுருக்கி மொழி

பெயர்க்கப்பட்டிருக்கிறது.

(அடைப்புக்குறிக்குள் இருப்பவை மட்டும் 

எரிச்சலை வெளிப்படுத்தும் என் விளக்கங்கள் !)

- இந்திய சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி

frontline ஆங்கில இதழுக்கு கமல் அளித்துள்ள 

பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே -

——————————-

குழந்தையாக இருக்கும்போதே சினிமாவிற்கு வந்த

நான் இதை எப்படி நினைவு கூர்கிறேன் …?

ஒருவன் முதல் முதலில் பள்ளிக்குச் சென்றதை,

முதல் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டதை,

சுன்னத் செய்து கொண்டதை – 

எப்படி உணர்வானோ அப்படி…

என் அபிப்பிராயத்தில் திரைப்படம் என்பது துவக்கத்தில்

மரியாதையை பெற்றிருந்தது. பிறகு தற்போது அதனை

இழந்து விட்டது.

காந்தி தான் என்னுடைய கதாநாயகன் என்றாலும் – 

அவரால் சினிமாவிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது.

ஏனெனில் பெரும் தீர்க்க தரிசனம் உடைய காந்திக்கு

சினிமாவைப் பிடிக்காமல் போய் விட்டது.

பெரியாரும் சினிமாவை விரும்பியதில்லை.

முல்லாக்கள் சினிமாவைப் பற்றி என்ன மனப்பான்மை

கொண்டிருந்தனரோ அதே மனப்பான்மையை காந்தியும்

கொண்டிருந்தார்.

(“Cinema is a sinful technology,” என்று

காந்திஜி நவம்பர் 12, 1927-ல் ஒரு கேள்விக்கு 

பதில் அளிக்கையில் கூறி இருக்கிறார். இது தான்

அவர் செய்த பெரிய பாவம் ! கூடவே -

I should be unfit to answer your 

questionnaire as I have never been

to a cinema…. But even to an outsider,

the evil that it (cinema) has done

and

it is doing is patent.

The good, if it has done at all, 

remains to be proved.”

என்றும் சொன்னார். அத்தோடு சரி. அதன் பின்னர்

அவர் அதுகுறித்து எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை.

கமல் பிறப்பதற்கும் முன்னர் காந்திஜி கூறிய கருத்து 

அது…!இந்த கருத்தைக் குறித்து தான் கமல் 

வருத்தப்படுகிறார் !)

திராவிட இயக்கங்கள் சினிமாவை பயன்படுத்திக்

கொண்டது குறித்து …

திராவிட இயக்கம் சினிமாவை பயன்படுத்திக்கொண்டது

ஆனால் அவர்கள் வெற்றி பெற்றபிறகு, திராவிட

இயக்கத்தை வெற்றிகரமாக மாற்றிய அனைத்தையும்

பரிகாசம் செய்தனர். அவர்களை வெற்றிகரமாக ஆக்கிய

அனைத்து வழிகளையும் கேலி செய்தனர்.பேச்சுத் திறமை

கேலி செய்யப்பட்டது. வழிவகைகள் கேலி செய்யப்பட்டன.

இது வடக்கிலிருந்து துவங்கியது.

சினிமா தன் மரியாதையை இழந்தாலும், பிரபலமாகிக்

கொண்டு தான் இருக்கிறது. இன்றைய இண்டர்னெட்

உலகத்தில் யார் வேண்டுமானாலும் தங்களது சொந்த

சினிமாவை உருவாக்க முடியும்.

சூது கவ்வும், அட்டகத்தி போன்ற படங்களை உருவாக்கிய

புதிய தமிழ்ப்பட இயக்குநர்களை இந்தவிதமானவர்கள்

என்று கூறலாமா என்றால் -

சினிமா ஏற்கெனவே சாதாரண மனிதனின் கைக்கு வந்து

விட்டது. யார் வேண்டுமானாலும் இப்போது ஒரு 

கதாசிரியராகவோ, இயக்குநராகவோ முடியும். சினிமா

எடுப்பது இனியும் கடவுளால் அருளப்பட்ட அற்புதமாக

இருக்காது. ஆர்வம் உள்ள எவரும் படம் எடுக்கலாம்.

1970களில், பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா

போன்றவர்கள் சினிமாவை ஸ்டூடியோவிற்கு வெளியே,

கிராமங்களுக்கு கொண்டு போனார்கள். நன்றாக 

உருவாகிய இந்த புதிய பாதை பின்னர் “சகலகலாவல்லவன்”

“முரட்டுக்காளை” என்று அடைபட்டு நின்று விட்டதே

என்று கேட்டால் -

இது நடக்கத்தான் செய்யும். இது வியாபார இடையூறு.

வியாபாரம் இல்லாமல் சினிமா எடுக்க முடியாது.

நான் பரிசோதனை முயற்சிகளைக் குறைத்துக் கொண்டேன்

என்றால் அதற்கு காரணம் நான் செய்யும் பெரிய முதலீடு !

இதை அரசாங்கம் தான் கவனிக்க வேண்டும்.

(அதாவது அரசாங்க உதவி கிடைக்கவில்லை

என்றால் கமர்ஷியல் சினிமாக்கள் தான் வரும் என்கிறார்.

சினிமா எடுப்பது மிகச்சுலபம் – சூது கவ்வும் மாதிரி

படங்களை யார் வேண்டுமானாலும் எடுக்கும் அளவிற்கு

அது சகஜமாக, சுலபமாகி விட்டது

என்று கூறுபவர் ஆண்டுக்கு இரண்டு குறைந்த பட்ச

பட்ஜெட்டில் ஒரு கோடியிலோ, இரண்டு கோடியிலோ

படம் எடுக்க முடியாதா என்ன ?

100 கோடியில், குடியிருக்கும் வீட்டை அடகு வைத்து

சினிமா எடுத்திருக்கிறேன். ஓடவில்லையென்றால்

நடுத்தெருவிற்கு வந்து விடுவேன் – இல்லையென்றால்

வெளிநாட்டிற்கு போய் விடுவேன் என்றெல்லாம்

புலம்பியது ஏன் ? )

இன்று நாம் குழந்தைகளுக்கென்று படங்கள் எடுப்பதை

நிறுத்தி விட்டோம். “எல்லாரும் பார்க்கக்கூடிய”

படங்களைத்தான் எடுக்கிறோம். இல்லையென்றால் 

வர்த்தக ரீதியில் அவை வெற்றி பெறுவதில்லை !

அடுத்து -

இன்றைய வலைத்தள நுண்ணறிவு உலகத்தில்

தினசரி வாழ்க்கையில் போர்னோகிராபியும் ஒரு

அங்கமாகி விட்டது …!

இன்டர்னெட் தேடுபொறிகள் ( search engines)

மேலும் மேலும் சக்தி வாய்ந்தவையாக உருவாகிறது 

என்றால் அதற்கு காரணம் -

விஞ்ஞானமோ, அறிவியலோ இல்லை …

சதைத் தேடல் …!!! ( it is not due to

science – it is due to flesh ..!

simple need to watch flesh ..!))

(இவரது கூற்றின்படி, இன்டர்நெட்டில் தேடுபொறிகளைப்

பயன்படுத்துபவர் அனைவரும் போர்னோகிராபி 

வலைத்தளங்களைத் தான் தேடுகின்றனராம் ..!)

அடுத்து -

இங்கு அரசியல் சுதந்திரம் இல்லை.

பெரியார் காலத்தில் இருந்த அரசியல் சுதந்திரம் கூட

கமலஹாசனுக்கு கிடையாது. நீங்கள் தைரியமானவராக

இருந்தால் கூட உங்களுக்கு சுதந்திரம் கிடையாது !

(திராவிடர் கழகத் தலைவர்) வீரமணிக்கு கூட 

அந்த சுதந்திரம் இல்லை. நாம் எல்லைகளை

மேலும் மேலும் இறுக்கிக்கிட்டே வர்றோம்.

( சுதந்திரம் ஏன் இல்லை ? எல்லாருக்கும் சுதந்திரம் 

இருக்கிறது. இன்றும் வீரமணியும், கலைஞரும்

எந்த அளவிற்கு வேண்டுமானாலும் பேசத்தான் 

செய்கிறார்கள். கமல் தனக்கு அந்த சுதந்திரம்

இல்லை என்று நினைத்தால் அதற்கு காரணம் அவர்

அந்த சுதந்திரத்தை வியாபாரமாக்க – காசாக்க -

நினைப்பதால் தான். அவர் தன் சுதந்திரத்தை

சினிமாவில் தான் காட்ட வேண்டுமென்று ஏன் நினைக்க

வேண்டும் ? என்ன வேண்டுமானாலும் அவர் பேசுவதை

யார் தடுக்க முடியும் ? ஏன் -இந்த பேட்டியிலேயே

அவர் நினைப்பதை எல்லாம் கூற முடியவில்லையா ?)

‘மெட்ராஸ் கபே’ கதை இலங்கைப் பிரச்சினையின்

ஒரு பக்கத்தை காட்டியிருந்தது (?)

அதோட மறுபக்கத்தைப்பற்றி நான் படமெடுக்க

விரும்பினால் கூட அப்படி படமெடுக்க அனுமதிக்கப்பட

மாட்டேன்.

இங்கே நினைப்பதைச் சொல்ல சுதந்திரம் இல்லை.

ஒரு எழுத்தாளராக ஜெயகாந்தனோ, பெரியாரோ

அனுபவித்த சுதந்திரம் கூட ஒரு திரைப்பட

நடிகனாக எனக்கு கிடைக்கவில்லை.

இங்கு சகிப்புத்தன்மை இல்லை. அதுவே இங்கு

ஒரு கலாச்சாரமாக இருக்கிறது.

நான் சுயமரியாதை இயக்கத்தின் உருவாக்கம்.

சுயமரியாதை உள்ளவனாகவே வளர்ந்தேன்.

வேறு மாதிரியாக என்னைக் காட்டிக்கொள்ள

என்றும் விரும்பியதும் இல்லை. என் சினிமாக்களும்

இதையே பிரதிபலிக்கும்.

இங்கே நிறைய விஷயங்கள் தவறாகவே

இருக்கின்றன. அடையாறையும், கூவத்தையும் கூட 

சரி செய்யவில்லை.

இங்கு எதையும் சரியாகப் புரிந்து கொள்வதில்லை.

சரித்திரத்தையும், புராணத்தையும் குழப்பிக் கொள்கிறார்கள்.

ராமாயணம் சரித்திரமா ?

எதாவது இடத்தை காட்டி, இங்கு தான் ராமர் நின்றார் 

என்கிறார்கள். ராமருடைய காலடித் தடத்தை கூட 

அவர்கள் காட்டுகிறார்கள். சிறு வயதில் நான் கன்யாகுமரிக்கு

போனபோது பெரிய அளவிலான ஒரு காலடித்தடத்தை

காட்டி, இது ராமரின் பாதங்கள் என்றனர். அது மிகவும்

பெரிய அளவில் இருந்ததால் நான் “ராமர் என்ன ராட்சசனா?”

என்று கேட்டேன். என் பகுத்தறிவுப் பயணம் இங்கு தான்

துவங்கியது.

“மக்கள் நான் உள்ளுக்குள் கம்யூனிஸ்ட் என்று

நினைக்கிறார்கள்.

( நான் என்னவோ – இவரை நம்பர் ஒன் 

சுயநலவாதி,தந்திரசாலி, சாமர்த்தியசாலி 

என்று தான் நினைக்கிறேன் !).

உண்மை என்னவென்றால் – சமூக அவலங்களுக்கு

முதலாளித்துவம், பொதுவுடைமை, பகுத்தறிவு வாதம்

போன்ற எதுவும் முழுமையான தீர்வு ஆகாது”.

மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒன்றை 

நான் சொல்லட்டுமா ?

ஸ்பார்டகஸ் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் -

உலகத்தின் சரித்திரமே மாறி இருக்கும்.

கிறிஸ்துவின் போதனைகள் மாறி இருக்கும்.

கார்ல் மார்க்ஸ் கம்யூனிசத்தை

பற்றியே பேசியிருக்க மாட்டார்.

(ஸ்பார்டகஸ் கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய நூற்றாண்டில்

வாழ்ந்த அடிமைகளின் புகழ்பெற்ற ஒரு தலைவர். ரோம்

பேரரசை எதிர்த்து தோல்வி கண்டவர் – இவரை நாயகனாக

வைத்து சில வெற்றித் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன ! -

மற்றபடி, தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழாவிற்கும்,

ஏசு கிறிஸ்துவிற்கும், கார்ல் மார்க்ஸுக்கும், 

ஸ்பார்டாகஸுக்கும் என்ன சம்பந்தம் என்பது கமல் போன்ற

அறிவுஜீவிகளுக்கு மட்டும் தான் புரியும்.

கமல் ஒரு அறிவுஜீவி தான் என்பதை ஏற்கெனவே

மக்கள் ஒத்துக் கொண்டு விட்டார்கள். இருந்தாலும்,

அதற்கான தேவை இல்லாமலே, மீண்டும் மீண்டும் -

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் “நான் ஒரு அறிவுஜீவியாக்கும்”

என்று கமல் நிரூபிக்க முயல்வது எரிச்சலையே 

உண்டு பண்ணுகிறது.)

தமிழ் இலக்கியங்கள் திரைப்படத்துக்கான பெரிய ஆதாரமாக

இருந்தாலும் கூட அவை ஏன் பெரிய அளவில் தமிழ்ப்

படங்களில் பயன்படுத்தப்படவில்லை என்கிற கேள்விக்கு -

தமிழ் சினிமாத் துறையில் படம் பண்ணுவது முறையற்ற

பாலுணர்வு புணர்ச்சியாக இருக்கிறது.

(கமல் பயன்படுத்தியுள்ள வார்த்தை incestuous

அதன் அர்த்தம் – ref -

http://www.thefreedictionary.com/incest

(in·cest (nsst)

n.

1. Sexual relations between persons 

who are so closely related that their 

marriage is illegal or forbidden 

by custom.

2. The statutory crime of sexual 

relations with such a near relative.

——————————————–

(கமலின் ரசனைக்கும், அறிவுஜீவித்தனத்திற்கு இதைவிட 

வேறு சான்று வேண்டுமா ?)

கேரளாவில் வெற்றிப்படங்களில் பெரும்பாலானவை

இலக்கியத்திலிருந்தும், நாவல்களையும் அடிப்படையாகக்

கொண்டவை. இங்கு வெறும் காப்பி. ஹாலிவுட்

படங்களின் அப்பட்டமான காப்பி. கமல் காப்பி அடிக்கிறார்

என்று குற்றம் சாட்டுகிறார்கள் ! இங்கு எது ஒரிஜினல் படம் ?

பெரிய படங்கள் எதுவும் ஒரிஜினல் கிடையாது !

(சுய வாக்குமூலம் – நான் மட்டுமா காப்பி – 

எல்லாரும் தான் !)

நாங்கள் சுஜாதாவையும், பாலகுமாரனையும் கொண்டு

வந்தோம் ( சுஜாதாவும், பாலகுமாரனும் கமல் கூப்பிடும்

முன்னரே திரையுலகிற்கு வந்து விட்டார்கள். மேலும்

இவர்களின் எந்த இலக்கியத்தை கமல் திரைப்படமாக 

எடுத்தார் ..??)

திரைப்படத் துறையில் மாறுதலை எப்படி ஏற்படுத்துவது ?

எங்கே துவங்குவது என்றால் -

வெளிப்படைத்தன்மை தான் மாற்றத்தை கொண்டு வரும்.

துவக்கமாக எல்லாரும் ஒழுங்காக வரி செலுத்த வேண்டும் !

எனக்கு ஒரு பைசா கூட வரி பாக்கி கிடையாது.

நான் கருப்புப் பணத்தை கையால் தொடுவது கிடையாது !!

நம்முடைய வரிகளை ஒழுங்காகச் செலுத்த வேண்டும் !!!

(ஒ யெஸ் – இங்கிருந்தே துவங்கலாமே !

முதலில் விஸ்வரூபம் படத்திற்கு எவ்வளவு ரூபாய் -

எந்தெந்த வகைகளில் செலவானது ?

எவ்வளவு வருமானம்

எந்தெந்த வகைகளில் வந்தது ?

குடியிருக்கும் வீட்டை எந்த வங்கியில்

அடமானம் வைத்தது ? எவ்வளவு ரூபாய்க்கு ?

போன வருடம் – 2012-13க்கு எவ்வளவு வருமான வரி 

கட்டினீர்கள் etc….etc… )

நான் இயல்பாகவே அரசியல் சார்புடையவனா ? என்று

தொடர்ந்து கேள்வி வந்துக்கொண்டே இருக்கிறது.

என் பதில் என்னவென்றால் - நான் கூடி வாழும் சமூக

இயல்புடையவன்.

(அதாவது சமூகத்தோடு ஒத்து வாழ்பவர் -

அதனால் தான் விரும்பிய ஆணும் பெண்ணும் 

கூடி வாழ்வதற்கு திருமணம், குடும்பம் என்கிற 

சம்பிரதாயங்கள் எல்லாம் எதற்கு என்று கேட்டார்

போலும் ..!!)

http://vimarisanam.wordpress.com/2013/10/18/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0/?relatedposts_exclude=7519

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.