Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொண்டர்கள் என்ற போர்வையில் தமிழ் இளைஞர், யுவதிகளை படைத்தரப்பில் இணைக்க நடவடிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டர்கள் என்ற போர்வையில் தமிழ் இளைஞர், யுவதிகளை படைத்தரப்பில் இணைக்க நடவடிக்கை!

சிறிலங்கா படைத்தரப்பில் உள்ள வெற்றிடங்களுக் தொண்டர்கள் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சிறிலங்காவின் படைத் தலைமையகத்தினால் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபபில் இதற்கான அறிவித்தலை யாழ்.மாவட்ட படைத்தரப்பின் ஊடக இணைப்பாளர் மல்லவராட்சி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'வயதின் அடிப்படையில் ஓய்வு பெற்றவர்கள், சேவை அடிப்படையில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் வேறு தொழில் தேடி இடைவிலகிச் சென்றவர்கள் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் தொண்டர்களாக கடமையாற்றுவதற்கு 700 தொடக்கம் 800 வெற்றிடங்கள் உள்ளன.

எனவே விரும்பியவர்கள் தொண்டர்களாக இணைந்து கொள்ளமுடியும். இதற்காக காங்கேசன்துறையில் மூன்று மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதன்போது மரவேலை, கைத்தொழில் முயற்சிகள் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பயிற்சியின் நிறைவில் சான்றிதழும் வழங்கப்படும்.

அத்துடன் பயிற்சிக் காலத்திலும் சம்பளம் வழங்கப்படும். மேலும் உணவு, இருப்பிடம், மருத்துவம், போக்குவரத்து ஆகியன இலவசமாக வழங்கப்படுவதுடன் குடும்பத்தினருக்கும் சலுகைகள் வழங்கப்படும். பயிற்சி முடிவடைந்ததும் படைத்தரப்பின் தொண்டர்களாக இவர்கள் உள்வாங்கப்பட்டு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா சம்பளமும் வழங்கப்படும்.

குறித்த பணியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல விரும்பாதவர்கள் கடிதம் மூலம் அறிவித்து விட்டு விலகிச் செல்ல முடியும். இதற்கு எதுவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. இதற்கு 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஆண்கள் 22 வருட நிறைவிலும், பெண்கள் 15 வருட நிறைவிலும் ஓய்வு பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு ஓய்வூதியமும் வழங்கப்படும். மேலதிக கல்வியினை தொடர விரும்புபவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தனியார் ஊடாக வழங்கப்படுவதுடன் வெளிநாட்டு புலமைப்பரிசில்களும் வழங்கப்படும்.

எனினும் அதிகாரிகளை இணைப்பதற்கே வர்த்தமானியில் அறிவிக்கப்படுமே ஒழிய, தொண்டர்களை இணைப்பதற்கு அல்ல. இவ்வாறே தான் தெற்கிலும் தொண்டர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும் கடந்த காலங்களில் வடக்கில் ஆட்களை இணைப்பதற்கான சூழ்நிலை இருக்கவில்லை. எனவே தற்போது அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. தொண்டர்களாக இணைந்து தங்களுடையதும், குடும்ப பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பிணை இளைஞர், யுவதிகள் பயன்படுத்த வேண்டும்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=4146a7f2-d7a9-4ea2-ae9c-73190d75e079

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.