Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீது கொலைமுயற்சி:- மயிரிழையில் உயிர் தப்பினார்:-

Featured Replies

மந்திகையில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இணைப்பு 2 மேலதிக படங்களுடன்:-

selva_CI.png

வீரகேசரி மற்றும் தினக்குரலின் வடமராட்சி செய்தியாளர் சிவஞானம் செல்வசிவன்  யாழ் புறாப்பொறுக்கியில்  வைத்து இனம் தெரியாத இருவரால் வழிமறிக்கப்பட்டு  விசாரிக்கப்பட்ட பின்னர் இரும்புக்கம்பியினால் தாக்கப்பட்டுள்ளார் .உயிரிற்கு ஆபத்தான நிலையில் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீது கொலைமுயற்சி:- மயிரிழையில் உயிர் தப்பினார்:-

வடமாராட்சியின் முன்னணி சுதந்திர ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வல்லை புறாப்பொறுக்கிச் சந்திக்கு அருகில் சென்று கொண்டு இருந்த இவரின் பின்னால் சென்ற இனம்தெரியாதோர் நீ ஊடகவியலாளரா? ஏன கேள்வி எழுப்பியதோடு தலையில் பலமாக தாக்கி உள்ளதாக அங்கிருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல் கிடைத்துள்ளது. சற்று முன் இடம்பெற்ற தாக்குதலில் தப்பி ஓட முற்பட்ட செல்வதீபன் மீது கலைத்துச் சென்ன இன்ம் தெரியாதோர் மேலும் தாக்கியபோது கல் முறிவடைந்திருக்கலாம் என  மந்திகை வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105630/language/ta-IN/article.aspx

Edited by Athavan CH

ennathan pa nadakuthu anga srilanka la.

ennathan pa nadakuthu anga srilanka la.

நல்லாட்சி வசந்தம் இரும்பு கம்பியாக வீசுகிறது.

சும்மா டூர் போய் ரெண்டு கிழமை சுதி பண்ணிவிட்டு வருவோர் தான் ஊர் அந்த மாதிரி என்பார்கள்.

  • தொடங்கியவர்

தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சென்று பார்வையிட்டனர்

கடந்த 14.04.2014 திங்கட்கிழமை புத்தாண்டன்று வல்லை வெளிப்பகுதியில் கடுமையாகத்தாக்கப்பட்டு, மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபனை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாணசபை உறுப்பினர்களான வே.சிவயோகன், க.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், ச.சுகிர்தன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இச்சம்பவத்தைக்கண்டித்து வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அறிக்கை
 
 போர் முடிந்த பின், தமிழருக்கு வட- கிழக்கில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை. வடக்கில் வசந்தம் வீசுகிறது என அரசாங்கம் உலகை ஏமாற்றி பொய்யுரைத்து வருகிறது. ஆனால் ஒழுங்கற்ற மீள்குடியேற்றமும், உதவிகள் வழங்கப்படாமை, துரித சிங்களமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் என்பனவே இடம்பெறுவதுடன், மக்கள் சொல்லொணாத்துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறான மக்களின் துன்ப துயரங்களையும், அரசாங்கத்தின் பொய்ப்பித்தலாட்டங்களையும் தெட்டத்தெளிவாக ஊடகங்களும், ஊடகவியலாளர்களும்  வெளியுலகத்துக்கு வெட்டவெளிச்சமாக்கி வருகிறனர். இது தனது நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான செயற்பாடு என்பதால் அரசு ஊடகவியலாளர்கள் மீது வன்மத்துடன் காழ்ப்புணர்வு கொண்டதனால்  காலத்துக்குக்காலம் ஊடகவியாலாளர்கள் மீதும், ஊடகங்கள் மீதும் வன்முறைத்தாக்குதல்கள் அரசாங்கத்தினாலும், அரசாங்க ஆதரவு பெற்ற குழுக்களாலும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன என் நாங்கள்
சந்தேகிக்கின்றோம்.
 
அதன் சமீபத்திய தொடர்ச்சியாகத்தான் புத்தாண்டு தினத்தன்று வடமராட்சி, கரவெட்டியைச்சேர்ந்த சிவஞானம் செல்வதீபன் , வயது 29 எனும் ஊடக நண்பன் மீது இனந்தெரியாதோர் என்ற போர்வையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஊடக சுதந்திரம் பேணப்படுகிறது, மனிஉரிமைகள் காக்கக்கப்டுகின்றன்,  தமிழர்கள் சர்வதேசத்துக்கு பொய் சொல்கிறார்கள் என்று கூறிவருவோர்  இச்சம்பவத்தின் மூலம் மீண்டும் ஒருதடவை தங்களை அம்பலப்படுத்தியுள்ளனர் . இத்தாக்குதல் மூலம் ஊடக சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமும் மீறப்பட்டுள்ளதுடன், வடக்கில் வாழும் தமிழர்கள் எவ்வாறான அவல வாழ்வை வாழ்கின்றார்கள் என்றும் உலகுக்கு மீண்டும் எடுத்தியம்பும் சம்பவமாகவும் அமைந்துள்ளது.
 
ஆகவே பாதிக்கப்படும் மக்களின் குரலாக விளங்கும்செல்வதீபன் போன்ற ஊடக நண்பர்களின் மீதான இவ் வன்முறைத்தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன், தாக்குதலாளிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்தக்கேள்விக்கான பதில் காவல்துறைனராலேயே வழங்கப்படவேண்டும். இத்தாக்குதலில் படுகாயமடைந்த நண்பன் சி.செல்வதீபன் வேகமாகக்  குணமடைந்து முன்பை விடவும், வேகமாக தனது ஊடகப்பணியை மேற்கொண்டிட வேண்டும் என விரும்புகின்றேன்.
 
10250158_746172675413880_451338167087692
10247451_746172638747217_64522426481388510253806_746171158747365_249185654114933

http://www.thinakkathir.com/?p=57862

  • தொடங்கியவர்

தனது சகோதரன் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் பற்றி சாட்சியமளித்ததனாலேயே ஊடகவியலாளர் எஸ். செல்வதீபன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவில் தனது சகோதரன் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் பற்றி சாட்சியமளித்த யாழ்.வடமராட்சி பிரதேச ஊடகவியலாளர் எஸ். செல்வதீபன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ். வடமராட்சி பிரதேச சுயாதீன ஊடகவியலாளர், கரவெட்டி பிரதேசத்தை சேர்ந்த எஸ். செல்வதீபன் (வயது 31) நேற்றிரவு 8.45 மணியளவில் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். பருத்தித்துறை வீதியில் புறாப்பொறுக்கி ஆலடி சந்திக்கும் மண்டான் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியிலையே இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.  கரவெட்டியில் இருந்து செல்வதீபன் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை புறாப்பொறுக்கி பகுதியில் வழிமறித்து கம்பியால் தலையிலும் வயிற்றுப் பகுதியிலும் தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலால் நிலைகுலைந்த செல்வதீபன் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு வீதி அருகில் இருந்த வெளிகளின் ஊடக ஓடினார்.  அவர் ஓடியதும் தாக்குதலாளிகள் அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து நொருக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இவரது அண்ணன் காணாமல் போயிருந்தார். அது தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு மற்றும் காணாமற்போனோரைத் தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகிய குழுக்களின் யாழ்ப்பாண அமர்வுகளின் போது செல்வதீபன் தனது தாயாருடன் அண்ணன் காணாமல் போனது தொடர்பில் சாட்சியமளித்திருந்தார்.

இதேவேளை சித்திரைப் புத்தாண்டு தினமாகிய திங்கட்கிழமையன்று யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த செய்தியாளர் சிவஞானம் செல்வதீபனை அடையாளம் தெரியாதவர்கள் தாக்கியதை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்திருக்கின்றது.

அவரைத் தாக்கியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும், யாழ் செய்தியாளர்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரியிருக்கின்றது.

வடமராட்சி பிரதேசத்தின் செய்தியாளராக வீரகேசரி மற்றும் தினக்குரல் ஆகிய பத்திரிகைகளுக்கு அவர் பணியாற்றி வருகின்றார். இரவு எட்டரை மணியளவில் தனது தாயாரைப் பார்த்துவிட்டு, தனது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது செல்வதீபன் தாக்கப்பட்டுள்ளார். வெளிச்சமில்லாமல் அவரைப் பின் தொடர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் யாழ் புறாபொறுக்கி வல்லைவெளியில் வைத்து, ”செய்தியாளரா நீ” எனக் கேட்டு இரும்புக்கம்பியினால் பிடரியிலும் இடுப்பிலும் தாக்கியுள்ளதாக நெல்லியடி காவல்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது.

திடிரென நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக காயமடைந்து, நிலைகுலைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவரை மேலும் தாக்குவதற்கு அவர்கள் முயன்றுள்ளார்கள். எனினும் செல்வதீபன் தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்து பற்றைக்குள் ஓடித் தப்பியுள்ளார்.

அதேநேரம் அந்த வீதி வழியாக வந்தவர்களும், யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்று கொண்டிருந்த பேரூந்து ஒன்றும் செல்வதீபனின் சேதமாக்கப்பட்ட மோட்டார் சைக்கிளைக் கண்டு அவ்விடத்தில் கூடியுள்ளனர். இதனையடுத்து மறைவிடத்தில் இருந்து வெளியில் வந்த செல்வதீபன் மந்திகை வைத்தியசாலையக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து முன்னர் காணாமல் போயிருக்கும் தனது சகோதரன் தொடர்பாக தனது தாயாருடன் இணைந்து செல்வதீபன் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றிடம் சாட்சியமளித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக அடையாளம் தெரியாதவர்கள் தன்னைப் பின்தொடர்வதாகவும், தனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகவும், தனது சகாக்களிடம் அவர் கூறியிருந்தாகத் தெரிவித்தார்.

 

வடக்கில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவர்கள் தாக்கப்படுவதும் வழமையான நிகழ்வாகியிருக்கின்றது. இதனால் அங்கு ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது என்பதை, அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் கே.ஜெயேந்திரன், இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் நடவாதிருப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்

 

http://www.thinakkathir.com/?p=57858

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.