Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டி முறைமையே எமக்கு வேண்டும் - கிழக்க மாகாண சபை உறுப்பினர் நடராஜா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாட்டில் பெரும்பான்மை இனத்தைப் போன்று சம அதிகாரத்துடன் வாழக்கூடிய சமஷ்டி முறையிலான ஆட்சிமுறையே வேண்டும், அபிவிருத்திகள் அல்ல. இவற்றையே எமது மக்கள் கேட்கின்றனர் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா. நடராசா தெரிவித்தார்.
 
தந்தை செல்வா அவர்களின் நினைவு தினம் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் கிராமத்தலைவர் அ. கந்தவேள் தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிiமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
மீள்கட்டுமானம், மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வெளிநாட்டு நிதியினைக் கொண்டு ஒரு சிலருக்கு நிவாரணங்களை வழங்கி தங்களின் சொந்த இடங்களில் நிம்மதியாக இருக்கின்றார்கள் என சர்வதேசத்தினை பூச்சாண்டி காட்டி நிற்கின்றது அரசு. 
 
ஏன் இப்பிரதேசங்களுக்கு வருகை தருகின்ற மீள்குடியேற்ற பிரதியமைச்சர் அவர்களும் மீள்குயேற்றப்பட்டு அவிருத்திகள் இடம் பெறுவதாக கூறிவருவதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இவற்றினை செய்யமுடியுமா? எனவும் கேள்வி எழுப்பிவருகின்றார்.
 
அபிவிருத்திக்காக எமது மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. உரிமையை நிலை நாட்டவே வாக்களித்துள்ளனர். அவற்றையே நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். எமது மக்கள் இந்த நாட்டில் பெரும்பான்மை இனத்தைப் போன்று சம அதிகாரத்துடன் வாழக்கூடிய சமஷ்டி முறையிலான ஆட்சிமுறையே எமக்கு வழங்கப்படவேண்டும். ஆனால் அபிவிருத்திகள் அல்ல என எமது மக்கள் கேட்கின்றனர். இவற்றினையே தந்தை செல்வா தொடக்கம் இன்றுவரை எடுத்தியம்பி வருகின்றோம்.
 
எமது தமிழினத்தின் பிரச்சினையை யுத்தத்தை காரணங்காட்டி அதனை அரசாங்கம் பயங்கரவாத பிரச்சினையாக சித்தரித்து பொய் பிரசாரம் செய்து சர்வதேசத்திடம் பல உதவிகளை பெற்று எமது நடவடிக்கைகளை மழுங்கடித்தது. இதனை நம்பி சர்வதேசம் உதவிபுரிந்தமை கவலைக்குரிய விடயம். 
 
தற்போதைய சூழ்நிலையில் எமது மக்களின் உரிமைகள் இலங்கை அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டாலும் இன்று தமிழர் தொடர்பான பிரச்சினை பயங்கரவாத பிரச்சினையல்ல உரிமை தொடர்பான பிரச்சினை என சர்வதேசம் நன்குகர்ந்திருக்கின்றது. மாறாக தமிழருக்குரிய தீர்வினை பெற்றுதருவதற்கு முன்வந்துள்ளது. 
 
தற்பொழுது ஐக்கியநாடுகள் சபையில், இலங்கை அரசாங்கம் போர்குற்றங்களை புரிந்துள்ளது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்காக இலங்கை அரசினை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசு அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை என பொய் பிரசாரங்களை மேற்கொள்வதனூடாக தப்பிக்கொள்ளமுடியுமென அரசு தப்புக்கணக்கு போடுகின்றது. எது எவ்வாறாக இருந்தாலும் சர்வதேச சமூகத்தினை ஏமாற்ற முடியாது என்பதுதான் உண்மை.
 
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் தற்போது கூறுகின்றார், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இளைஞர்களை எல்லாம் நான்காம் மாடிக்கு அனுப்பபோகின்றது என்று. அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இந்த சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்திருக்கமாட்டார். வெறுமனே பிள்ளையானாகத்தான் இருந்திருப்பார் என்பதனை புரிந்து கொள்ளவேண்டும்.
 
இலங்கையில் முதலில் நிலவிவந்த தேசாதிபதி ஆட்சிமுறையினை மாற்றி ​ஜெ.ஆர்.ஜெவர்த்தனா அவர்கள் சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு இருக்கின்ற அதிகாரம் போதாத காரணத்தால் இதனைமாற்றி இந்தநாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை கொண்டுவந்தார்.
 
இதற்கமைவாக யாப்பினையும் மாற்றியமைத்தார் இதன் மூலம் எமது தமிழினத்தினை அடக்கலாம் ஒடுக்கலாம் என ஜெவர்த்தனா அவர்கள் நினைத்தார். இதனை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் இன்றைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பௌத்த மேலாதிக்கத்தினை நிலைநாட்ட அதற்கு மேலாக எத்தனை தடவைகளேனும் ஜனாதிபதியாக இருக்கலாம் என்கின்ற முறையை இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் அனைத்து விடயங்களையும் மழுங்கடிப்பதற்காக மேற்கொண்டு இருக்கின்றது. இதில் கவலை என்னவென்றால் அவர் தொடர்ச்சியாக இருக்கப் போவதில்லை என்பதுதான் என அவர் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=187552965707785188#sthash.boK277Rd.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.