Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றுக் கருத்துக்களை முடக்கும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன - ரூகி பெர்னாண்டோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசேடமொழியாக்கம் குளோபல்தமிழ்ச்செய்திகள்

rooky_CI.jpg

நாட்டில் மாற்றுக் கருத்துக்கள், மாற்றுச் சிந்தனையாளர்களை முடக்கும் முனைப்பக்கள் தீவிரம் பெற்றுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ரூகி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்;டத்தின் கீழ் அண்மையில் ரூகி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மாற்றுச் சிந்தனையாளர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் வகையிலேயே தாம் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கைதுகள் திட்டமிட்ட ஓர் அடக்குமுறையாகவே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டுக்குள் என்ன நடக்கின்றது என்பதனை இலங்கைக்கு வெளியே தெரிப்படுத்தவோ விமர்சனம் செய்யவோ கூடாது என்னும் நோக்கில் இவ்வாறான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை செய்யப்பட்டாலும் தொடர்ந்தும் தமது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என அஞ்சுவதாகவும், தமது சக நண்பர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாம் தொடர்புகளைப் பேணியவர்களின் நலன் குறித்து கவலையடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, பெர்னாண்டொவிற்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு தகவல்களை விற்பனை செய்தல், இனங்களுக்கு இடையிலான தேசிய ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சித்தல் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய ஒத்துழைப்பு வழங்குதல் ஆகியனவே இந்தக் குற்றச்சாட்டுக்களாகும். இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குத் தொடர போதியளவு சாட்சியங்கள் இல்லை என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதேவேளை, முதல் இரண்டு குற்றச்சாட்டுக்களும் தமது தொழிலுடன் தொடர்புடையது எனவும், உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அறிப்பது தமது பணியாகும் எனவும் ரூகி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் யார் இருக்கின்றார்கள், யாருக்கு தகவல் அனுப்பி வைக்கப்படுகின்றது. யார் தகவல்களை பெற்றுக் கொள்கின்றார்கள் போன்ற பல்வேறு கேள்விகள் தொடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான மாற்றுக் கொள்கைகள் வெளியே சென்றுவிடக் கூடாது என்பதில் கூடுதல் ஆர்வம் காட்டப்படுகின்றமை இதன் மூலம் தெளிவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் கோபியுடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதில்லை என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104484/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.