Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு மனைவியை கொன்ற கணவன் தற்கொலை.

Featured Replies

முல்லைத்தீவு, வள்ளிபுனம், கரித்தாஸ் கியுடெக் வீட்டத்திட்டப் பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன், தானும் தற்கொலை செய்துகொண்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அருமைநாயகம் அருள்ராஜ் (வயது 30) என்பவரும், அவரது மனைவியான அருள்ராஜ் செல்வகுமாரி (வயது 28) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர். 

இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக படுக்கையிலிருந்த மனைவியை, கணவன் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்து சென்ற கணவன், வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் இருப்பதுடன், இவ்விடயம் தொடர்பாக அவர்களின் 3 வயதுப் பிள்ளை அயலவர்களுக்குத் தெரிவித்ததினையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு சடலங்களையும் நீதவானின் உத்தரவிற்கமைய மீட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/110106-2014-05-11-11-06-43.html

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தின் பின்னரான அவலமும் இராணுவ ஆட்சேர்ப்பும் 2 உயிர்ப் பலியும் அனாதரவான 2குழந்தைகளும்:-

11 மே 2014

இலங்கை இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்று வந்த தன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன், தானும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவமொன்று முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 30 வயதுதுடைய அருமைநாயகம் அருள்ராஜ் அவரது மனைவியான அருள்ராஜ் செல்வகுமாரி 28 வயதுடைய ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் அண்மையில் இராணுவத்திற்கு பெண்களை இணைக்கும் பிரச்சார நடவடிக்கையின் கீழ் குறித்த பெண்ணான அருள்ராஜ் செல்வகுமாரி பயிற்சிக்கு சென்றுள்ளார். உயிரிழந்த அருள்ராஜ் சிவில் பாதுகாப்புப் படையில் கடமையாற்றி வருகிறார். இந்நிலையில் இரு குழந்தைகளும் அநாதையாக விடுக்கப்பட்டதாக கவலை கொண்ட அவர் தற்கொலைக்கு முற்பட்டு தப்பித்துள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தை பார்வையிட செல்வகுமாரி கடந்த பத்து தினங்களிற்கு முன்னதாக விடுமுறையில் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக படுக்கையிலிருந்த மனைவியை, கணவன் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளாதாக 3 வயது குழந்தை சாட்சியமளித்துள்ளது. பின்னர் வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் சென்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது. இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்களின் 3 வயதுப் பிள்ளை அயலவர்களுக்குத்தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரண்டு சடலங்களையும் நீதிவானின் உத்தரவிற்கமைய புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இதே வேளை இந்தச் சம்பவம் பற்றி புதுக்குடியிருப்பு பொலிசார் தனக்கு அறிவித்ததை அடுத்து, சடலங்களைப் பார்வையிட்டு மருத்துவ பரிசோதனை செய்ததாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட பதில் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சின்னையா சிவரூபன், மனைவியின் கழுத்து அறுத்து துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், கணவன் வீட்டின் பின்புறமுள்ள உயர்ந்த மரம் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் இறந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106761/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.