Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் பாடசாலைகளுக்குள் நுழைந்து அடாவடித்தனம் செய்வதை இராணுவம் நிறுத்த வேண்டும்! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் பாடசாலைகளுக்குள் நுழைந்து அடாவடித்தனம் செய்வதை இராணுவம் நிறுத்த வேண்டும்! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தல். 

[Monday, 2014-04-28 06:59:39]
suresh-280414-150.jpg

வடக்கில் உள்ள பாடசாலைகளுக்குள் நுழைந்து அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் அடாவடித்தனம் புரிவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். வடக்கில் மன்னார் மடு கல்வி வலயத்துக்குட்பட்ட சில பாடசாலைகளுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை சிவில் உடையில் அத்துமீறிப் பிரவேசித்த இராணுவப் புலனாய்வாளர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை தனித்தனியாகவும், பாடசாலை மாணவர்களை வகுப்பறை ரீதியாக குழுவாகவும் புகைப்படம் எடுத்து விவரம் திரட்டிச்சென்றுள்ளனர்.

  

இதனால், பாடசாலை சமூகத்தினர் கடும் மன உளைச்சலும், பீதியும் அடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜெனிவாத் தீர்மானத்திற்குப் பின்னர் புலிப்பூச்சாண்டி காட்டி வடக்கில் தமிழ் மக்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படைத்தரப்பினர், தற்போது பாடசாலைகளுக்குள்ளும் அத்துமீறி நுழைந்து தமது சண்டித்தனங்களைக் காட்டத் தொடங்கிவிட்டனர். இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். இராணுவப் புலனாய்வாளர்களின் இந்த அடாவடி செயலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

இராணுவப் புலனாய்வாளர்களின் இந்த அடாவடியால் மன்னார் மாவட்டம் மட்டுமல்ல வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சத்தின் மத்தியில் உள்ளனர். நாளை என்ன நடக்கப் போகின்றதோ என்ற ஏக்கத்தில் அவர்கள் இருக்கின்றனர். எனவே, பாடசாலைகளுக்குள் நுழைந்து அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் தமது அடாவடியைக் காட்டுவதை உடனடியாக நிறுத்தவேண்டும்.

இதேவேளை, எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபைகளின் உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றுகூடும் முக்கிய கூட்டத்தில் இராணுவத்தினர் பாடசாலைகளுக்குள் புகுந்து தமது அடாவடித்தனத்தைக் காட்டுவது தொடர்பிலும், அதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்படும்" என்றார்.

http://seithy.com/breifNews.php?newsID=108228&category=TamilNews&language=tamil

மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதாக புலம்பெயர் சிறி லங்கன் பப்புரைவாதிகள் திரிப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.