Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்று கருத்துள்ள தளங்களுக்கு ஒரு கடிதம்....

Featured Replies

சகோதரபடுகொலைகளை கண்டிக்கும் தமிழ் நண்பர்க்கு சமர்ப்பணம்.

தமிழ்ஈழ விடுதலைக்காய் புறப்பட்ட எத்தனையோ இளைஞர்கள் போராட்ட பாதையில் இருந்து புறம் தள்ளபட்ட 1984 தொடக்கம் 1986 வரையிலான காலகட்டங்கள் மிகவும் வேதனைக்குரியவை. மேல்மட்ட தலைவர்களின் தவறான முடிவுகளினாலோ அல்லது அவர்களினால் சொல்லபடும் சகோதர படுகொலையை தவிர்ப்போம் என்ற கருத்துக்கு அமையவோ பெரும் எண்ணிக்கையான வீரமறவர்கள் தமிழ்ஈழ மண்ணை விட்டு விலகி சென்றார்கள். தலைவர்களின் எதிர்பார்ப்புகள் எங்களை போன்ற சாதரண போராளிகளுக்கு விளங்காது. விளங்கபோவதும் இல்லை.

எனக்கு இப்போது பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இப்போது எங்கள் இணையதளங்களை வாசிக்கும் போது பெரும் சந்தேகம் வருகிறது. எமது எஞ்சிய தலைவர்கள் விலை போய்விட்டார்களா??? அல்லது இணையதளம் நடத்துபவர்கள் எம்மவர் இல்லையர்;;;;??? நாங்கள் தோற்று வெளியேறவில்லை வழிவிட்டு வெளியேறியதாகவே இன்றும் நான் எண்ணிக்கொண்டு இருக்கிறேன்.

சரி விடுங்கள். எமது இன்றைய தலைவர்களாக தங்களை அறிவித்து கொள்பவர்கள் எதற்காக இலங்கையின் அரசுடன் உறவாட வேண்டும். பொதுமக்களின் இறப்புகளை கண்டிக்க முடியாமல் எதர்க்காக இறப்பவர் அணைவரும் புலிகள் என்று சொல்லவேணும்???? சரி இறப்பவர் அணைவரும் புலிகள் என்றால் தமிழ்ஈழத்தில் இன்று வாழும் அணைவரும் புலிகளா??? கொஞ்சம் என்றாலும் எப்படி எங்கள் நெஞ்சில் ஈரம் இல்லாமல் போனது??? எம்மோடு களத்தில் நின்ற எவரும் இன்று (இணைய) தளத்தில் இல்லை. எனது இனம் மரணிக்கும் போது மகிழ்கி அடைந்தே செய்தி வெளியிடுகிறார்கள். இவர்கள் எவரும் எம்மவர் இல்லை. தற்பெருமைக்கும் புகழுக்கும் பதவிக்கும்மாய் வாழும் எட்டப்பர் தோழர்களாய்தான் நான் உணர்கிறேன்.

பொது எதிரிக்கு தழிழனை காட்டி கொடுப்பவன் எப்படீ வீரனாக முடியும்??? பேடிகள்தானே இப்படி செய்வார்கள். எங்களுக்கு பிடிக்காட்டிக்கு நாங்கள்தானே அடிக்க வேண்டும். எதக்கு பொட்டைகள் மாதிரி சிங்களவனுக்கு பின்னால் நக்க வேண்டும்??? எங்கள் தோழர்கள் சோரம் போய் விட்டார்களோ என்று பயமாய் இருக்கிறது.

இப்போதைக்கு கடைசியாக ஒன்று சொல்ல ஆசைபடுகிறேன்....

தமிழர்க்கு ஒரு நாடு மிகவும் அவசியம். அது ஈழத்தை தவிர்ந்த வேறு இடங்களில் அமைவது இப்போதைக்கு சாத்தியமில்லை. புலிகளை தவிர வேறு எவருக்கும் ஈழத்தில் அதற்கான பலம் இல்லை. தமிழருக்கு தனிநாடு வேண்டும் என்பதில் எவருக்கும் தனி கருத்து இருக்காது.

இப்போதைக்கு கடைசியாக ஒன்று கேட்க ஆசைப்படுகிறேன்......

நீங்கள் ஆசைப்படும் அணைத்தையும் ஏன் ஒரு தீர்வுக்கு அப்பால் செய்யமுடியாது?? பிரித்தாளும் சூழ்ச்கி வெள்ளைகாரனின் வெல்லும் ஆயுதம். அதைத்தான் சிங்களவன் தருகிறான். அதையும் வாங்க போகிறமா????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்ம்ம்ம்... அடியுங்கோ ... அடியுங்கோ ... நார் உரிக்கிற வேலைதான்!!!! கல்லிலையும் நார் உரிச்சிடலாம்!!! ஆனால் .... உந்த ஐந்தறிவு கூட இல்லாத மிருகங்களுக்காக .... ஏதும் பிரயோசனமென்டால் தொடரலாம்!!! உதுகளுக்கு உதென்ன, உதை விட கூடவும் சொல்லியும் ஏறப்போகுடோ!!! இரத்தத்திலை ஊறியிட்டுது அல்ல, இரத்தமே அதுதான்!!! கூலி, சாக்கடை, ... என்னத்தைச் சொன்னாலும் இந்தச் சொல்லுகளுக்கு கீழ்ப்பட்ட பிறவிகள்!!

நாங்கள் உந்த மாற்றுக்கருத்து என்ற கூலிப்படைகளோடு அடிபடும் காலத்தை தாண்டி வந்திட்டம் என்பது தான் என் நிலைப்பாடு. அவர்கள் சுயமாக தனித்து இயங்குபவர்கள் அல்ல இயங்கவும் முடியாது. எனவே அவர்களை அரவணைத்து ஊக்குவிக்கிற சக்திகளோடு தான் எமது எதிர்ப்பரப்புரைகள் போராட்டங்கள் என அனைத்து வடிவங்களிலும் பதிலடியாக இருக்க வேண்டும். இல்லா விட்டால் நாம் எமது வளத்தை (நேரத்தை ஆளணிகளை) உந்த சில்லறை கூலிகளோடு செலவிட இவர்களை ஆதரித்து அரவணைத்து எமக்கு எதிராக திட்டம் தீட்டுபவர்கள் அடுத்த கட்டத்திற்கு போய்விடுவார்கள்.

இன்று எமது போராட்டம் பல வழிகளில் பல தரப்பால் அங்கீகரிக்கப்பட்ட நியாயபூர்வமான போராட்டம். சுயர அரசியல் பூலோக நலன்களிற்காக சில முக்கிய சக்திகள் வெளிப்படையாக அதை ஏற்றுக் கொண்டு எமது போராட்டத்தின் இறுதி அத்தியாயமான சுதந்திர தமிழீழ பிரகடனத்தையும் அங்கீகாரத்தையும் எழுத இன்னமும் தயாரில்லை என்ற நிலையில் நிற்கிறோம். எனவே எமது எண்ணங்கள் முயற்சிகள் செயற்பாடுகள் எல்லாம் இதை ஏதுவாக்க இந்த முக்கிய சக்திகள் நோக்கியதாகவே இருக்க வேண்டும்.

இவர்களை வெல்லுவதில் தான் எமது கவனம் வளங்கள் அனைத்தும் ஒரு முகப்படுத்தப்பட வேண்டம். இவர்களை வென்றால் கூலிப்படைகள் தானாக இல்லாது போய்விடும். கூலிப்படைகள் மக்களை குளப்பாமால் விசமப்பிரச்சாரம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒரு குறுகிய நோக்கிலான அத்தியாவசியம். ஆனால் அதனோடு நாம் நின்று விடக்கூடாது. அது நோயின் அறிகுறி மாத்திரமே. எமது கவனம் நோயில் திரும்ப வேண்டும். நோய்கள் பல உண்டு:

-1- இவர்களை ஆதரிக்கும் அரவணைக்கு சக்திகளிற்கு எதிரான தூர நோக்கிலான நடவடிக்கைகள்

-2- எம்மவர்களில் சிலரை கூலிப்படைகளில் சேரக்கூடிய மனநிலையை உருவாக்கும் காரணிகள், எமது அதாவது போராட்ட ஆதரவு சக்திகளின் தவறுகள்

-3- எமது நடத்தையில் உள்ள பலவீனங்கள் நம்பிக்கையில்லாத்தனம் கூலிப்படைகளின் எதிர்த்தரப்பின் பிரச்சாரத்திற்கு துணைபோவது

இதில் 3ஆவதை நாங்கள் எவ்வாறு குருபரின் கடத்தல் விவகாரத்தில் நடந்து கொண்டோம் என்றது தெளிவாக்கும். அதாவது குருபரனின் 2 நேர்காணலில் உள்ள முரண்பாடுகள், பேசியவிதம், குரல், தொனி என்று பலவாறு குறுக்குவிசாரணை செய்கிறோம். இதே போல் தான் எமது போராட்டத்திற்கு அதரவு அல்லாதவர்களும் எமது செய்திகளை கட்டுரைகளை ஆவணங்களை விபரணங்களை நேர்காணல்களை பார்ப்பார்கள். ஆதரவு அல்லாதவர்கள் என்றால் எதிரிகள் என்று அல்ல நடுநிலையாக இருப்பவர்களும் அல்லது போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணி தெரியாதவர்களும் பார்ப்பார்கள். உலகில் எத்தனையே போராட்டங்கள் எம்மை விட அதிகூடிய அழிவுகள் இழப்புகளோடு எம்மை விட அதிக காலம் முன்னெடுக்கப்பட்டது படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சர்வதேச அரங்கில் தான் எமது போராட்டத்தை நாம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் நம்பிக்கையூட்டும் வகையில் சாதுரியமாக வினைத்திறன் மிக்க முறையிலும் தான். இதற்கு எம்மிடம் தெளிவு வேண்டும். ஏதோ விளையாட்டு போட்டி பந்தையம் கணக்கில் எமது போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த கூடாது. அடுத்ததாக உறுதியும் ஓர்மமும் வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி சிந்தித்து செயலாற்றும் நேரம் இது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.