Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாவது தடவையும் ஏமாற்றமளிக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உத்தேச தீர்மானம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது தடவையும் ஏமாற்றமளிக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உத்தேச தீர்மானம்: 

[saturday, 2014-03-08 22:59:24]
TNPF150A.jpg

கடந்த 2012, 2013ம் ஆண்டுகளில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ் மக்களின் வாழ்வியலில் எந்தவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாததோடு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு எத்தகைய முற்றும் புள்ளியையும் ஏற்படுத்திவிடவில்லை. மாறாக கடந்த இரண்டு தீர்மானங்களும் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டபோதும் இலங்கை அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு எதிரான தனது இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டு தீவிரப்படுத்தியேவருகின்றது.

  

நிலைமைகள் இவ்விதமிருக்க இம்முறையும் வெளிவந்துள்ள உத்தேச தீர்மான வரைபானது வடமாகாண சபைக்கு 13ம் திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டுமென்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பிலான விசாரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் கோருகின்றது.

13ம் திருத்தச் சட்டத்தின் கீழான வடமாகாண சபை என்பது தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதாலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் மிகப் பிரதானமாக தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாது ஒழிக்கும் சரத்துக்களும் காணப்படுவதனாலும் நல்லிணக்க ஆணைக்குழுவானது அரசாங்கமானது சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களில் இருந்து தம்மைக் காப்பாற்றுவதற்காக கண்துடைப்பிற்காக உருவாக்கப்பட்ட ஆணைக்குழு என்பதனாலும் உள்ளக விசாரணை என்பதும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களையே அவர்கள் செய்த குற்றங்களை விசாரிக்க கோரும் அடிப்படை நியாயமற்ற இயற்கை நீதிக்கோட்பாட்டிற்கு மாறான செயல் என்பதனாலும் நாம் ஏற்கனவே நிராகரித்திருந்தோம்.

குறித்த உத்தேச வரைபானது வடமாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்கக் கோருமாறு கோரியிருப்பதுடன் கிழக்கு மாகாணம் பற்றி எதுவும் பேசாது தவிர்த்திருப்பதும் தமிழ் என்ற ஒரு வார்த்தை கூடப் பயன்படுத்தப்படாமல் தவிர்த்திருப்பதும் அரசியல் தீர்வு பற்றி எதுவும் குறிப்பிடாதிருப்பதும் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கான தீர்வை 13ம் திருத்தச் சட்டத்தினுள் மட்டுப்படுத்திவிடும் செயற்பாடா என நாம் நியாயமாக சந்தேகிக்கின்றோம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது தமிழ் மக்களினுடைய அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் அவர்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்; இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றை நாடாத்துதல் தொடர்ந்து கொண்டிருக்கின்ற கட்டமைப்பு சார் இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்காக ஓர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பினை ஐ.நா சபையின் கண்காணிப்பின் கீழ் உருவாக்குதல் போன்ற தீர்மானங்களை உள்ளடக்க வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் விடுத்திருந்தோம்.

இதே போன்ற கோரிக்கையினை அண்மையில் தமிழக சட்டசபை நிறைவேற்றியிருந்ததுடன்ää புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பலவும் இத்தகைய கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தை நோக்கி முன்வைத்தும் இருந்தன.

எனினும் கடந்த 65 ஆண்டுகால இனப்பிரச்சினையினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களது தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகள் சிறிதளவேனும் கருத்தில் எடுக்கப்படாமல் தமிழ் மக்களின் அபிலாசைகளையோ நலன்களையோ எந்தவிதத்திலும் பிரதிபலிக்காத ஓர் தீர்மானவரைபானது மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டிருப்பதானது எம்மை ஆழ்ந்த வேதனை அடையச் செய்துள்ளதுடன் கடும் ஏமாற்றத்தினையும் தந்துள்ளது.

எனவே அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளினால் ஐ.நா சபையில் முன்வைக்கப்படவுள்ள இறுதித் தீர்மானமானது தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக் கூடியவாறும் அவர்களின் நலன்களை பேணக்கூடியவாறும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் தேசத்தின் மீது தொடர்ந்தும் புரியப்படுகின்ற இனவழிப்பு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றை நிரந்தரமாக நிறுத்தப்படக்கூடியவாறானதுமான ஓர் தீர்மானமாக அமைய வேண்டுமென்று நாம் கோருகின்றோம்..

மேலும் இத்தகைய கோரிக்கைகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் உள்ளடக்கப்படுவதற்காக தொடர்ந்தும் தாயகத்தில் வாழும் உறவுகளும் தமிழக உறவுகளும் புலம்பெயர் தமிழ் உறவுகளும் போராட வேண்மென்று அழைப்பு விடுக்கின்றோம்.

 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தலைவர்

செ.கஜேந்திரன்

பொதுச் செயலாளர்

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=105247&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.