Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய நாட்டுப்படகுகளினால் மன்னார் மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதம்

Featured Replies

DSC01086(3).JPG
-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இந்திய மீன்பிடி நாட்டுப்படகுகளின் வருகை இலங்கை கடற்பரப்பில் அதிகரித்துள்ள அதேவேளை, மன்னார் மாவட்ட மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளையும் அப்படகுகள் சேதப்படுத்தியுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் நாட்டுப்படகுகள், தற்போது இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக தலைமன்னார், பேசாலை, வங்காலைப்பாடு, சிறுத்தோப்பு, காட்டாஸ்பத்திரி, சருசல் ஆகிய கிராமங்களுக்குட்பட்ட கடற்பரப்புக்களில் பல நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்களின் படகுகள், இரவு நேரங்களில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுகின்றன.

இதன்போது, குறித்த கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் போட்டுள்ள பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நண்டு மற்றும் கணவாய் பிடிக்கும் வலைகளை வெட்டி சேதப்படுத்திவிட்டுச் செல்வதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40இற்கும் மேற்பட்ட மீனவர்களின் வலைத்தொகுதிகள் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வலைத் தொகுதிகள் பல இலட்சம் ரூபாய் பெறுமதிவாய்ந்தவை எனவும் பேசாலை மீனவ சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்கள், தலைமன்னார் பொலிஸ் நிலையத்திலும் மன்னார் மாவட்ட கடற்தொழில் பணிமனையிலும் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார். 

தொடர்ந்தும், மன்னார் மாவட்ட மீனவர்கள் இந்திய மீனவர்களினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், தற்போது பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் கடன் அடிப்படையில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை கொள்வனவு செய்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற நிலையில் குறித்த வலைகளை இந்திய மீனவர்கள் தங்களின் நாட்டுப்படகுகளை வைத்து சேதப்படுத்துகின்றனர்.

இது தொடர்பாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவரும் வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பதில் தலைவருமான என்.எம்.ஆலத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது, 

தற்போது இந்திய நாட்டுப்படகுகளின் வருகை மன்னார் மாவட்ட கடற்பரப்பில் அதிகரித்துள்ளது. நாட்டுப்படகுகளின் வருகையால் மன்னார் மாவட்ட மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைத்தொகுதிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக நாம் அறிகின்றோம். 

குறிப்பாக பேசாலை மீனவர்களுடைய பல வலைத்தொகுதிகளை இந்திய நாட்டுப்படகுகள் சேதப்படுத்தியுள்ளதாக எங்களிடம் முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களை நாம் திறட்டி வருகின்றோம் என அவர் கூறினார். 
DSC01087(2).JPG

tamilmirror

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.