Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'முத்துமணிச் சுடரே … வா' பாடலுக்கு Triple Congo வாசித்தவர்

Featured Replies

-அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா
 
 
அன்புள்ள ரஜினிகாந்திற்காக ராஜா அமைத்த " முத்துமணிச் சுடரே … வா.".  `இந்தப்பாட்டின் தாள வாத்தியமான Triple Congo வினை வாசித்தவர் யாரென்று எவருக்காவது தெரியுமா ? அதை வாசித்தவர்தான் இசைஞானியின் முதல் ரசிகன்.அவரின் பெயர்....
 
 
அவர் ஒரு கிராமத்தவர். நுண்ணிய இசையறிவு , இயற்கை அவருக்கு வழங்கியிருந்த கொடை. அவருடன் இரண்டு சகோதரிகளும் மூன்று சகோதரர்களும் கூடப்பிறதிருந்தார்கள். அவருக்கு நேரே மூத்த சகோதரருக்கு தனது தம்பியிடம் இயற்கையாகவே குடிகொண்டிருக்கும் இசைத்திறமையைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது.
 
 
இவ்வளவு திறமை தனது தம்பிக்கு இருந்தும் அந்தத் திறமை தன்னால் புரிந்து கொள்ளப் பட்டது போல உலகால் புரிந்துகொள்ளப் படுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தால் உந்தப்பட்ட அந்த அண்ணன் தனது தம்பியின் திறமைகளை பலரிடம் கூறி வாய்ப்புக் கேட்டார்… . ஒருவாறாக அவர் நினைத்ததைப்போலவே அவரது தம்பி இசைக்கலைஞராக தமிழ்த்திரையிசைக்குள் உள்நுழைந்து மிக வேகமாக தமிழ்த் திரையிசை வரலாற்றில் ஒரு முக்கியஸ்தராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்… சாதித்தார்.
 
 
தம்பியின் மேதமைத்தனமான இசைக்கு மயங்கிய கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்று உலகெங்கும் உள்ளனர், ஆனால் அவரைப்புரிந்து கொண்டு ரசித்த முதல் ரசிகன் அந்த அண்ணன்தான். அந்த அண்ணன்
 
 
ஆர்.டி. பாஸ்கர் எனப்படும் ராமசாமி டானியேல் பாஸ்கர் .அவரின் தம்பி. இளையராஜா..எனப் பெயர் சூட்டப்பட்ட ராமசாமி டானியேல் ராசையா.
 
26ilayaraja.jpg
இசைஞானி, பண்ணைபுரம் என்ற கிராமத்தில் மூன்று சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் பிறந்தவர்.. அவர்களின் பெயர்கள் கீழ்வருமாறு:
 
 
வரதராஜன். ( இவரின் பெயருக்கு முன்னால் " பாவலர் " என்ற அடைமொழி இடப்படுவதுண்டு)
கமலம் முனியாண்டி
பத்மாவதி ராஜன்
ஆர்..டி.பாஸ்கர்
இளையராஜா என்கிற ராசையா
கங்கை அமரன் எனப்படும் அமர்சிங்.
 
 
இவர்களில் மூத்த சகோதரி திருமதி கமலம் முனியாண்டியின் மகன்தான் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக அவரின் பேஸ் கிட்டார் கலைஞராக அவருடனேயே கூட இருக்கும் சசிதரன் முனியாண்டி எனப்படும் சசி அண்ணர்.
 
 
சகோதரர்களில் கங்கை அமரனைப்பற்றியும் பாவலர் வரதராஜனைப்பற்றியும் எங்கேனும் கேள்விப்பட்டிருப்போம். ஆர்.டி.பாஸ்கர் இசைஞானியின் அண்ணன் என்பதும் அவருக்காக வாய்ப்புத் தேடியவர் என்பதும் ஓரளவுக்குத் தெரியும்… ஆனால் இதே பாஸ்கரை தனது அருமையான பாடலொன்றுக்கு தாளவாத்தியமொன்றை வாசிக்க வைத்துள்ளார் ராஜா என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
 
 
பாஸ்கர் இசைஞானியின் சகோதரர் மட்டுமல்ல நல்லதொரு தாளவாத்தியக் கலைஞர். இது பலருக்குத் தெரியாது. இசைஞானி பிரபலமாகாத அவரின் ஆரம்பகாலத்தில் இசைக்கச்சேரிகள் செய்து கொண்டு ஊர் ஊராகத் திரிந்தபோது அவரின் உள்ளூர் குழுவில் தப்லாக் கலைஞர் இந்த பாஸ்கர்தான்.
 
 
ராஜா சென்னை வந்த பிற்பாடு அவருக்குச் சான்ஸ் கேட்டு அலையோ அலையென்று அலைந்தது ராஜாவல்ல.. இந்த பாஸ்கர்தான்.
 
 
ராஜா தன்னை நிரூபித்து அவருக்கான முதல் படம் 1976 இல் கிடைத்தபோது அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடலான அன்னக்கிளி உன்னைத்தேடுதேயிற்கு தனது அண்ணனான பாஸ்கரையே " பேஸ் டோலக் " வாசிக்கவைத்தார் இசைஞானி.
 
 
அதன்பின் ராஜாவுடன் அவரின் வளர்ச்சியைக் கவனிப்பதில் தனது கவனத்தை திசை திருப்பிய திரு.பாஸ்கரிடம் 80களின் நடுப்பகுதியில், இளமையான ரஜினியின் படமான அன்புள்ள ரஜினிகாந்தில் இடம்பெற்ற முத்துமணிச் சுடரே…. வா.. என்ற பாட்டிற்கு , திஸர ஜாதி நடையில் தாளக்கட்டை அமைத்த ராஜா, அதனை Triple Congo இல் வாசிக்கும்படி அழைத்தது பாஸ்கரையே. அதை ஏற்றுக் கொண்ட பாஸ்கர் அதி அற்புதமாக வாசித்ததுதான் நாம் இப்போதும் கேட்டுக்கிறங்கும் ஜேசுதாஸ் பாடிய முத்துமணிச் சுடரே …. வா……
 
 
இந்தப்பாடலில் Triple Bongo வாசிப்பதற்கு அமரர் பாஸ்கர் தான் சரியாக இருப்பார் என்பது எப்படி ராஜாவுக்குத் தெரிந்தது என்பது ராஜாவுக்கே வெளிச்சம். ஆனால் பாடலை நன்கு உற்றுக் கேட்டுப்பாருங்கள், டக்குருடு...டக்குருடு... டக்குருடு.. என்று பல்லவியியிலும் இரண்டு சரணங்களுக்கு இடையிலும் வரும் இடையிசைகளிலும் காட்டாற்று வெள்ளமாக , வேகமாக ஒரே Timing இல் போய்க்கொண்டிருக்கிறது Triple Congo.
 
ஆனால் அதே கொங்கோ சரணத்தில் தனது நடையை மாற்றி அமைதியான ஆறுபோல, ஜேசுதாசின் குரலை மேலும் அழகுபடுத்தியபடியும் பாட்டைத் தழுவியபடியும் செல்கின்றது. அந்தப்பாட்டின் தாளக்கட்டுக்கு ஏற்ப தாளம் தப்பாமல் ஒரே வேகத்தில் Triple Congo வாசிப்பது இலேசான விடயமல்ல என்பதை இசை ரசிகர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்பது என் நம்பிக்கை..
 
 
ஆனால் பாஸ்கர்  இந்தப்பாட்டில் கொங்கோவைப் பாவித்த விதமானது Extra Ordinary. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல இந்த ஒரு பாட்டுக்கு வாசித்துள்ளவிதமானது அவரின் திறமைக்கு நல்லதொரு சான்று.
 
 
இத்துடன் இன்னொரு சுவராஸ்யமான விடயத்துடன் இந்தப் பதிவை முடிக்கின்றேன்.
 
 
ராஜா தமிழ்த்திரையிசைக்குள் உள்நுழைந்து பிரபலாகத்தொடங்கிய 1978 இல் பாஸ்கர் , அவரது அக்காவின் மகனும் இளைஞனுமாகிய ஒருவருக்கு கிட்டார் கலைஞர் ஒருவரிடமிருந்து 1700 ரூபாக்களுக்கு Aeria Diamond என்ற வகையான ஒரு பேஸ்கிட்டார் வாங்கிக் கொடுக்கிறார்.
 
அதை வாங்கிக் கொடுத்துவிட்டு, அப்போது பிரபலமாக இருந்த ஒரு பேஸ் கிட்டார் கலைஞனைச் சுட்டிக்காட்டி டேய்.. அவர் வாசிக்கிறமாதிரி வாசிடா.. என்று அன்புக்கட்டளையிடுகின்றார்.
 
 
பாஸ்கரால் பேஸ்கிட்டார் வாங்கிக் கொடுத்து ஊக்குவிக்கப்பட்ட அந்த இளைஞன்தான் அவரது அக்காவின் மகனும் இசைஞானியின் பேஸ்கிட்டார் கலைஞருமான :சசிதரன் எனப்படும் சசி அண்ணர்.
 
 
   சசி அண்ணருக்காக பேஸ்கிட்டாரை 1700 ரூபாவுக்கு பாஸ்கர் வாங்கிய    கிட்டார் கலைஞர்  வாங்கியது சதா என அழைக்கப்படும் சதாசுதர்சனம் சதா. இசைஞானியுடன் இன்றுவரை வாசித்துவரும் அவரது ஆஸ்தான கிட்டார் கலைஞர்.
 
 
தனது மாமா குறிப்பிட்டதைப்போலவே கிட்டார் கலைஞராகி  சதா சாருடனேயே இசைஞானியின் குழுவில் பங்காளிக் கிட்டார் ( பேஸ் கிட்டார் ) கலைஞராக வாசிக்கத் தொடங்கினார் சசிதரன்.. நான் இந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ள முத்துமணிச் சுடரே..வா என்ற பாட்டின் பேஸ் கிட்டார் கலைஞரும் அவரே.
 
 
அப்போது பிரபலமாக இருந்த ஒரு கலைஞரைச் சுட்டிக்காட்டி அவரைப்போலவே எதிர்காலத்தில் வாசிக்கவேண்டும் என பாஸ்கரால் சசி அண்ணருக்கு அறிவுறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தேனல்லவா ? அந்தக் கலைஞன்தான் அப்போதைய பேஸ் கிட்டாரிஸ்ட்டும் இப்போதைய கீபோர்ட் விற்பன்னருமான விஜி மனுவல் .
 
அமரர் பாஸ்கர் இல்லாவிட்டால் இசைஞானியையும் சசி அண்ணரையும் எமது வாழ்க்கையில் கடந்திருப்போமா ?
 
ராசையா என்ற கிராமத்து மனிதருக்குள்ளிருந்த இசைஞானியை அடையாளம் கண்ட முதல் ரசிகன் அவரது அண்ணன்தான்.
 
 
தற்போது உலகம் வியக்கும் உன்னத இசைக்கலைஞனான இளையராஜா என்ற இசை மேதை உருவாகுவதற்கு முக்கிய காரணம். அமரர் ராமசாமி டானியேல் பாஸ்கர் என்கின்ற நல்லதொரு அண்ணனே….
 
 
.படத்தில் ஸ்கூட்டரில் முறையே பாஸ்கரும் . அவரைத் தொடர்ந்து இசைஞானியும் மூன்றாவதாக கங்கை அமரனும் அமர்ந்திருக்கின்றனர் .
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.