Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யாவுடன் இணைந்தது கிரிமியா?; 95வீத மக்கள் ஆதரவு

Featured Replies

 Crimea.jpgநேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையான கிரிமிய நாட்டு மக்கள் ரஷ்யாவுடன் இணைய வாக்களித்ததைத் தொடர்ந்து இனி அந்தப் பிரதேசம் ரஷியாவின் ஒரு பகுதியாக மாறும் சாத்தியம் அதிகரித்துள்ளது.

அளிக்கப்பட்ட வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை எண்ணப்பட்ட நிலையில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் ரஷ்யாவுடன் கிரிமியா இணைவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்களிப்பில் கிரிமியா தனி சுதந்திர நாடாக மாறுவது அல்லது ரஷ்யாவின் ஒரு பிரதேசமாக இணைவது என இரு தேர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தன.

கிரிமியா வாக்கெடுப்புக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் தோல்வி
இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை (15) ஐக்கிய நாட்டு சபையின் பாதுகாப்பு மன்றத்தில் கிரிமியா வாக்கெடுப்பானது ஜனநாயகமற்றது என்றும் அது நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

15 நாடுகள் கொண்ட பாதுகாப்பு மன்றத்தில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. சீனா நடுநிலை வகித்தது. ஆனால், ரஷ்யா தனது ‘வீட்டோ’ (Veto) எனப்படும் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த தீர்மானத்தை தோற்கடித்தது.

பாதுகாப்பு மன்றத்தில் ஐந்து நாடுகளுக்கு வீட்டோ எனப்படும் ரத்து அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் என 5 நாடுகள் எந்த தீர்மானத்தையும் தோற்கடிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடை நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தயாராகி வருகின்றன.

கலவரங்கள் வெடிக்கலாம்?
கிரிமியா பிரதேசத்தின் பெரும்பாலான மக்கள் ரஷ்ய மக்களாவர். இங்கு உக்ரேன் நாட்டைச் சேர்ந்தவர்களும் நிறைய அளவில் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக தற்போது உக்ரேனுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனால், உக்ரேன் நாட்டு மக்களுக்கும் ரஷ்ய மக்களுக்கும் இடையில் கலவரங்கள் வெடிக்கலாம் என்ற அச்சமும் நிலவுகின்றது.

உக்ரேன் நாட்டு இராணுவ முகாம் ஒன்றும் கிரிமியா பிரதேசத்தில் இருக்கின்றது. இந்த இராணுவ முகாமிற்கு வெளியே ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கிரிமியா மீதான தீர்மானத்தின் வாக்கெடுப்புக்கு முன்னதாக ரஷ்யா தனது துருப்புகளை அதிக அளவில் கிரிமியாவுக்கு அனுப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிமியா மீதான பொருளாதாரத் தடைகள்?
ஜனநாயகமற்ற முறையில் கிரிமியா பிரதேசத்தை ரஷ்யா இணைத்துக் கொண்டுள்ளது எனக் குற்றம் சாட்டி வரும் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இத்தகைய பொருளாதாரத் தடைகள் எவ்வளவு கடுமையாக இருக்கும், இதனால் உண்மையிலேயே ரஷ்யா பாதிக்கப்படுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும். (செல்லியல்)

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/103462----95--.html

  • தொடங்கியவர்
க்ரைமியா சுதந்திரம் பெற்றதாக அதன் நாடாளுமன்றம் பிரகடனம்

 

140317100040_crimea_referendum_512x288_a

மக்கள் கருத்தறியும் வாக்களிப்பில் கலந்துகொண்டோர்

க்ரைமியாவில் உள்ள நாடாளுமன்றம், தமது நாடு யுக்ரெய்னில் இருந்து சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்து, ரஷ்யாவில் இணைவதற்கும் விண்ணப்பித்துள்ளது.

அந்த வளைகுடாவில் இருக்கும் அனைத்து யுக்ரெய்னியர்களின் சொத்துக்களும் தேசியமயமாக்கப்படுவதாகவும், அந்தப் பிராந்தியத்தில் இனி யுக்ரெய்னியச் சட்டங்கள் செல்லுபடியாகாது என்றும் அது அறிவித்துள்ளது.

ஐநா மற்றும் சர்வதேச சமூகத்துக்கான ஒரு கோரிக்கை ஆவணத்தில், க்ரைமியாவின் நாடாளுமன்றம், தம்மை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்குமாறு கோரியுள்ளது.

க்ரைமியாவில் ஞாயிறன்று 96 வீதத்துக்கும் அதிகமான மக்கள் வாக்களித்த, ஒரு மக்கள் கருத்தறியும் வாக்களிப்பில், யுக்ரெய்னில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவது என்று பெரும்பாலானோர் வாக்களித்ததை அடுத்து இந்த நடவடிக்கைகள் வந்துள்ளன.

ரஷ்யாவின் ஒரு பகுதியாக இணைவதற்கான முறையான கோரிக்கையை விடுப்பதற்காக க்ரைமியாவின் பிரதமர் மாஸ்கோவுக்குச் சென்றுள்ளார்.

மேற்கு நாடுகள் அதிருப்தி

இதற்கிடையே, க்ரைமியா யுக்ரெய்னில் இருந்து பிரிவதற்கு முடிவெடுத்த பின்னணியில், இது தொடர்பில் ரஷ்யா மீது எப்படியான தடைகளை விதிக்கலாம் என்று ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் பிரஸல்ஸில் கூடுகிறார்கள்.

ஜேர்மனி ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் எரிவாயுவின் அழவைக் குறைக்க வேண்டும் என்று ஜேர்மனியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

க்ரைமிய மக்கள் கருத்தறியும் வாக்களிப்பை சட்ட விரோதமானதாகப் பார்க்கும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அதற்கான பதிலடி குறித்து ஆராய்கின்றன.

 

http://www.bbc.co.uk/tamil/global/2014/03/140317_crimeaindepen.shtml

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைமை எங்களுக்கும் பொருந்தக்கூடியாது. சிங்கள மக்களின், முஸ்லீம் மக்களின் குடியேற்றங்கள் என்பன இதன் அடிப்படையிலேயே நடக்கின்றது. அம்பாறையை முழுமையான சிங்களமாவட்டமாக மாற்ற இவ்வாறு தான் சிங்களமக்களின் அளவினை அதிகரித்தனர்.

இது குறித்தான அவதானங்கள் எம் மக்களிடம் விதைக்கப்பட வேண்டும். காணிகள் விற்றல் தொடர்பான நடவடிக்கைகள் சிந்திக்கப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.