Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட 9 பேர் நேற்றிரவு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்:

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்றிரவு (26) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக மிகவும் நம்பரமான தகவல்கள் குளோபல்தமிழ்ச்செய்திகளிற்கு தெரிவிக்கின்றன.

முன்னதாக மூவரே கைதுசெய்யப்பட்டிருந்ததாக மலேசிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்திருந்தன. எனினும், மொத்தமாக 9 பேர் கைதுசெய்யப்பட்டிருந்ததாகவும், இவர்கள் அனைவரும் தற்போது இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் மலேசிய மனித உரிமை அமைப்பொன்றின் பேச்சாளர் ஒருவர் குளோபல்தமிழ்ச்செய்திகளிற்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மலேசிய அதிகாரிகள், மூவரின் பெயர் விபரங்களை மட்டுமே வெளியிட்டிருந்ததாகவும், ஏனைவர்கள் 6 பேர் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மலேசிய அதிகாரிகளினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும், ஆரம்பத்தில் இலங்கை அதிகாரிகளே, மலேசிய பொலிஸ் நிலையத்தில் இவர்களிடம் விசாரணைகளை நடத்தியதாக கைதுசெய்யப்பட்டவர்களைச் சந்தித்த சட்டத்தரணியொருவர் குளோபல்தமிழ்ச்செய்திகளிற்கு தெரிவித்துள்ளார்.

பெயர், விபரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்பட்ட மூவரில் ஒருவர் ஐ.நா. அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்டவர் எனவும், மற்றையவர் அகதி அந்தஸ்திற்கு விண்ணப்பித்திருந்தவர் எனவும், மூன்றாவது நபர் மலேசியாவில் உரிய வீசா அனுமதியுடன் இருந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மலேசியாவில் இந்த விசேட தேடுதல் தொடரும் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  எவ்வாறாயினும், மலேசியாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அலுவலகத்தில் பதிவுசெய்துகொண்டு, அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்ட சுமார் 4,500 பேர் மலேசியாவில் தங்கியுள்ளனர்.

இதேவேளை, மலேசியாவில் மேலும் பல இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரம் தற்போது பெரும் அழுத்தத்தைத் தமக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் மலேசியாவிலுள்ள உள்ளுர் மனித உரிமை அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டவர்கள் ஐ.நா. அகதிகள் அந்தஸ்து அட்டையை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக மலேசிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து முழுமையாக ஆராயப்படும் என மலேசியாவிற்கான ஐ.நா. அகதிகள் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நிலைமை இவ்வாறிருக்க, அகதிகள் அந்தஸ்து அட்டை வழங்கப்பட்டவர்கள் குறித்து மீண்டும் விசாரணைகளை நடத்துவதற்கும் வழங்கப்பட்ட அந்தஸ்தை மீள்பரிசீலனை செய்வதற்கும் மலேசியாவிலுள்ள ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் தயாராகி வருவதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்களும் வெளியாகியுள்ளன.
 http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107475/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.