Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரத்தப் பிரியர்களே! இரத்தத்தை ஏத்தாலாம் உணர்வை ஏத்தலாமோ? - யாழ்ப்பாணத் தம்பி-

Featured Replies

Army%20attack%20Civilians_cartoon_CI.jpg
 
 
ஸ்ரீலங்காவின்ட இராணுவப் பேச்சாளரின்ட பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அண்டைக்குப் போயிருந்தன். மனுசன் அடிச்சுச் சொல்லுது. சவாலாய் விடுறாராம். முள்ளிவாய்க்கால் நினைவுகாலத்தில இராணுவம் சுத்தி வளைப்பு செய்யேல்லயாம். கோயில எல்லாம் சுத்திவளைக்கேல்லயாம். பாதுகாப்புச் செய்தவையாம். 
 
உவையளின்ட பாதுகாப்பு என்ன பாதுகாப்பு நடவடிக்கை என்ன எண்டு எங்களுக்குத் தெரியும்தானே. சக்தி ரி.வியில உவையள் பாதுகாப்புச் செய்யிற வீடியோக்கள் வந்தது. துப்பாக்கியை ஏந்திக் கொண்டு திரியிறத காட்டினவையள். அது என்னத்துக்காம்? ஒருவேளை முள்ளிவாய்க்கால் நினைவுநாளில மக்களுக்கு பாதுகாப்பு குடுக்க நிண்டவையளோ? 
 
அப்ப ஏன் அண்டைக்கு கிளிநொச்சி கிருஷ்ணன் கோயில் முதல் எல்லாக் கோயிலின்ட நாலு பக்கமும் காவல் நிண்டவை. கிருஷ்ணனுக்கு காவல் குடுத்தவையோ? எங்கட சாமியளயும் விடாம சிலையள உடைக்கிறவை அதுக்குத்தான் நிண்டிச்சினமோ? ஏன் குளோபலில புலனாய்வுத்துறை நிக்கிற படங்கள் வந்ததே? அப்ப அது என்ன? 
 
உந்த மனுசன் வடக்கில நடக்கிறது ஒண்டு கொழும்பில சொல்லுறது ஒண்டு. நல்லா கதைக்கிறதுக்கு மகிந்த ஒரு ஆள வைச்சிருக்கிறார். அதுசரி சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தனாம் ஆண்டி எண்டுற மாதிரி ஏதோ முள்ளிவாய்க்காலுக்கு கொஞ்ச பொடியள் விளக்கு கொழுத்தியிருப்பாங்கள். அவையள அடக்கி ஒடுக்கி ஒட்டுமொத்த சம்பசையும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி ஸ்ரைக் பண்ண வைச்சிருக்கினம். 
 
சரி உவர் இன்னுமொரு கதை விட்டிருக்கிறார். என்ன தெரியுமே? வடக்கில உள்ள சனத்தில தங்கட ரத்தம் ஓடுதாம். இத முதல் ஒருக்க ஹத்துரு சிங்கவும் கத்தினவர். இப்ப இவரும் கத்திறார். உவையள் ஏன் வடக்கில இருக்கினம் எண்டுறத சொல்லாம சொல்லுறினம்? எங்கட இனத்தை அழிக்கத்தான் நிலைகொண்டிருக்கிறம் எண்டு மனுசன் சொல்ல வாறார். 
 
வடக்கு கிழக்கில நிலைகொண்டிருக்கிற ஆமியள் எங்கட புள்ளைய காதலிக்க கேக்கிறது. ஆமிக்கு எடுக்கிறது. இரத்தம் குடுக்கிறது எல்லாம் எங்கட தமிழ் இனத்தின்ட தனித்துவத்த அழிக்கத்தான். இத நான் மட்டுமில்ல அப்பாவும் தாத்தாவும் மட்டுமில்ல உலகமே சொல்லுது. இதில எங்கட சனம் நல்லா விழிப்படைய வேணும் எண்டுறதயும் நாங்கள் புரிஞ்சு கொள்ள வேணும். 
 
பிரிக்கேடியருக்கு ஒண்டு விளங்கேல்ல. இரத்தம் எண்டால் எல்லா இரத்தமும் ஒண்டுதான். மனிசனின்ட இரத்தத்தில பிரிவினை பாத்து கலக்கிறவையள்தான் உவையள். அந்த இரத்தம் எல்லாம் ஒண்டுதான் எண்டு உவருக்கு விளங்கேல்ல. உவருக்கு மாட்டுமில்ல கோத்தா முதல் கொண்டு எல்லா குடும்பஸ்தர்களுக்கும் அது விளங்காம இரத்தம் ஏத்துறினம். 
 
இப்பிடி இரத்தத்த பிரிச்சுப் பாக்கிறவையள்  எங்கட இரத்தின்ட இரத்தம் குடிக்க நிப்பினம் தானே? எங்கட சனத்தின்ட உடம்பில ஓடுற இரத்தத்தை அழிக்க நிப்பினம்தானே? 
 
இவையள் இரத்தப் பிரியர்கள் எண்டு  இப்ப விளங்குதே?  இசைப்பிரியாவின் உடம்பில போத்திருந்த இரத்தமும் பிடரியில சுட்டுக்கொண்டு பொடியள் செத்து விழேக்குள்ள சிந்தின இரத்ததுத் இதுக்குத்தான். உவையள் இரத்தப் பிரியர்கள். இரத்தப் பசியிலதான் எங்கட இனத்த படுகொலை செய்தவையள். 
 
உந்த பிரிக்கேடியப் பேச்சாளருக்கு மட்டுமில்ல கோதாரி விழுந்த கோத்தாவுக்கும் மகிந்தவுக்கும் ஒண்டு விளங்கேல்ல. 
 
இரத்தம் ஏத்தலாம். ஆனால் உணர்வை ஏத்தலாமோ? 
 
எங்கட உணர்வ மாத்தலாமே? அது எங்கட சனங்களின்ட மனசில காலம் காலமாய் இருக்கிற உணர்வு. எங்கட மண்ணில காலம் காலமாய் இருக்கிற உணர்வு. அத எதாலயும் அழிக்க ஏலாது. முள்ளிவாய்க்கால் படுகொலையச் செய்யும் பாத்தவதானே?   
 
யாழ்ப்பாணத் தம்பி 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.