Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூக விழுமியங்களை பாதுகாப்போம்..... வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் பாலியல் துஷ்பிரயோகங்கள், குற்றச் செயல்கள் மற்றும் மதுப்பாவனைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெல்லியடி நகர்ப்பகுதியில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகிய எதிர்ப்புப் போராட்டம் பேரணியாக நகர்ந்து கரவெட்டி பிரதேச செயலகத்தை சென்றடைந்ததுடன் செயலர் சிவசிறியிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். 

 

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 'நீதி வேண்டும் நீதி வேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை நிறுத்து, சமூக விரோதிகளுக்கு நடவடிக்கை எடு, பெண்கள் என்ன போதைப் பொருளா?" என கோஷம் எழுப்பியதுடன் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

 

இதேவேளை இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களும் ஆர்ப்பாட்டம் இடத்திற்கு வருகை தந்ததுடன் கலந்து கொண்டவர்களையும் புகைப்படம் எடுத்ததனை காணக்கூடியதாக இருந்தது. 

மேலும் குறித்த எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், சிர்த்தார்த்தன் ,சுகிர்தன், பிரதேச சபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள், மகளிர் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுமாக 200 பேர் வரையில் கலந்து கொண்டனர்.

 

வடமராட்சி பொது அமைப்புகள்,

வடமராட்சி.

14.03.2014

S.சிவசறி,

பிரதேச செயலர்,

பருத்தித்துறை.

சமூக விழுமியங்களை பாதுகாப்போம்.....

1. அண்மைக் காலங்களில் வடபகுதியில் பெண்களும் சிறுவர்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது அதிகரித்துக் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எனவே அவர்களிற்கான அதி உச்ச பாதுகாப்பை வழங்கவேண்டும்.

2. கலாச்சாரச் சீரழிவு எமது பகுதியில் பல வடிவங்களில் இடம்பெறுகின்றது. இதனால் எமது இனம் பல இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றது. எனவே கலச்சாரச் சீரழிவிற்கான சகல விடயங்களையும் எமது பிரதேசத்திலிருந்து நீக்கப்படல் வேண்டும்.

3. எமது சமுகத்தின் கலை கலாச்சாரம் பண்பாடு என்பன இன்று முற்று முழுதாக தூக்கி எறியப்பட்ட நிலையில் காணப்டுகின்றது. எனவே இவற்றை பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களுடாக கட்டிக்காக்கப்பட வேண்டும்.

4. சட்ட விரோதமான முறையில் சில இடங்களில் கசிப்பு, போதை வஸ்து என்பன பயன்படுத்த படுகின்றன. இதனை பயன்படுத்துவோர் அதனால் ஏற்படும் படுமோசமான பின்விளைவுகளை சிந்திக்க முடியாதவர்களாக இருகின்றார்கள். இதனை பயன்படுத்துவோரும் அழிந்து அவரின் குடும்பமும் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாகின்றது. எனவே இவற்றினை தடுப்பதற்கான நடவடிக்கையினை முனைப்புடன் செயற்படுத்தவேண்டும்.

5. எமது பிரதேசத்தில் அண்மைக் காலங்களில் மதுப்பாவனைகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதை எமது வீதி ஓரங்களில் காணப்படும் வெற்று போத்தல்கள், ரின்கள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது. இது எமது இளைய சமூகத்தை ஒரு பிழையான சமூகமாக மாறுவதற்கு வழிகோலும். எனவே மது பாவனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படல் வேண்டும்.

6. எமது இளைஞர்கள் இன்று பல்வேறு சமூக விரோதமான செயற்பாடுகளிலும், வன்முறைகளிலும், குழுக்களாக செயற்படுவதும் அதிகரித்து வருகின்றது. இதற்கான பிரதான காரணம் இவர்களுக்கான சரியான வேலைத் திட்டமும,; வேலை வாய்ப்பும் இல்லாமையே ஆகும். எனவே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

7. எமது மக்களுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கும் நிதி, வாடகைக் கொள்வனவு மற்றும் காப்புறுதி நிறுவனங்களிற்கான உரிமங்களை மீளாய்வு செய்தல் வேண்டும்.

8. அதிகளவிலான வட்டி (மீற்றர் வட்டி) வீதத்தில் சட்ட விரோதமான முறையில் பணகொடுக்கல் வாங்கல்களில் ஈடு படுவோர்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

9. சமூக விரோத செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் கையூட்டு பெறுபவர்களையும், வழங்குபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

10. மேற்படி எமது கோரிக்கைகளை அரச நிறுவனங்களூடாகவும், சட்ட நிறுவனங்களூடாகவும், சமூக அமைப்புகளூடாகவும், சமய அமைப்புகளூடாகவும் முன்னெடுக்க வேண்டுமென வேண்டுகின்றோம்.

நன்றி.

வடமராட்சி பொது அமைப்புகளின் ஒன்றியம்,

மக்கள் பிரதிநிதிகள்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104269/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.