Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டாக்டர். நல்ல ஜி. பழனிசுவாமியுடன் நேர்காணல்

Featured Replies

தமிழகத்தின் தொழில் நகரமாக விளங்கும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள கோவை மெடிக்கல் சென்டர்  ஹொஸ்பிட்டல் மருத்துவமனையில், பற்சிகிச்சை முதல் மிகுந்த சிக்கல் வாய்ந்த இருதய, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் வரை அனைத்து சிகிச்சைகளும் உன்னத தரத்தில் வழங்கப்பட்டுவருகிறது.
doctor-palanisuwamy.jpg
 
இங்கு, உயிராபத்து விளைவிக்கக் கூடிய புற்றுநோயை குணப்படுத்துவதற்கென்றே 800 படுக்கைகள் கொண்ட தனி சிகிச்சைப் பிரிவு ஒன்று அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
அதுமட்டுமன்றி, தமிழகத்திலேயே முதன்முறையாக பெட் சிடி ஸ்கேன் (PET CT Scan)  பரிசோதனையையும் அறிமுகப்படுத்தியுள்ளது கே.எம்.சி.எச். இம்மருத்துவமனையின் தரத்தை முன்வைத்து, தென்னிந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக கே.எம்.சி.எச். தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
 
இம்மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசுவாமி, அவரது உலகத்தரமிக்க பிரமாண்ட மருத்துவமனையான கே.எம்.சி.எச்.சின் சிறப்பம்சங்கள், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட புற்றுநோய்ப் பிரிவு மற்றும் சர்வதேச நோயாளர் பிரிவு முதலியன பற்றி விளக்கிக் கூறுகின்றார்.
 
பெட் சிடி ஸ்கேன் என்பது, புற்றுநோயைக் கண்டறியும், அதன் பரவுகையைக் கண்டறியும் ஒரு அதிநவீன உபகரணம்.  இதில் உள்ள முக்கியமான சிறப்பம்சம், சிடி ஸ்கேன் போன்ற, ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியாக ஆராயாமல், ஒட்டுமொத்த உடலையுமே ஆராய்ந்து அறிக்கை தருவதே. இதனால், ஒரு முறை பெட் சிடி ஸ்கேன் செய்துகொண்டால், உடலில் எங்கெங்கெல்லாம் புற்றுநோய்க் கிருமிகள் பரவியிருக்கின்றன என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம். இதனால், எந்தப் பகுதியில் எந்தவிதமான சிகிச்சைகளைச் செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் திட்டமிடுவதற்கு பெட் சிடி ஸ்கேன் பெரும் உதவியாக இருக்கிறது.  இது, இந்த ஸ்கேனரின் ஒரு பகுதிதான்.
 
பெட் சிடி ஸ்கேனரின் அடுத்த பகுதிதான் காமா கெமரா. இது புற்றுநோயுடன் தொடர்பில்லாத வேறு பல நோய்களை - உதாரணமாக, சிறுநீரகச் செயலிழப்பு, தைரொய்ட், இதய நோய் - போன்றவற்றை - அடையாளம் காண உதவுகின்றது. சாதாரணமாக, சிடி ஸ்கேன் அல்லது எம் ஆர் ஐ ஸ்கேன் என்பன, உடலின் உள்ளுறுப்புக்கள் ஒவ்வொன்றினதும் தோற்றத்தை மட்டுமே எமக்கு எடுத்துக்காட்டும். ஆனால், இந்த காமா கெமராவினால், அந்த உறுப்புகளின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை அவதானிக்க முடியும்.  இதுபோன்ற நவீன உபகரணங்களைக் கொண்டு, ஒவ்வொரு நோய்க்குமான சிகிச்சையின் பின்னர், அவ்வுறுப்புக்களின் ஒவ்வொரு அணுவும் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பரிசோதிக்க முடிகிறது. 
 
சமீபகாலம் வரை, ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியாக அந்தந்த உறுப்புக்களை ஸ்கேன் செய்யும் முறையே பயன்பட்டுவந்தது. இதன்போது, அதிகளவிலான கதிர்கள் மனித உடலுக்குள் செலுத்தப்படுவதால், கதிர்வீச்சுப் பாதிப்புக்களுக்கு நோயாளிகள் ஆளாகிவந்த அதேநேரத்தில், தேவையற்ற பணச் செலவையும் அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்தது.
மேலும், ஒவ்வொரு பரிசோதனைக்கும் காத்திருக்க வேண்டி இருந்ததால், அந்தக் காத்திருப்புக் காலத்தில் நோய் பரவவும் இடம் உண்டு. பெட் சிடி ஸ்கேன் முறை மூலம், ஒரே தடவையில், உடலின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள பிரச்சினைகளைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.  இதனால், பெட் சிடி ஸ்கேன் பரிசோதனையைச் செய்துகொண்ட மறுநாளே, நோயாளிகள் தம்மை சிகிச்சைக்கு உட்படுத்திக்கொள்ள முடியும்.
 
நோயறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் மட்டுமன்றி, நோயாளர்களைப் பராமரித்தலிலும் எமது மருத்துவமனை தனிக் கவனம் செலுத்துகிறது. அவர்களது இரத்தம், சிறுநீர் மற்றும் இன்ன பிற மாதிரிகளைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கு தனிமையான அலகு ஒன்றை நிர்மாணித்திருக்கிறோம். அவர்கள் பயன்படுத்தும் மலசலகூடங்களுக்கென்றே தனியான வடிகான்களை அமைத்திருக்கிறோம். இதனால், அவர்களது உடலில் உள்ள கிருமிகள் வேறு எங்கும் பரவா வண்ணம் வகை செய்கிறோம். இவை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் தனிச்சிறப்பு.
 
இருபது ஏக்கர் பரப்பளவு கொண்ட எமது மருத்துவமனையில் சர்வதேச நிபுணத்துவம் பெற்ற சுமார் 150 முழுநேர மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். பல் மற்றும் முகச்சீரமைப்பு சிகிச்சைப் பிரிவு, தோல் நோய் சிகிச்சைப் பிரிவு, நீரிழிவு, அவசர நோயாளர் பிரிவு, காது, மூக்கு, தொண்டைப் பிரிவு,  லேப்ராஸ்கோப்பிக், சமிபாட்டு நோய் சிகிச்சைப் பிரிவு, தலை மற்றும் கழுத்து சிகிச்சைகள், சிசு நோய் சிகிச்சைப் பிரிவு, உடற்பருமன், சிகிச்சை, பெண்ணோயியல் மற்றும் மகப்பேற்று சிகிச்சைகள், கண் நோய் சிகிச்சைகள், குழந்தை நல சிகிச்சைகள், பிளாஸ்ரிக் சிகிச்சைப் பிரிவு, மனோதத்துவ சிகிச்சைகள், இதயநோய்ப் பிரிவு, சிறுநீரக நோய்கள் மற்றும் எலும்பு மூட்டு, தண்டுவட சிகிச்சைகள் என, மனிதனது இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய உடல் ரீதியான அனைத்துப் பிரச்சினைகளுக்கும், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
நம்மை நாடி வரும் ஒவ்வொரு நோயாளியையும் தனிக்கவனம் செலுத்திப் பராமரிக்கிறோம். இவையனைத்தும் ஒன்றிணைந்தே, தென்னிந்தியாவின் சிறந்த மருத்துவமனை என்ற விருதை எமக்குப் பெற்றுத் தந்துள்ளது.
 
மேலும், சர்வதேச நோயாளிகளுக்காகத் தனித் தளம் ஒன்றையே நிர்மாணித்திருக்கிறோம். இதில், மூன்று வகையான தங்கும் அறைகள் சகல வசதிகளுடனும் நோயாளி தவிர அவருடன் வருபவர்கள் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 
 
கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொருத்தமட்டில், எமது மருத்துவமனையே இருதய மற்றும் கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையை முதன் முதலாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடித்தது எனப் பெருமையாய் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுகொண்டால், அனைத்து நோய்களுமே குணப்படுத்தக் கூடியனவே. உங்கள் சந்தேகங்களை 0091 8220012455 அல்லது 0091 9843488299 என்ற தொலைபேசி எண்களுடன் தொடர்புகொள்ளலாம். எனவே, நீங்கள் எந்த நோயால் அவதிப்படுபவராக இருந்தாலும் நம்பிக்கையுடன் எம்மை அணுகுங்கள். நிச்சயம் உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு உண்டு.
 
டாக்டர். நல்ல பு. பழனி சுவாமி

 

http://www.youtube.com/watch?v=uzv2dnfb-mY

 

http://virakesari.lk/articles/2014/04/18/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.