Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளாஸ்கோ பொதுநலவாய விளையாட்டுப் போட்டி - மகிந்த பங்கேற்கக்கூடிய அபாயம் குறித்து தொழிற்கட்சி விசனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளாஸ்கோ பொதுநலவாய விளையாட்டுப் போட்டி - மகிந்த பங்கேற்கக்கூடிய அபாயம் குறித்து தொழிற்கட்சி விசனம்!

இவ்வருட கோடைக்காலத்தில் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆற்றக்கூடிய பங்குகள் குறித்த தனது கடுமையான விசனத்தை பிரித்தானிய தொழிற்கட்சியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினரும் நிழல் வெளிவிவகாரச் செயலாளருமான டக்ளஸ் அலெக்ஸாண்டர் மீண்டும் வெளியிட்டிருக்கிறார்.

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியத்துக்கான செயலாளர் வில்லியம் ஹேக் அவர்களுக்கு கடந்த 8ஆம் திகதி அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே இது தொடர்பில் தனது விசனத்தை வெளியிட்டுள்ளார்.

'சுமார் 17 போட்டிகளில் ஸ்கொட்லாந்து அணியின் மெய்வல்லுனர்கள் கலந்து கொள்ளவுள்ள இந்த விளையாட்டுப் போட்டிகள் ஸ்கொட்லாந்திற்கு, குறிப்பாக கிளாஸ்கோ நகரிற்கு மிகவும் பெருமைசேர்க்கும் விடயமாகும். ஆனாலும், உலகத்தரம் வாய்ந்த இந்த விளையாட்டுப் போட்டிக்கான கொண்டாட்ட நிகழ்வுகளில் பொதுநலவாயத்தின் தற்போதைய தலைவராக விளங்கும் சிறிலங்கா ஜனாதிபதி பங்கேற்க இருக்கக்கூடிய வாய்ப்புகளினால், அவை தரங்குன்றிப் போவதற்கான அபாயத்தைச் சந்தித்திருக்கிறது' என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளருக்கு எழுதியுள்ள தனது கடிதத்தில் டக்ளஸ் அலெக்ஸாண்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் சிறிலங்கா பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டினைக் கூட்டியபோது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தானாகவே பொதுநலவாயத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்கும் தன்மையினை தடுப்பதற்காக ஏனைய பொதுநலவாய உறுப்பு நாடுகளுடன் இணக்கப்பாடு ஒன்றினை எட்டும்படி தொழிற்கட்சி கோரியிருந்தது.

இதனைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள டக்ளஸ் அலெக்ஸாண்டர், 'பிரித்தானியாவின் மனித உரிமைகள் அறிக்கையில் கவலையளிக்கும் நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் ஜனாதிபதியாக விளங்கும் மகிந்த ராஜபக்சவிற்கு பொதுநலவாயத்தைச் சர்வதேச அரங்கொன்றில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இருக்கக்கூடிய தகைமை தொடர்பில் இருக்கக்கூடிய பொது விசனம் குறித்து' தான் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தமையையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

'அன்று தொடக்கம், இலங்கையின் மனித உரிமைகள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உள்ளக சுயாதீன விசாரணை ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென்ற பிரித்தானியாவின் கோரிக்கையை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறைவேற்றத் தவறிவிட்டார். இதனால், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அங்கு சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்வதற்காக தனது விசாரணைக் குழுவொன்றை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஷபக்ச இதனை வெளிப்படையாக நிராகரித்திருக்கும் அதேவேளை, அவரது வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந்த விசாரணையில் சிறிலங்கா பங்கேற்காது என்று தெரிவித்திருக்கிறார்' என்று தனது கடிதத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.

தனது நாட்டின் பாரிய மனித உரிமை மீறல் நிலைமைகளை மறைப்பதற்கு பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டினை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்த முயல்வதாக உலக எச்சரிக்கை ஸ்தாபனம் மற்றும் மனித உரிமை கண்காணிப்புக் குழு போன்ற பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்திருந்த அச்சத்தினை மேற்கோள்காட்டியுள்ள டக்ளஸ் அலெக்ஸாண்டர், 'உலகத்தரம் வாய்ந்த இந்த விளையாட்டுப் போட்டிக் கொண்டாட்டங்களில் சிறிலங்கா ஜனாதிபதி பங்கேற்க இருக்கக்கூடிய வாய்ப்புகளினால் அவை தரங்குன்றிப் போவதற்கான அபாயத்தை தவிர்ப்பதற்குப் போட்டி ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து பிரித்தானிய அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா? அப்படியாயின் அவை என்னென்ன' என்றும் தனது கடிதத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

தொழிற்கட்சிக்கான தமிழர் அமைப்பினூடாக இந்த கடிதம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பலவருட காலமாக பிரித்தானியத் தமிழர்களை தொழிற்கட்சியின் வருடாந்த மாநாடுகளில் வெளிப்படுத்தி வரும் தொழிற்கட்சிக்கான தமிழர் அமைப்பின் தலைவர் சென் கந்தையா, மோசமாகிச் செல்லும் மனித உரிமை நிலைமைகள் குறித்த பிரித்தானியாவின் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ள மறுத்ததால் பிரித்தானியா ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்திற்கு வாக்களித்திருந்தது என்றும், ஆனாலும் மகிந்த ராஜபக்ச அதனையும் நிராகரிதிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

'ஆகவே, இந்தத் தருணத்தில் பிரதர் டேவிட் கமருன் நிழல் வெளிவிவாகரச் செயலாளர் டக்ளஸ் அலெக்சாண்டரின் அறிவுரையை ஏற்று, சிறிலங்கா தனக்குண்டான சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் வரைக்கும், சிறிலங்கா ஜனாதிபதி பிரித்தானியாவுக்குள் வரவேற்கப்படக்கூடாது,' என்று சென் கந்தையா வலியிறுத்திக் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=d7831b0d-9761-4589-8c0f-143f2bcf64a5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.