Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவக் கெடுபிடிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்! - யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
இராணுவக் கெடுபிடிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்! - யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை. 
[Friday, 2014-04-25 16:21:18]
union-250414-150.jpg

மாணவர்கள் மீதான இராணுவக் கெடுபிடிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதியில் நேற்றைய தினம் இராணுவப் புலனாய்வாளர்கள் அத்துமீறி உள்நுழைந்து சல்லடைபோட்டுத் தேடுதல் நடத்தியுள்ளதுடன் மாணவர்களையும் அச்சுறுத்திச் சென்றுள்ளனர். இதனால் மாணவர் விடுதி மற்றும் பல்கலைக்கழக சூழலில் பெரும்பதற்றம் நிலவியுள்ளது. இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. மேலும் இவ் அறிக்கையில்-

  

இது தொடர்பாக நிர்வாகத்தினருக்கு அறிவித்த போதும் பேசாமடந்தைகளாக அவர்கள் இருப்பது மாணவர் மத்தியில் பெரும் அதிருப்தியை அளித்துள்ளது. இரண்டாவது தடவையாக துணைவேந்தராகப் பதவியேற்று சில மணிநேரங்களிலேயே இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது என்றால் எதிர்வரும் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு எவ்வாறு இருக்கும் என்பது மாணவர்கள் மத்தியில் கேள்விக் குறியாக உள்ளது.

மாணவர் விடுதிகளினுள்ளே பதிவு செய்யப்படாத மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்கள் உட்பட எவருமே அனுமதிக்கப்படுவதில்லை. இது விடுதியைச் சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்புக் கருதியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும் இராணுவப் புலனாய்வாளர்களின் இந்த அத்துமீறல் எதற்காக?

அனைத்துவகைகளிலும் எமது கருத்துரிமைகளைப் பயங்கரவாதம் என்ற பொருளைக் காரணம் காட்டி அடக்கிவரும் பாதுகாப்புத் தரப்பு காரணமே இல்லாமல் இவ்வாறு அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்துகின்றமையானது மாணவர்கள் மத்தியில் கடும் அச்ச உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.

நாம் கேட்பதெல்லாம் மாணவர்களுக்குரிய நியாயமான உரிமைகளே. நாம் எப்போதும் ஜனநாயகத்தை நேசிப்பவர்கள். ஆகவே எமது கல்விச் செயற்பாடுகளிற்கு இடையூறுகளை ஏற்படுத்தவல்ல இத்தகைய விஷமத்தனமான செயற்பாடுகளை எம்மீது பிரயோகிப்பதை உடன் நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://seithy.com/breifNews.php?newsID=108099&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.