Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பளையில் பதற்றம்: மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

b2c18b1acba494b3d17d0904d3a6103a.jpg

இன்று காலை பளையில் இடம்பெற்ற விபத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதால்  அப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

காலை இடம் பெற்ற விபத்தில் பளை மத்திய கல்லூரியின் மாணவன் பாதசாரிகள் கடவையில் கடக்க முற்பட்ட வேளை கட்டுப்பாட்டை இழந்த பேருந்து துவிச்சக்கர வண்டியை மோதியது. இதனால் துவிச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்ததுடன் மாணவன் படுகாயங்களுக்குள்ளானார்.

பாடசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பாதசாரிகள் கடவையில் போக்குவரத்து பொலிசார் கடமையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொலிசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

 மாணவர்கள் வீதியை மறித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளதால் ஏ 9 வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

 

(இரண்டாம் இணைப்பு) 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் கலந்துரையாடிய பொலிசார் தமக்கு மூன்று மணித்தியால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் வீதி மறிப்பில் ஈடுபடவேண்டாம் எனவும் மாணவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

 

குறித்த மூன்று மணித்தியாலங்களுக்குள் விசாரணைகளை நடத்தி இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதாக பொலிசார் உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது ஏ 9 வீதியின் போக்குவரத்துக்கள்  வழமைக்கு திரும்பியுள்ளன.

 

இராணுவத்தினருக்கும் மாணவர்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் குறித்த இராணுவ வாகனத்தினை முற்றுகையிட்டனர். பின்னர் அப்பகுதி இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்டதினைத் தொடர்ந்து இராணுவ வாகனத்தினை மாணவர்கள் விடுவித்தனர்.
 

 

603664_686363664758179_1212506955_n%20co

 

1911851_686363621424850_272521852_n%20co

 

1924773_686363688091510_847886783_n%20co

 

1982320_686363721424840_2034577547_n%20c

 

1979672_686387228089156_403345837_n%20co

 

1011378_686387071422505_463828956_n%20co

 

 

1069372_686397424754803_1969019830_n%20c

 

 

1016338_686387304755815_2074379197_n%20c

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=347462708306451187

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.