Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதி கேட்பவர்களை கைது செய்து பழிவாங்காதே ; யாழில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

0700608e2bf98cb192ee228320d394cf.jpg

ஆசிரியர் நிரூபனின் மர்மச் சாவைக் கண்டித்து பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் யாழ். நகர பஸ் நிலையம் முன்பாக இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

அரசே ஆசிரியர் நிருபனின் எலும்புக் கூட்டுக்கு பதில்என்ன?, நீதி கேட்பவர்களை கைது செய்து பழிவாங்காதே, ஆசிரியர் நிருபனை ஏன் கொன்றாய், ஆசிரியர்களை சுதந்திரமாக சேவை செய்ய அனுமதி போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு  யாழ். பேருந்து நிலையத்திற்கு பேரணியாகச் சென்றனர். 

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப்ஸ்ராலின்,

கோப்பாயைச் சேர்ந்த கார்த்திகேசு நிரூபன் வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். கடந்த மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வவுனியாவிலிருந்து கடந்த செப்ரம்பர் 19 ஆம் திகதி கோப்பாய்க்குத் திரும்பும் போதே அவர் காணாமல் போயுள்ளார்.
 
அவர் காணாமற் போய் பின்னர் உயிரிழந்த சம்பவமானது மிகவும் மோசமான செயல். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறக்கூடாது என குறிப்பிட்டார்.
 
இன்றைய போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம, யாழ் பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர் சங்கம், புதிய ஜனநாயக மாச்சி லெனினிச கட்சி,யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் ஆகியன பங்குபற்றின. இந்த ஆர்ப்பாட்டத்தில்  அதிபர்கள்  ஆசிரியர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 

DSCF7161.jpg

 

DSCF7179.jpg

 

DSCF7180.jpg

 

DSCF7185.jpg

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=112112766321448412

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.