Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் நிலவரங்கள் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட புலிகள் நிர்ப்பந்திக்கவில்லை! - டாக்டர் வரதராஜா செவ்வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
போர் நிலவரங்கள் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட புலிகள் நிர்ப்பந்திக்கவில்லை! - டாக்டர் வரதராஜா செவ்வி. 
[Friday, 2014-03-21 10:18:49]
varatharaja-210314-150.JPG

இறுதிக்கட்டப் போரின்போது வைத்தியசாலைகளின் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் பொதுக்கள் காயமடைந்தது தொடர்பாக தாம் பொய்யான அறிக்கையை வெளியிடவோ, விடுதலைப்புலிகள் தமக்கு எந்த அச்சுறுத்தலையும் விடுக்கவோ இல்லை என்று முல்லைத்தீவில் பணியாற்றிய வைத்தியர் டி.வரதராஜா தெரிவித்துள்ளார். பி.பி.சி. சிங்களசேவைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், சகோதர வைத்தியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு, பி.பி.சி.யுடனான நேர்காணலை டாக்டர் வரதராஜா நிராகரித்து விட்டார்.

  

அதேவேளை தன்னை, நான்காவது மாடியில் தடுத்து வைத்திருந்த காலத்தில், பொய் கூறுமாறு அரசாங்கம் தனக்கு அழுத்தம் கொடுத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரகசிய பொலிசார் முன்னிலையில் மீண்டும் ஆஜராகுமாறு வீட்டுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும். உங்களால் வருகை தர முடியாதுவிடின் உங்களுடைய தங்கையை பொலிஸுக்கு அனுப்பி வைக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் டாக்டர் வரதராஜா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் வடக்கில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடையும் வரையிலும் யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த அரச வைத்தியர்களில் டாக்டர் டி.வரதராஜாவும் ஒருவராவார். அவர் உள்ளிட்ட ஐந்து வைத்தியர்கள் அந்த நாட்களில் யுத்த கள நிலவரங்கள் தொடர்பில் பி.பி.சி சிங்கள சேவை உள்ளிட்ட பல ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

யுத்தத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்ட இந்த ஐந்து வைத்தியர்களும், பல மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டதுடன் 2009ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில், புலிகளின் அச்சுறுத்தலினால் யுத்த களம் தொடர்பில் கருத்துகளை தெரிவித்ததாக கூறினர்.

இந்தநிலையில், தற்போது பிபிசியிடம், டாக்டர் வரதராஜா , யுத்த காலத்தில் தான் எவ்விதமான மிகைப்படுத்தல் செய்திகளையும் வழங்கவில்லை என்றும் தான் அக்காலப்பகுதியில் தான் கூறியவை உண்மையானவை என்றும் தான் வழங்கிய செய்திகள் உண்மை என்பதை அங்கிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரும் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்களிடம் வருவர். ஆனால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கூறுமாறு புலிகள் எங்களிடம் கூறவில்லை. விசேடமாக நாங்கள் சேவையாற்றிய தற்காலிக வைத்தியசாலைகள் பலவற்றின் மீது ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. யுத்தத்தின் இறுதி மூன்று மாதத்திற்குள் செஞ்சிலுவை சங்கத்தினால் படுகாயமடைந்த 9,000 பேர், முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளன் ஆகிய பிரதேசங்களிலிருந்து திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

யுத்த வலயத்தில் 3 இலட்சம் மக்கள் சிக்கியிருந்த வேளையில் அங்கு 80 ஆயிரம் பேர் மாத்திரமே எஞ்சி இருந்தனர் என்று அரசாங்கம் தெரிவித்தது. மருந்துகள்,சாப்பாடு உள்ளிட்ட சகலதையும் 80 ஆயிரம் பேருக்கும் போதுமான அளவு கொடுத்தோம் என்று அரசாங்கம் கூறியிருந்தது. எனினும் மயக்கமடைய செய்யும் மருந்து இல்லை, இரத்தம் கொடுக்கவில்லை, அதனால் பெரிய பெரிய காயங்கள் ஏற்பட்டவர்கள் மருந்துகள் இன்றி, சிகிச்சை இல்லாமல் மரணமடைந்தனர் என்றும் வைத்தியர் தெரிவித்தார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=106144&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.