Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதாரங்கள் அடிப்படையிலேயே தமிழ் அமைப்புக்கள் மீது தடை : ஜி.எல்.பீரிஸ்

Featured Replies

இலங்கையில் திட்டமிடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பணம் வைப்பிலிடபடுவது தொடர்பில் அரசாங்கத்திடம் உரிய ஆதாரங்கள் உள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதும் நிதி மூலம் மற்றும் வைப்பிலிடப்படும் வங்கிக்கணக்குகள் குறித்து அரசாங்கம் அறிந்துகொண்டதாகவும் 65 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் 19 பேர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகள் மீண்டும் உருவாகுமாயின் அவை தொடர்பில் விழிப்புடன் இருந்து முளையிலேயே கிள்ளி எறிவதே அரசா்ஙகத்தின் முதன்மை நோக்கம். அரசாங்கம் இந்த விடயம் குறித்து தொடர்ந்து கண்காணிப்புடன் இருப்பதுடன் தேவைப்படுகின்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயங்காது என்றும் அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். பயங்கரவாதத்தை மீள் உருவாக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அமைச்சர் பீரிஸுடன் பாதுகாப்பு அமைச்சை பிரதிநிதித்துப்படுத்தும் வகையில் மேஜர் ஜெனரல் கே.எச்.ஜீ. ஹெந்த விதாரணவும் இந்த விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

GL-Peiris.jpg

 

 

 

 

 

 

 

 

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அங்கு தொடர்ந்து வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கையில்

16 அமைப்புக்களும் 424 பேரும் தடை செய்யப்பட்டமையானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 1373 ஒழுங்கு விதிக்கு அமையவே முன்னெடுக்கப்பட்டது. இந்த விதி முறைகளுக்கு அமைவாகவே காலத்துக்கேற்ற நடவடிக்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் திட்டமிடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பணம் வைப்பிலிடபடுவது தொடர்பில் அரசாங்கத்திடம் சரியான ஆதாரங்கள் உள்ளன. அந்தவகையில் அண்மைய வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான விசாரணைகளின் பயனாக நிதி மூலம் மற்றும் வைப்பிலிடப்படும் வங்கிக்கணக்குகள் குறித்து அரசாங்கம் அறிந்துகொண்டது. அத்துடன் 65 பேர் கைது செய்யப்பட்டதுடன் விசாரணையின் பின்னர் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

சம்மந்தப்பட்ட தரப்புக்களின் தொடர்பாடல்கள் குறித்த உறுதியான தகவல்கள் மற்றும் ஆவண ரீதியான ஆதாரங்கள் என்பன தற்போது அரசாங்கத்தின் வசம் உள்ளன. விசாரணைகளின் போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் ஆயுதங்கள் ஆவணங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கிடைக்கப்பெற்ற பொருட்களின் படி இராணுவ புலனாய்வு ரீதியான மற்றும் பிரசாரத்துக்காக பயன்படுத்துவதற்காகவே நதி அனுப்பப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

விசாரணைகள் தொடர்கின்ற நிலையில் சம்மந்தப்பட்டவர்களின் வகிபாகம் மற்றும் அடையாளங்கள் குறித்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. பயங்கரவாத நடவடிக்கைகள் மீண்டும் உருவாகுமாயின் அவை தொடர்பில் விழிப்புடன் இருந்து முளையிலேயே கிள்ளி எறிவதே அரசா்ஙகத்தின் முதன்மை நோக்கமாகும்.

பயங்கரவாத பிரச்சினையினால் அவதிப்பட்டு வலியை உணர்ந்த நாடு ஒன்றினால் இதனையே அரசாங்கம் ஒன்றிடம் இருந்து எதிர்பார்க்க முடியும். இவ்வாறான செயற்பாடுகள் விருத்தியடைவதை தடுப்பதற்கு காலத்துக்குப் பொருத்தமான நடவடிக்கைகள் முக்கியமானவையாகும். அரசாங்கம் இந்த விடயம் குறித்து தொடர்ந்து கண்காணிப்புடன் இருப்பதுடன் தேவைப்படுகின்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயங்காது.

மக்கள் தற்போது ஈடுபட்டுவருகின்ற மீள்கட்டியெழுப்பும் செயற்பாடுகளை குழப்புவதற்கு இடமளிக்க முடியாது. இது நாட்டின் சுற்றுலாத்துறைக்கும் முதலீட்டுக்கும் பாதிப்பு என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த முயற்சிகள் தேவையற்றதும் விஷமத்தனமானதுமாகும். அரசாங்கம் முழுமையான நிலைமையைும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இதுபோன்ற எந்தவொரு முயற்சியையும் அழித்துவிடுவதில் அரசாங்கத்துக்கு நம்பிக்கை உள்ளது. எந்த வடிவத்திலும் அவற்றை வரவிடாமல் ஒழித்துவிட முடியும்.

பயங்கரவாதத்தை ஒழித்ததில் இலங்கை மட்டும் நன்மையடையவில்லை. மாறாக தெற்காசிய பிராந்தியமே நன்மையடைந்துள்ளது. கடல் பகுதியில் மனிதக் கடத்தல்கள் மற்றும் சிறிய ஆயுத செயற்பாடுகள் போன்றவற்றையும் கட்டுப்படுத்தியுள்ளோம்.

எனவே வெளிநாடுகள் இவ்வாறு பயங்கரவாத நோக்கங்களுக்காக நிதி அனுப்பப்படுவதை தடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றார்.

http://virakesari.lk/articles/2014/04/25/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்
புலிகள் அமைப்பை தடை செய்தமைக்கான சான்றுகள் உள்ளன : பீரிஸ்
வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014 03:01
1(4463).jpg
எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும், அதன் மீள் உருவாக்கத்தையும் முளையிலேயே கிள்ளிவிடுவது மற்றும் அவைதொடர்பில் கூடுதலான எச்சரிக்கையுடன் இருப்பது அரசாங்கத்தின் அதிமுக்கியமான கடமையாகும் என தெரிவித்துள்ள வெளிவிவகார  அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் விடுதலைப்புகளுடன் தொடர்புடைய 16 அமைப்புகளை தடைசெய்தமை மற்றும் 424 நபர்களை நாட்டுக்குள் நுழையவிடாமல் தடைவிதித்தமைக்கான சான்றுகள் உள்ளன என்றும்  தெரிவித்தார்.
 
இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கும் உயர்ஸதானிகர்களுக்கும் வெளிவிவகார அமைச்சில் வைத்து வியாழக்கிழமை (24) விளக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இதில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் கே.எச்.ஜி. ஹெந்த விதாரணவும் கலந்துகொண்டார். 
 
பயங்கரவாத நிதிப்படுத்தலுடன் தொடர்புடைய குழுக்கள்,தனியாட்கள் மற்றும் பயங்கரவாதத்தை புதுப்பிக்க செய்றபடுவோர் ஆகியோருக்கு எதிராக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி இராஜதந்திர சமூகத்திற்கு விளக்கமளிப்பதே முக்கிய நோக்கமாக இருந்தது.
 
ஜ.நா பாதுகாப்பு சபையின் ஒழுங்குவிதி 1373க்கு அமையவே 16 குழுக்களையும் 424 தனியாட்களையும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பவர்களாக அரசாங்கம் பெயரிட்டது என அமைச்சர் குறிப்பிட்டார். 
 
பயங்கரவாதத்திற்கு நிதிப்படுத்தலை ஒடுக்குவதற்காக ஒழுங்கு விதிகளை உருவாக்கி இவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
 
இதனடிப்படையில் 65 பேர் கைது செய்யப்பட்டு 19 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.ஆவண சான்றுகள், தொடர்பாடல் சான்றுகள் உட்பட பல தகவல்கள் அரசாங்கத்திடம் உள்ளன.
 
வெளிநாட்டிலிருந்து செயற்படுவோர் மற்றும் இலங்கையிலிருந்து நிதி பெறுவோர் ஆகியோரிடையே பல வலையமைப்புகள் இருப்பதை அறியமுடிந்துள்ளது. விசாரணையின் போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆயுதங்கள், ஆவணங்கள் மற்றும் வேறு விடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
 
கிடைத்துள்ள சான்றுகளின்அடிப்படையில்  இராணுவம்,புலனாய்வு பிரச்சார நோக்கங்களுக்காக நிதிகள் அனுப்பப்பட்டது தெளிவாக தெரிகின்றது. இந்த விடயங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு தமது ஆணையின் கீழ் இயங்கும் குழுவினருக்கும் வேறு ஆட்களுக்கும் நிதி அனுப்பப்பட்டுள்ளது.
 
விசாரணைகள் தொடரும் போதும் வேறு நபர்களின் அடையாளம் வகிபாகம் என்பன தெரியவரும் போதும் இவர்களின் தயாரிப்பு நடவடிக்கைகள் எவ்வளவு விசாலமானவை என்பதை அறிய முடிந்துள்ளது. மிகச்சிக்கலான விரிவான திட்டமிடல் நடந்துள்ளது என்பதையிட்டு சந்தேகத்திற்கு இடமில்லையென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
 
எந்தவொரு பயங்கரவாத நடவடிக்ககையினதும் மீள் உருவாக்கத்தையும் முளையிலேயே கிள்ளி விடுவதும் ஆகவும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பதும் அரசாங்கத்தின் அதிமுக்கியமான கடமையாகும். மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்தினால் அவலமும், துன்பமும் பட்ட நாடு அரசாங்கத்திடமிருந்து இதைவிடவும் குறைவாக எதிர்பார்க்க முடியாது. பயங்கரவாத செயற்பாடுகளில் பயமுறுத்தலை நீக்கிவிட்டதால் அரசாங்கத்தால் நேரகாலத்துடனான தீர்க்கமான நடவடிக்கை நல்ல பயனளித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
 
அந்தந்த பிரதேச மக்களிடமிருந்து கணிசமான தகவல்கள் கிடைப்பது உற்சாகமளிப்பதாக உள்ளது. தாம் மீளக்கட்டியெழுப்பும் தமது வாழ்வு குழம்பிப் போவதை தடுப்பதில் அந்த மக்கள் ஆர்வமாக உள்ளரென அமைச்சர் குறிப்பிட்டார்.
 
சுற்றுலா மற்றும் முதலீட்டுக்கு பயமுறுத்தல் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இவை தேவையற்றவையற்றதுடன் விஷமத்தனமானதாகும். இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் நன்மைபெற்றது இலங்கை மட்டுமல்ல முழு தெற்காசிய பிராந்தியமும் நன்மையடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
 
இந்த வகையில் கப்பல் பாதைகளின் பாதுகாப்பு, ஆட்கடத்தல்,சிறு ஆயுதங்களை கட்டுபடுத்தல் என்பவற்றுக்கு இலங்கை கணிசமாக பங்களித்துள்ளதாக அமைச்சர் கூறினார். இவ்வாறான நடவடிக்கைகளை கையாள ஆரம்பத்திலேயே தீவிர நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார்.

தமிழரையும் பயங்கரவாதம் எனும் வார்த்தையையும் 30 வருடமா ஓயாமல் சேர்த்து ஒப்பாரிவைக்கிறான். ஒருவரையும் அமைப்பின் செயலாளர் நாயகம் என்றோ ஊடக அமைச்சர் என்று அழைக்கவில்லை.

நாமும் ஒவ்வொரு சிறி லங்கா என்ற வார்த்தையுடன் ஜெனோசைட் என்ற வார்த்தையை பாவிக்க பழகவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.