Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மரபுத்திங்கள் பிரேரணை அரசியல் பந்தாட்டத்தில் மீண்டும் சிக்கியது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மரபுத்திங்கள் பிரேரணை அரசியல் பந்தாட்டத்தில் மீண்டும் சிக்கியது! photo.png video.png 

[Friday, 2014-03-07 12:07:11]
Tamil-marabu-Ontario-060314seithy431-150

தமிழ் மரபுத்திங்கள் அங்கீகாரம் கோரும் பிரே‌ரணை மீண்டுமொருமுறை ஒன்டாரியோ மாநில சட்டசபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒன்டாரியோ கன்ஸவேடிவ் கட்சியினரால் (Ontario PC) நேற்று (06-03-14) மீண்டும் கொண்டு வரப்பட்ட இந்தப் பிரேரணையை இம்மு‌றை என்டிபி (NDP) கட்சியினர் ஆதரித்தனர். ஆனால் லிபரல் கட்சியினர் சென்றமுறை போலவே இம்முறையும் அதை கடைசி நிமிடத்தில் ஆதரிக்க மறுத்து முற்றாக நிராகரித்துவிட்டனர்.

  

ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத்திங்கள் மாதமாக அறிவிக்கும் இந்த பிரேரணை லிபரல் கட்சியினரால் கடந்த ஆண்டு முதலில் முன்மொழியப்பட்டது. ஆனால் மாநிலசபைக் கூட்டத் தொடர் இடை நிறுத்தப்பட்டதனால் அப்பி‌ர‌ரேரணை அன்று கிடப்பில் போடப்பட்டது. பிரேரணையை மீண்டும் சமர்ப்பிக்கும் முயற்சிகள் லிபரல் கட்சியின் சார்பில் மேற்கொள்ளப் படவில்‌லை .

இதனால் அப்பிரேரணையை கன்ஸவேடிவ் கட்சியின் மாநிலசபை உறுப்பினரும், தமிழின்பால் பெரும்பற்றுக் கொண்டவருமான Todd Smith MPP அவர்கள் கையில் எடுத்துக் கொண்டார். சபைக்கு வெளியே அனைத்துக் கட்சிகளிடமும் ஆதரவு திரட்டிய பின்னர், அவர் அப்பிரேரணையை மாநில அவையில் மீண்டும் சமர்ப்பித்திருந்தார். கடந்த பெப்ரவரி 18ந்தேதி சமர்ப்பிக்கப்பட்ட அந்தப் பிரேரணையை ஆதரிக்க எதிர்பாராத விதமாக மற்றக் கட்சியினர் மறுத்துவிட்டனர்.

மனம் தளராத Todd Smith அவர்கள் மீண்டும் ஒரு முறை இன்று (06--3-2014) அதே பிரே‌ரணையை தனிநபர் பிரேரணையாக சமர்ப்பித்தார். இம்முறை இப் பிரேரணையை என்டிபி கட்சியினர் (NDP) ஆதரித்திருந்த போதும் லிபரல் கட்சியினர் மீண்டும் மறுத்துவிட்டனர். ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத்திங்களாக்க அங்கீகாரம் கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப் பிரே‌ரணை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழுக்கு சிறப்புச் சேர்க்கும் இந்த பிரேரணையை லிபரல்கட்சியினர் தொடர்ந்து ஏற்க மறுத்து வரும் இந்த நிலையில் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஒன்டாரியோ தமிழ் அரசியல் பிரமுகர்கள் ஆழ்ந்திருக்கிறார்கள். இதற்கிடையில் இப்பிரேரணையை தாங்கள்தான் கொண்டு வரவேண்டும் என்று லிபரல் கட்சியினர் நினைப்பார்களேயானால், கட்சி பேதமின்றி தாம் அதை ஆதரிக்கப் போவதாக ஒன்டாரியோ கன்ஸவேடிவ் கட்சியினர் (Ontario PC) தெரிவித்திருக்கிறார்கள். தமிழுக்கான அங்கீகாரம் விரைந்து கிடைக்க வேண்டும் என்றும் ஒன்டாரியோ கன்ஸவேடிவ் கட்சியினர் (Ontario PC) மேலும் தெரிவித்திருக்கிறார்கள்.

“இது போன்ற நடவடிக்கைகளை லிபரல் கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தமிழ் மேல் பற்றுக் கொண்ட ஏனைய இனத்தவரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது தமிழ் மக்களிடையே லிபரல் கட்சியின் செல்வாக்கினை குறைத்து வருகிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் ஒருமித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மரபுத்திங்கள் அங்கீகாரம் கோரும் பிரே‌ரணை ஒன்டாரியோ மாநில சட்டசபையில் நேற்று (06--3-2014) சமர்ப்பிக்கப்பட்டதைக் காட்டும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:

 

Tamil-marabu-Ontario-060314seithy431--(3

 

 

Tamil-marabu-Ontario-060314seithy-483--(

 

 

Tamil-marabu-Ontario-060314seithy-613-(1

 

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=105115&category=TamilNews&language=tamil

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவகையில் அதுவும் நல்லது தான். ஒரு குளிர் மாதத்தைப் போய்த் தமிழர் மாதமாகக் கொண்டாடுவது என்று சொல்லி , மூடிய அறைக்குள் நடத்த வேண்டுமா என்ன? சித்திரை வேண்டாம். ஏதாவது கோடை மாதத்தைத் தெரிவு செய்திருக்கலாம். தவிர,  இப்படிப் பெயரை வைத்து விட்டு பெரும்பாலான நிகழ்வுகள் ஆங்கிலத்தில் தான் நடக்கும். அப்படி நடத்துவதால் என்ன பலன்?

ஒரு கோடை மாதம் ஒன்றில் தமிழர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம், வீதி நடைபவனி(கார்னிவெல் போல) செய்வது தான் நன்றாக இருக்கும்.

அதை விடுத்து விட்டு ஒரு குளிர்மாதத்தில் எங்காவது ஒரு மூலையில் அறைக்குள் வைத்துக் கொண்டாடுவது என்ன பெருமையைத் தந்துவிடப் போகின்றது? இவ்வாறு தான் காங்கிரஸ் நடத்தும் பொங்கல் விழாவுமாகும். அதில் மீனும், இறைச்சியும் தான் முதன்மை உணவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.