Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச மத்தியஸ்தத்துடனான பேச்சு ஐ.நாவின் தீர்மானத்தில் வரவேண்டும்; தமிழ்க் கூட்டமைப்பு வலியுறுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tna.jpeg

இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேச்சு நடக்கவேண்டும் மற்றும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் ஆகிய விடயங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இம் முறை நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு.
 
இதனை வலியுறுத்துவதற்காக அமெரிக்கா, பிரிட் டன், இந்தியா ஆகிய நாடுகளு டன் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தொடர் பேச்சுக்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
நேற்றுமுன்தினம் பிற்பகல் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் "உதயன்' பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
 
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் முதல் வரைவு வெளியாகி உள்ள நிலையில், சர்வதேச மத்தியஸ்தம் மற்றும் போர்க்குற்ற விசாரணை என்பவற்றையும் அதில்  சேர்க்க வேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் முதல்வரைவில் இந்த விடயங்கள் எவையும் இல்லை.
 
பதிலாக, இலங்கை அரசு உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் போர்க்குற்ற விசாரணை மற்றும் மனித உரிமை மீறல் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதனை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கண்காணித்து 6 மாதங்களில் வாய்மூல அறிக்கையையும் ஒரு வருடத்தின் பின்னர் முழுமையான அறிக்கையையும் வழங்க வேண்டும் என்று தீர்மான வரைவு கோருகின்றது. 
 
இது தமிழர் தரப்பை கடும் ஏமாற்றத்துக்குள் தள்ளியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மேற்படி இரு விடயங்கள் உள்ளிட்ட மூன்று விடயங்களைத் தீர்மானத்துக்குள் உள்ளடக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது வலியுறுத்தியுள்ளது. 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில் புதன்கிழமை கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்ததாவது:
 
விமோசனம் இல்லை
அமெரிக்காவினால், ஐ.நா மனித உரிமைகள் சபையில் இப்போது சமர்பிக்கப்பட்டுள்ளது தீர்மான வரைவுதான். அது இன்னமும் இறுதி வடிவம் பெறவில்லை. எனினும் வெளிவந்துள்ள வரைவில் கூட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான விமோசனங்கள் எதுவும் கிட்டவில்லை. முழு இலங்கையையும் ஜனநாயக ரீதியிலான கட்டமைப்புக்குள் கொண்டு செல்வது தொடர்பிலேயே அந்த வரைவு கவனம் செலுத்தியிருக்கின்றது. 
 
இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கி, அவர்கள் தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றது இந்தத் தீர்மான வரைவு. எனவே தீர்மான வரைபை வலுப்படுத்துவதன் ஊடாகவே இதனை மாற்றியமைக்க முடியும்.
 
முக்கிய விடயங்கள் மூன்று
அமெரிக்கா முன்வைக்கும் இறுதிப் பிரேரணையில் மூன்று முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகின்றது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அரசுக்கும் இடையில் சர்வதேச மத்தியஸ்தத்துடனான பேச்சு ஆரம்பிக்கப்பட வேண்டும். 
 
தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலப்பறிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
 
கைப்பற்ற நிலங்கள் மீளவும் அதற்குரியவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும். இவை சர்வதேசத்தின் மேற்பார்வையில் இடம்பெற வேண்டும்.
 
இலங்கையின் இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை  நடத்தப்பட வேண் டும். மேற்படி விடயங்களை தீர்மானத்தின் இறுதி வரைவில் உள்ளடக்க வேண்டும் என்று கூட்டமைப்புக் கேட்டுக் கொள்கிறது. 
 
இந்த இலக்கை அடைவதற்காக அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளுடன் உடனடியாகப் பேச்சு நடத் துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரே­; பிரேமசந்திரன் தெரிவித்தார். 

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=464462710807728335

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.